திருக்குறளில் உருவகம் – 1

 -ஆங்கிலப் பேராசிரியர் வீ.ஒப்பிலி  தலைப்புக் குறிப்பு.   உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம். ஆயினும் இக்கட்டுரை முழுவதிலும் இச்சொல் Image என்ற சொல்லிற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக் ‘‘காட்சி’’யென்று சொல்லலாம். ஆனால் ‘காட்சி’ யென்றசொல் அகத்தே தோன்றும் உணர்ச்சிக்கு உருக்கொடுக்கும் ஆற்றலை மட்டுமின்றிக் காணப்படும் பொருள் யாவிற்கும் பொதுவான சொல்லாக இருப்பதால், அதை நீக்கி ‘உருவகம்’ என்ற சொல்லையே Image என்பதன் மொழி பெயர்ப்பாகப் பயன்படுத்தியுள்ளேன். முன்னுரை   திருவள்ளுவர் இயற்றிய குறள்…

தமிழே! – கவிஞர் தே.ப.பெருமாள்

நிறைவினில் மலர்ந்தொளிரும் தமிழே – என் நெஞ்சத்தில் அமுதாகும் தமிழே! உறவினில் உயிரான தமிழே –  என் உணர்வினில் கவிபேசும் தமிழே! ஒழுக்கத்தின் மணம்வீசும் தமிழே –  வீர உருவத்தில் கூத்தாடும் தமிழே! விழுப்பத்தின் நலமுரைக்கும் தமிழே –  நீதி மேவியே கோலோச்சும் தமிழே! நிலவின் குளிர்பெற்ற தமிழே –  கதிர் நிரப்பும் ஒளிபெற்ற தமிழே! மலரின் மெதுவேற்ற தமிழே –  தேன் வழங்கும் சுவை கொண்ட தமிழே! மின்னின் விசைகொண்ட தமிழே –  கடல் விரிக்கும் திரைமுழக்கத் தமிழே! கன்னி நிறைபொலியுந் தமிழே…

வாழ்வு நெறி – முனைவர் வ.சு.ப.மாணிக்கம்.

1. பலருக்குக் ஆராய நூல் வேண்டும், சொற்பொழிவாற்றக் கருத்து வேண்டும் என்பதற்காகத் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றவில்லை. எல்லாரும் வாழ வேண்டும்; எப்படி வாழ்விப்பது என்ற தலையாய நோக்கமே திருக்குறட் பிறப்பிற்குக் காரணம். இந்நோக்கம் எல்லாக் குறள்களிலும் வெளிப்படக் காணலாம். மிகக் கீழானோர்க்கும் உயர்வுண்டு; இயல்பாகவுள்ளவர்க்கும் மேலுயர்வு உண்டு; மிகவுயர்ந்தார்க்கும் மேன்மேலுயுர்ச்சியுண்டு என்ற நம்பிக்கையைத் திருக்குறள் நமக்கு ஊட்டுகின்றது.   தாழ்ந்தாரைப் பார்த்துச் சோர்வடைய வேண்டா எனவும், உயர்ந்தாரைப் பார்த்து அமைதியடைய வேண்டா எனவும் ஊக்கமும் ஆக்கமும் தருவது திருக்குறள். எல்லார்க்கும் பொதுவான அறங்களைக் கூறுவது…

நீலவானத்தில்…. – கோ.மோ.காந்தி, கலை.மு.,

    என் வாழ்வின் நிலை என்னைக் கலங்க வைத்தது. அதற்காக நானே இரங்கினேன்.   திருமணமாகி எட்டு மாதங்கள் தாம் ஆகின்றன…. ஆனால் அதற்குள்… எவ்வளவு மாறுதல்கள்…! என் நிலையே மாறிவிட்டதுபோல் தோன்றுகின்றதே! எப்படி வளர்ந்தேன்… ஆனால் இப்போது..?? எவ்வளவு மாறிவிட்டேன். என் உள்ளமே அடியோடு மாறிவிட்டதா…?? எத்தனை மாறுதல்கள்!! இப்படி மாறிவிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லையே.   எல்லாம் கனவு மாதிரித்தான் தோன்றுகிறது ஆம்…! தன் சட்டையைக் கழற்றும் பாம்பு மாதிரி நானும் என் உள்ளத்தின் நிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும்…

