(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,21, பொதுவறு சிறப்பின் புகார்-தொடர்ச்சி)
என் தமிழ்ப்பணி
பொதுவறு சிறப்பின் - பிற்பகுதி
மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், ...