image-20040

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி  மொத்தப் பரிசு உருவா 1050.00 கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உருவா 300.00 இரண்டாம் பரிசு உருவா200.00 மூன்றாம் பரிசு உருவா150 ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள்: 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும் 3.பாடல்கள் ...
image-20063

கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்

கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ...
image-20092

சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!   இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப்  பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை.  தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து ...
image-20123

பிழைப்பு மொழிக்காய் உயிர்ப்பு மொழி துறப்பாயோ? – செந்தமிழினி பிரபாகரன்

உருச் சிதைந்த சிந்தனையில் தாய் மொழி தகர்த்து பிற மொழியால் முலாமிடும் செருக்கெடுத்த தருக்கருக்கு ஏதடா முகம்? முகமிழந்த முண்டங்கள் முகவரியும் தொலைத்த பின்னால் எதற்கடா வாழ்வு? ஏதடா வனப்பு? பிறப்பதில் பெறுவதல்ல இன அடையாளம்! பேறாய் பெற்ற தாய் மொழியே எம் முக அடையாளம்! மூத்த மொழி சரிந்து போக சொத்தை தமிழனாய் பார்த்திருப்பாயோ? தமிழன்னைக்கோர் துயர் என்றால் உனக்கென்று நினையாயோ? நேற்று வந்த மொழியெல்லாம் சேற்று வெள்ளமாய் அள்ளி செல்ல காற்றடித்தால் தொலைந்து போகும் துரும்போடா தமிழா நீ? பண்டைத் தமிழர் காத்த மொழி! பண்பாட்டை வகுத்த மொழி! அன்பை சொன்ன மொழி அறிவை தந்த அருந் தமிழ் மொழி தென் கிழக்காசிய தேசங்கள் பல வாழ்ந்து ஆழக் கடல் தாண்டி ஆண்ட தமிழினம் நாதியற்று போனதடா நாடுகள் தமை இழந்து! அண்டை மாந்தர் உயர் தமிழை போற்றி வரலாறுகள் தந்த பின்னும் .. மரபில் உரிமை காத்து தமிழர் நாம் என்றே தலை நிமிர மாட்டாயா? தமிழுக்காய் தலை கொடு ...
image-20028

ஊர்ச்சந்தை, சென்னை

தை 24, 2047 / பிப்.07, 2016 காலை 09.00 சென்னை மல்லர் கம்பம் எனும் மரபு வீர விளையாட்டு காண வாரீர்! சென்னையில் ஊர்ச் சந்தை - 2! செம்மையின் ஊர்ச் சந்தை மீண்டும் சென்னையில் நிகழவுள்ளது. முதல் சந்தை கடந்த சனவரி 3 ஆம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சந்தை பிப்பிரவரி 7 ஆம் நாள் கூடுகிறது. இந்த ...
image-20012

மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்

மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்!  வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் ...
image-18904

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 18 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 17 தொடர்ச்சி) அன்றுதொட் டனைவரும் ஆங்கே குழுமிப் பொன்னுல கினராய் மன்னிவாழ் நாளில் இன்னிசை யூட்டும் யாழினைத் தாங்கி மங்கை யொருத்தி வாயிலில் நின்றாள் யாழிடைப் பிறவா இசையே என்று யாவரும் வியந்திட யாழ்த்திறன் உணர்ந்த அரசி அயர்ந்தனள் அனைவரும் வியந்தனர் காதல னுக்கவள் சாவில் கற்பித்த இன்னிசைத் திறனே அவளும் மிழற்ற அரசி அவளை அடைந்து நோக்கலும் கண்ணொடு கண்கள் நோக்கின காதலர் இருவரும் தம்மை ...
image-20007

வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை – சொ.வினைதீர்த்தான்

வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை   வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு:   காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற ...
image-20005

பல்வரி நறைக்காய் – உருத்ரா இ.பரமசிவன்

பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே!   பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம் மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல் களித்து ஆர்த்த கழிநெடு கங்குல் மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை. என்னென் கழறும் என்னறியும் தடம் கொல். இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் வெம்புலியன்ன ஊண் மறுக்கும் கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும் எனவாங்கு தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌ நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ. நன்மா தொன்மா நனிமா இலங்கை நல்லியக்கோடன் யாழிய இசையின் நலம் ...
image-20003

வானளந்த புகழ் உடையாய் ! – ஐ.உலகநாதன்

வானளந்த புகழ் உடையாய்! வசையுரைத்த பழிவடக்கர்             வாயடக்கி நெரித்தவள் நீ திசைவென்ற மன்னவர்தம்             செங்கோலில் சிரித்தவள்நீ இசைநின்ற கல்லிலெல்லாம்             இன்பவலை விரித்தவள்நீ விசும்பிடையே நீலஉடை             விரும்பித் தரித்தவள் நீ பாரதத்தாய் மார்பகத்தில்             பாலாகாச் சுரப்பவள்நீ பணிந்தாரைப் பரிந்தணைக்கும்             பண்பாட்டில் இருப்பவள்நீ சீரறிந்த திருக்குறளில்             வேரறிந்து நிற்பவள் நீ தித்திக்கும் புத்தமுதாய்             எத்திக்கும் சிறப்பவள் நீ நீரறிந்த மிச்சத்தை             நெருப்பறிந்த எச்சத்தை நானறியத் தந்தவள்நீ             நாடறிய வந்தவள்நீ தேனளந்த கருப்பொருளே             செய்யுளிலே எனை ...