ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1411 – 1423 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1401 – 1410 இன் தொடர்ச்சி) 1411. மதலையியல் neonātus என்னும் இலத்தீன் சொல் பச்சிளங்குழந்தையைக் குறிக்கிறது. அண்மையில் பிறந்த மழலையரைக் குறிக்கும் மதலை என்னும் சொல்லைக் கையாண்டுள்ளோம். Neonatology 1412. மதிப்புச்செய்திறனியல் மதிப்பு மேலாண்மைக்கு ஒத்ததாக இது கருதப்படுகிறது. செயல்பாட்டை மேம்படுத்து வதன் மூலம் செலவையும் குறைத்து மதிப்பை உருவாக்குவது குறித்த செய்திறன்துறை. எனவே, இதனை மதிப்புப் பொறியியல் என்று சொல்வதைவிட, மதிப்புச் செய்திறனியல் எனலாம். Value Engineering 1413. மதுக்காய்ச்சியல் brew  என்னும் கிரேக்கச் சொல்லின்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1401  – 1410  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1391  – 1400 இன் தொடர்ச்சி) 1401. மண் ஆய்வியல்  pedo-என்னும் பழங்கிரேக்க முன்னொட்டுச் சொல் மண் தொடர்பான என்பதைக் குறிக்கிறது. (உயிரெழுத்திற்கு முன் ஓ/O வராது.) Pedogenics 1402. மண்உயிரியல் Soil biology 1403. மண்டலப் புவியியல்            Regional Geology 1404. மண்டலப் பொருளியல் Regional Economics 1405. மண்டையோட்டியல் cranium என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் மண்டையோடு. Craniology / Fronology 1406. மண்ணியல் Agrology  என்பதையும் மண்ணியல் என்கின்றனர். ஆனால், அதை மண்ணியலின் ஒரு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி தற்செயலாகச் சந்திக்கும் போதும் உரையாடும் போதும் கூட தமிழில் இப்படி எத்தனையோ நுணுக்கமான செய்திகளை அரவிந்தனுக்குச் சொல்லியிருந்தாள் பூரணி. அவள் தன் அன்பை மட்டும் அவனுக்குத் தந்துகொண்டிருக்கவில்லை. அன்போடு சேர்த்துத் ‘தமிழ்’ என்னும் அளப்பரிய செல்வத்தையும் கலந்து தந்துகொண்டிருந்தாள். பூரணியோடு அவன் பழகுவதில் மூன்றுவித நிலைகள் இருந்தன. அவள் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பெண். அவள் தந்தையின் நூல்களை அவளிடமிருந்து வாங்கி வெளியிடுகிற முறையில் ஓர் உறவு. அந்த உறவுதான் மற்ற…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1391-1400 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1381  – 1390  இன் தொடர்ச்சி) 1391  பூந்தாதியல் – palynō / palúnō என்னும் பழங்கிரேக்கச் சொற்களின் பொருள்கள் தூவு/தெளி. இச்சொல் நுண்பொடி/ துகள்/ தூசி என்னும் பொருள் கொண்ட pálē என்னும் சொல்லில் இருந்து உருவானது. Palynology  என்பதன் நேர் பொருள் தூளியல்/ துகளியல்(study of dust – இங்கே dust என்றால் தூசி எனக் கருதாமல் தூள்/துகள் எனக் கருத வேண்டும்).  இந்த இடத்தில் துகள் என்றால் பூந்துகள்தான். மகரந்தம் எனப்படும் இதனைப் பூந்தாது…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70

(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.   பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1381  – 1390  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1367  – 1380 இன் தொடர்ச்சி) 1381. பொறிசார் பூச்சியியல் Entomechology 1382. பொறியியப் புவியியல் Engineering geology 1383. பொறியியல் Engineering 1384. போக்குவரத்துப் பொறியியல் ஊர்தி நடமாட்டப் பொறி யியல், போக்குவரத்துப் பொறி யியல் என இருவகையாகக் குறிக்கின்றனர். போக்குவரத்துப் பொறியியல் என்பதைத் தரப் படுத்திக் கொள்ளலாம். Transportation engineering/Traffic Engineering/ Transport Engineering 1385. போசர் ஐன்சுதீன் புள்ளியியல் Bose Einstein Statistics 1386. போட்டியியல் Agonistics  1387. போரியல் pólemos என்னும் பழங்கிரேக்கச்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 66

