தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் கி. பி. 1500-இல் அருணகிரி நாதர் தோன்றினர். திருப் புகழ் என்னும் இசைத்தமிழ் மழை தமிழகத்திலே பொழிந்தது; இடைவிடாது பொழிந்தது. இவருக்குப் பின்னர் வந்தவர்கள் தமிழிசையைத் தனிப்பட்ட முறையிலே வளர்க்கவில்லை. பிற மொழி இசையோடு கலந்தே வளர்த்தனர். தமிழிசையும் ஆரிய இசையும் கலந்து கருனாடக இசை பிறந்தது. ஆரிய மொழிக்கெனத் தனி இசை இல்லை. வட நாட்டுத் திராவிட மொழிகட்கு உள்ள இசையிலே ஆரிய மொழியின் செல்வாக்குச் சிறிது ஏற்பட்ட இசையே…

புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 3

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 2 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவிகளம் : 5 காட்சி : 3அரசவை. அரசன், அமைச்சர் முதலியோர்.உதாரன் வீரர் சூழ நிறுத்தப்பட்டிருக்கிறான்.சிந்து கண்ணி அரசன் : கொற்றவன் பெற்ற குலக்கொடியை – கவிகற்க உன்பால் விடுதேன் – அடக்குற்றம் புரிந்தனையா இல்லையா இதைமட்டும் உரைத்துவிடுவெற்றி எட்டுத்திக்கும் முற்றிலுஞ் சென்றுமேவிட ஆள்பவன் நான் – அடஇற்றைக்கு நின்தலை அற்றது -மற்றென்னைஎன்னென்றுதான் நினைத்தாய் உதாரன் : மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் – முகில்வார்க்கும் மழை நாடா…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703

(தமிழ்ச்சொல்லாக்கம் 688-698  தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 699-703 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 699. Artesian Well – தானாகவே தண்ணீர் வெளியேறும் கிணறு மகாமக வருடத்தில் நகரபரிபாலன சபையர் தண்ணிறைத்துச் சேறள்ளி மணலிட்டு வருகின்றனர். இவ்வருடம் ஒரு தீர்த்தத்தில் தானாகவே தண்ணீர் வெளியாகும் கிணறு (Artesian Well) உண்டாக்க முயன்றதில் பயன்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 35: விவாகமுயற்சி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 34 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 20 விவாகமுயற்சி வெண்மணியில் இராமாயணப் பிரசங்கம் நிறைவேறியவுடன் நாங்கள் மீண்டும் குன்னத்திற்கே வந்து சேர்ந்தோம். எங்களுக்குத் தலைமையான பற்றுக்கோடாக அந்த ஊர் இருந்தது. கணக்குப் பிள்ளை சிதம்பரம் பிள்ளையும் அவருடைய அன்பர்களும் குன்னத்தில் எங்களுக்கிருந்த பற்றைத் தங்கள் ஆதரவினால் பின்னும் உறுதி பெறும்படி செய்து வந்தனர். சிதம்பரம் பிள்ளையினிடம் பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைத் தனியே ஓர் அறையில் தொகுத்து வைத்துக் கருத்துடன் அவர் பாதுகாத்து வந்தார். அச்சுவடிகளிற் சிலவற்றை நான் சில சமயங்களிற்…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33. சான்றோரும் ஊர்ப்பெயரும்

  ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 தொடர்ச்சி)                சான்றோரும் ஊர்ப்பெயரும்       தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன. நாவீறுடையார்       நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 37 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு  மொழி சொற்களால் ஆயது. மொழிக்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.        ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி        இரண்டிறந்து இசைக்கும்  தொடர்மொழி யுளப்பட        மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே        (தொல்காப்பியம், மொழி-12) என மொழி தோன்றியுள்ள நெறியே சொற்களால்தான் என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஆராய்ச்சி பொருந்தக் கூறியுள்ளார். மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைக் கொண்டே மொழிகளை வகைப்படுத்தியுள்ள முறைமையும்…

