தமிழ்நாடும் மொழியும் 3 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 2 தொடர்ச்சி) 2. தமிழகம் முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம். எல்லை தொல்காப்பியம் முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன. தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. சியார்சு எலியட்டு என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக…

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் –  3/3

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3 தொடர்ச்சி) “மகராசி என்னும் வள்ளி யம்மையைநன்மனை அறங்களை நன்கு வளர்த்திடமுன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்……………………………………………………………….எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமேகனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்என்னை நட்டோர் யாவரும் தன்னுடைஉயிரெனக் கருதி ஊழியம் புரிந்தசெயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.” இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம். 3. உரையாசிரியப் பணி நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார்….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி   இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும்.   இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும்…

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல்‌ என்பது ஓர்‌ ஊரின்‌ பெயர்‌. தேவாரம்‌ பாடிய மூவருள்‌ ஒருவராகிய சுந்தரர்‌ அவ்வூரிலே பிறந்தருளினார்‌. ‘அருமறை நாவல்‌ ஆதி சைவன்‌ என்று பெரிய புராணம்‌ கூறுமாற்றால்‌ அவர்‌ பிறந்த ஊரும்‌ குலமும்‌ விளங்கும்‌. அந்நாவல்‌, சுந்தரர்‌ தோன்றிய பெருமையால்‌ திருநாவல்‌ ஆயிற்று. ஈசனால்‌ ஆட்‌ கொள்ளப்பெற்ற சுந்தரர்‌ அவரடியவராகவும்‌, தோழராகவும்‌ சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார்‌ அவர்‌ பிறந்த ஊரைத்‌ திருநாவல்‌ நல்லூர்‌ என்று…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  68

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 67 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 24 தொடர்ச்சி “சினிமாவில் நடிக்கிற பித்து அந்த ஏமாத்துக்கார மனிதனோடு புறப்பட்டுப் போகச் செய்து விட்டது. அவ்வளவு தானே தவிர, உங்கள் பெண்மேல் வேறு அப்பழுக்குச் சொல்ல முடியாதே. மதுரையிலிருந்து திருச்சி வரையில் ஓர் ஆண் பிள்ளையோடு இரயிலில் பயணம் செய்தது மன்னிக்க முடியாததொரு குற்றமா அம்மா?” “அதை நினைத்தால்தானே வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஒன்றுமில்லாததை எப்படி எப்படியோ திரித்துப் பெண்ணுக்கு மணமாகாமல் செய்துவிடப் பார்க்கிறார்களே. நான் ஒருத்தி தனியாக எப்படி இந்தச் சமூகத்தின்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடைநாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக்கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களைஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக்கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவைஉண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத்தெண்ணிய படியரங் கேற்றி னானரோ.

உ.வே.சா.வின் என் சரித்திரம் 4

(உ.வே.சா.வின் என் சரித்திரம், எங்கள் ஊர் 3 இன் தொடர்ச்சி) அத்தியாயம்-2என் முன்னோர்கள் ‘பதினாயிரம் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்ய எண்ணியிருக்கிறேன்; அதற்கு மகாராசா உதவி செய்ய வேண்டும்’ என்று ஒருவர் ஓர் அரசரை வேண்டிக் கொண்டாராம். அந்த அரசர் அதற்காக நிறையப் பொருளுதவி செய்தார். அந்தத் தொகையைப் பெற்று அவர் தம் வீட்டில் இரண்டே அந்தணர்களை அழைத்து அவர்கள் திருப்தி யடையும்படி போசனம் செய்வித்து மிகுதியான தட்சிணையும் கொடுத்து அனுப்பினார். அயல் வீட்டிலுள்ள ஒருவர் அவருடைய விசயங்களை நன்கு அறிந்து கொண்டவராதலின் அவரை, “பதினாயிரம்…

தமிழ்நாடும் மொழியும் 2 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 1 தொடர்ச்சி) 1. தமிழ் நாடு 1. தமிழ் நாட்டு வரலாற்றுக் கண்ணாடி தொடர்ச்சி வரலாற்றுப் பகுதிகள் ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402

(தமிழ்ச்சொல்லாக்கம்: 384-395  தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402  (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 396. வித்தியாரம்பம் செய்தல் – பள்ளிக்கூடத்தில் வைத்தல் கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விசயதசமியன்று அவர்களைப்…

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 2/3

(செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 1/3 தொடர்ச்சி) 1. மொழிபெயர்ப்புப் பணி சேம்சு ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு : “இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 384-395

(தமிழ்ச்சொல்லாக்கம்: 371-383 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 384-395 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 384. ஈமம்       —        சுடுகாடு 385. சந்தோசம்          —        உவப்பு 386. குங்குமம் —        செந்தூள் 387. கிருபை   —        தண்ணளி 388….

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2  மொழிகளும் மொழிக்குடும்பங்களும்

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி) 2.  மொழிகளும் மொழிக்குடும்பங்களும்   உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ  ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும்.  இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன;  இன்றும் உயிருடன் வாழ்கின்றன.             1.செருமன்…