தலைப்பு-யாவும் நீ, தாயுமானவர் : thalaippu-yaavumnee-thayumanavar

யாவும் நீ!

கொழுந்து திகழ்வெண் பிறைச்சடிலக்

            கோவே மன்றில் கூத்தாடற்

கெழுந்த சுடரே இமையவரை

            என்தாய் கண்ணுக் கினியானே

தொழுந்தெய் வமும்நீ; குருவும்நீ;

            துணைநீ; தந்தை தாயும்நீ;

அழுந்தும் பவம்நீ; நன்மையும்நீ;

            ஆவி, யாக்கை நீதானே !

  தாயுமானவர்: சொல்லற்கரிய: 5