கவிஞாயிறு தாராபாரதி 15 & 16 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 15 & 16   பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை! ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை, இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை! பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப் பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை! செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15) வேருக்கு நீருழவன் விடுவ தாலே விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்! பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும் பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து…

கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று! கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்! மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம் மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில் பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்! பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13) தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்? பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை! பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை…

கவிஞாயிறு தாராபாரதி 11 & 12 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 11 & 12   மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும் மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு! திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும் திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ! உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று! திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு! தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11) பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப் படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள் அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்!…

கவிஞாயிறு தாராபாரதி 9 & 10 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 7  & 8 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 9  & 10 பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின் பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி! கையிரண்டு போதாது கயமைக் கென்றே கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்! மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்! செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச் சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9) வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு, விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்! நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்! நோகாமல் இலக்கடையும் நுட்பம்…

கவிஞாயிறு தாராபாரதி 7 & 8 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 7 & 8   சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச் சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்? போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு! தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி! தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7) மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும் மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே? எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்! இதைத்தானா சுதந்திரத்தின்…

கவிஞாயிறு தாராபாரதி 5 & 6 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – தொடர்ச்சி)   கவிஞாயிறு தாராபாரதி 5 & 6  அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில் ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி! புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும் புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்! சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின் தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர் நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய் நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5) சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்! தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத் தமதாக்கி முன்னிலையில்…

கவிஞாயிறு தாராபாரதி 3 & 4 – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 –  தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 3 & 4  பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப் பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம் சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல் தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத் தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர் சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில் நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3) துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி, செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்! கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக் கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்;…

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 – சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி 1 & 2 அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர் அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ? குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ! கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா! திவலை க்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத் திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா! இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்! இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1) காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும் கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத் தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத் தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று மேனிலையை…

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர் பாடலர் பாபு தைலன் -சந்தர் சுப்பிரமணியன்

நோபல் பரிசாளர் பன்முகக்கலைஞர்  பாடலர் பாபு தைலன் (Bob Dylan)   வழக்கம்போல் 2016-ஆம் ஆண்டுக்கான நோபல்பரிசு குறித்த செய்திகள் வரத்தொடங்கிய கடந்த ஒரு மாதக்காலத்தில், பரிசாளர்கள் பட்டியல் குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் உலவத் தொடங்கின. நோபல் பரிசுகளில் மிக முதன்மையான பரிசான இலக்கியப்பரிசு இந்த ஆண்டு யாருக்கு என்று அதனதன் நோக்கில் அலச ஆரம்பித்தது ஊடகம். அக்டோபர் 6 ஆம்  நாள், ‘நியூ (இ)ரிபப்ளிக்கு / new republic‘ என்னும் நாளிதழ், இலக்கியப்பரிசு குறித்த ஒரு கட்டுரையில் “பாபு தைலனுக்கு விருதா?…

தமிழின் இன்றைய நிலை – சந்தர் சுப்பிரமணியன்

தமிழின் இன்றைய நிலை   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனித்துவமான சொல்வளத்தையும், அறிவியற்கோட்பாட்டின்படி அமைந்த இலக்கணத்தையும் பெற்று, இந்நாள் வரையில், அதன் இளமை மாறாது, வளர்ந்துவரும் தமிழ்மொழி, உலகின் உன்னத மொழிகளாய் அமைந்த ஒருசில மொழிகளுள் ஒன்று. வெறும் இலக்கியமொழியாக மட்டுமே அமைந்துவிடாது, இன்றுமட்டும், வாழும் மொழியாகிய அமைந்த தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் பேசப்பட்டு, அதன் மூலம், பல்வேறு வகையான பேச்சுவழக்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அத்தகு தமிழின் இன்றையநிலையை ஆறு கூறுகளாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.   வளர்ந்தோங்கும் இம்மொழியின் சிறப்புகளை மட்டுமே…

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர்

(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?  உங்கள் படைப்புகளுக்காக உலக அளவில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். அதுகுறித்த  உங்கள் கருத்து? இலண்டன் தமிழ் வானொலி, ஆத்திரேலிய தமிழ் வானொலி,  குளோபல் தமிழ்த் தொலைக்காட்சி மையம், இலங்கை தீபம் தொலைக் காட்சி போன்ற ஊடகத்தினர் எனது படைப்புகள் குறித்து  அறிமுகம் தந்தும் விருதுகள்பற்றிப் பேசியும் நேர்க்காணல்  கண்டும்…

பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்

(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3   – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி  கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?   இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை  ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால்  அணைத்துக்கொள்ளவும் எனது…