இவர்கள் எந்த இனம்? – திருக்குறளார் வீ.முனுசாமி

 வாழ்க்கையில் நண்பர்கள் – பகைவர்கள் என்று இரு பிரிவுகளைக் காணுகின்றோம். பகைவர்களைக் காணுகின்றபோது, கண்டுகொள்ளமுடியாத கொடியவர்கள், பகைவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் கண்டுகொள்ளவும் முடிவதில்லை; புரிந்துகொள்ளவும் முடிவதில்லை; தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஏன்? இவர்கள் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள்! இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களெல்லாம் தனிப்பட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர்கள்! நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; இது திருவள்ளுவரின் வாக்கு; விளக்கம்.   இந்த இனத்தினர் யாருடன் பழகுகின்றனரோ அவருக்கு முடிவான தீங்கினை உண்டாக்குவதற்கே பழகுகின்றனர்; அப்படிப்பட்ட தீங்கினைச் செய்கின்ற…

பட்டம் உறுதியாயிற்று -முனைவர் கண சிற்சபேசன்

      அப்பகுதி மக்கள் அவனைப் பொதுவாகப் பைத்தியம் என அழைப்பார்கள். கல்வியறிவுடையோர் சிலர் விஞ்ஞானி என்பார்கள். அறிவோர் சிலர் ‘‘அவன் தான் சிறந்த மனிதன்; தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவன்’’ என்பார்கள். ‘‘உள்ளே உள்ளதை மறைக்க நடிக்கும் இவன் காரியக் கிறுக்கு’’ என்பார்கள். கற்றறிந்த சில இளைஞர்கள், இவை எல்லாம் அவனுக்குத் தெரியும். ஆனால் இதைப்பற்றி, அவன் கவலைப்படுவதுமில்லை. அவர்களைத் திருத்த முனைவதுமில்லை. தனியே வாழும் அவனது அறையில் காலை 6 மணிக்குத் தட்டுப் பொறி இயங்கத் தொடங்கும். ஒரு…

ஔவை உரைவேந்தரானது எப்பொழுது?

    செஞ்சொல் வீரர் ஔவை சு.துரைசாமி  அவர்களை உரைவேந்தர் எனக் குறிப்பிடுகின்றோம். இவரது உரைத்திறன்சிறப்பை அறிந்து எப்பொழுது யாரால், எவ்வமைப்பால் உரைவேந்தர் பட்டம் வழங்கப் பெற்றது என்பதை அறிவீர்களா?   உரைவேந்தரைச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் பாராட்டி மகிழும் பின் வரும் குறள்நெறிச் செய்தியைப் படியுங்கள். புரியும். உரைவேந்தர் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் தைத்திங்கள் மூன்றாம் நாள் (16-01-64) சிறப்பாகக் கொண்டாடியது. ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் தலைமையில் தமிழவேள் பொ.தி. இராசர்…

வள்ளுவரும் அரசியலும் – முனைவர் பா.நடராசன்

  வாழ்வின் குறிக்கோள் இன்பம். இன்பம் பொருளால் வருவது. பொருள் அறத்தால் வருவது. அறமே முதற் காரணம். இன்பமே இறுதி விளைவு. இங்ஙனமாக அறம், பொருள் இன்பம் என மூன்றும் சங்கிலித் தொடராக – காரண காரியங்களாக அமைகின்றன.   இம்மூன்றனுள் பொருள் நடுவணதாக அமைந்துள்ளது. பொருள் உண்டாவதற்கும் சிறப்பதற்கும் அறமே அடிப்படைக் காரணமாயினும், அரசியல் இன்றியமையாத அடுத்த காரணமாகும்; துணைக் காரணமாகும். நல்ல அரசாட்சியுண்டேல் நல்ல பொருளாதாரமும் உண்டு. அரசாட்சியின் குறிக்கோள் மக்கள் பொருள் நலம் சிறப்பதேயாகும்.   ஏனெனில் ஆட்சியே பொருளை…

இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா

சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு. இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும். சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு  வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு. 1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய…

இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

  வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா? விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…

இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர். இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா? வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம்,…