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 65. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 26 தொடர்ச்சி ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது உரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். “அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே” என்று கடிந்தாள். “நண்பருக்கு ஒரு…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1367  – 1380  : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1356 – 1366 இன் தொடர்ச்சி) 1367. பொதுமைக் கருத்தியல் Communist Ideology 1368. பொம்மையியல் Plangonology   1369. பொருத்தப்பாட்டு உளவியல் கருத்திய உளவியல் எனக் குறிக்கின்றனர். காரண காரியம் பொருந்தி வரும் உளவியல் என்றுதான் பொருள். எனவே, பொருத்தப்பாட்டு உளவியல் எனக் குறித் துள்ளோம். Rational Psychology 1370. பொருளாதாரக் குமுகவியல் (மெய்யியல்துறை) Economic Sociology 1371. பொருளாய்வியல் Semiology2 / Semiotics2 1372. பொருளியப் புள்ளியியல் Economic statistics 1373. பொருளியல் Economics 1374….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1356 – 1366 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1341 – 1355 இன் தொடர்ச்சி) 1356. பேருருவியல்  மடங்களின் பிறழ்வாய் வியல், பிறழ்வியல், விந்தை உயிரிக் கதைகள், விந்தை உரு பிறப்பியல், மாற்றுருவியல், பேருரு அறிவியல், சீர்கேட்டியல், தாவரவிரூபவியல், பூதப்பிறவி யியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் விரூபவியல் என்பது தமிழல்ல. அச்சப்பேருரு / கோர உரு என்னும் பொருள் கொண்டது. விந்தை உயிரிக் கதைகள் என்பது அறிவியலல்ல. இந்த இயல் தொடர்பான கட்டுக்கதைகள். கோர உரு என்னும் பொருள் கொண்ட téras என்னும் கிரேக்கச்சொல்லில் இருந்து …

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  39

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  38 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்15 “மங்கைய ராகப் பிறப்பதற்கே – நல்லமாதவம் செய்திடல் வேண்டும் அம்மாபங்கயக் கைநலம் பார்த்தலவோ – இந்தப்பாரில் அறங்கள் வளரும், அம்மா!”      — கவிமணி பூரணி கொண்டு வந்த தந்தியை முருகானந்தம் படித்தான். தன்னிடமிருந்த புகைப்படங்களையும் வசந்தா கைப்பட எழுதிய கடிதத்தையும் காட்டி அவளுக்கு விளக்கிச் சொன்னான். “திரைப்படத்தில் கதாநாயகியாய் நடிக்க வாய்ப்பு உண்டாக்கித் தருவதாக இப்படி எத்தனை பேரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறானோ அந்த ஆள்? அவனுடைய போதாத வேளை; இங்கே…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1341 – 1355 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1330 – 1340 இன் தொடர்ச்சி) 1341. பெரும்பாய்வியல் Macrorheology 1342. பெரு வாழ்வியல் Macrobiotics 1343. பெருங்கழுத்திஇயல் Nessology 1344. பெருமூளையியல் Cerebrology 1345. பெரும்பரப்புப் புவியியல் Areal Geology 1346. பேச்சிழப்பியல்       aphasie என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் பேச்சற்ற. Aphasiology 1347. பேச்சுக்குறையியல் laleein என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பேச்சு. ஆதலின் பேச்சு நோயியல் என்கின்றனர். இத்துறை பேச்சுக் கோளாறுகளையும் குறை பாடுகளையும் ஆராயும் மருத்துவத்துறை. எனவே,  பேச்சுக்குறைஇயல்>பேச்சுக் குறையியல்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65

(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   மருதம் தொடர்ச்சி   மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப்…