தமிழ்நாடும் மொழியும் 37: முத்தமிழ் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும் மொழியும் 36: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 3. முத்தமிழ் “சங்கத் தமிழ் மூன்றுந் தா” “முத்தமிழும் நான்மறையும் ஆனாய் கண்டாய்” என்பன ஆன்றோர் வாக்கு. தமிழ் மொழிக்குள்ள சிறப்புகளுள் ஒன்று இம் முத்தமிழ்ப் பாகுபாடாகும். இதனால் வேறு மொழிகளிலே இந்த மூவகைக் கூறுகள் இல்லை என்பதன்று பொருள். ஆனால் முதன் முதலில் தம் மொழியிலே இப்பிரிவு ஒன்று உள்ளது என்று உணர்ந்தவர் தமிழ் மக்களே. அந்த உணர்ச்சியிலேதான் தமிழ் மக்களின் சிறப்பும் சீரும் பொதிந்து கிடக்கின்றன. இனி இக்கூறுகளைப் பற்றிப் பார்ப்போம். முத்தமிழ்…

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2

(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5   காட்சி : 1 தொடர்ச்சி) புதிய புரட்சிக்கவி:  களம் : 5  காட்சி : 2 மோனைப்புலவன் – அல்லி அகவல் அல்லி : ஏனையா புலவரே என்ன வியப்பிது   கன்னிநான் வருதலைக் கண்ணாற் கண்டும்   புன்னை நிழலில் பொருள்தே டுகின்றாய்   தின்னுங் கருவாடு திகட்டுமோ பூனைக்கு   கன்னியென் பார்வை கசந்ததோ நினக்கு           மோனை : அய்யகோ அத்தை மகளே அல்லியே…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5   – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 4/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 5/5 நடை நலம்1. சேதுப்பிள்ளை அவர்களின் நடை கலைபயில் தெளிவும். கட்டுரை வன்மையும் கொண்டது. 2. செய்யுளின் இனிமை கொண்ட செந்தமிழ் நடை. இதனை நாவலர் சோமசுந்தர பாரதியார் ‘செய்யுளோசை ஒழுகுகின்ற அவரது தெள்ளிய தமிழ் நடை’ என்று போற்றுகின்றார். 3. இவர்தம் உரைநடையில் மேடைப் பேச்சின் எதிரொலியை ஆங்காங்கே காணலாம். 4. இரா. பி. சேதுப்பிள்ளையின் பேச்சு நடையும்.கட்டுரை நடையும் ஏறக்குறைய திரு. வி. க. அவர்களின் பேச்சு நடையையும் எழுத்து நடையையும்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 695-698

(தமிழ்ச்சொல்லாக்கம் 688-694  தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 695-698 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச்சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 695. அப்பாசாமி – அண்ணல் தங்கோ (1932) 692. நவம்              –              புதுமை 693. சின்மயம்      –              ஞானவடிவு 694. பூரணம்         –              நிறைவு 695. பஞ்சவர்ணம்              –              ஐந்நிறம் 696. மங்கல சூத்திரம்         –              தாலிக்கயிறு 697.மாணிக்கம்    –             …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 34

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 33 தொடர்ச்சி) அத்தியாயம் 19: தருமவானும் உலோபியும்: தொடர்ச்சி அது வரையில் அவர் என்னைப் பிரிந்து இருந்ததேயில்லை. அப்போது எனக்குப் பிராயம் பன்னிரண்டுக்கு மேலிருக்கும். நான் அறிவு வந்த பிள்ளையாக மற்றவர்களுக்குத் தோற்றினும், என் அன்னையாருக்கு மட்டும் நான் இளங்குழந்தையாகவே இருந்தேன். தம் கையாலேயே எனக்கு எண்ணெய் தேய்த்து எனக்கு வேண்டிய உணவளித்து வளர்த்து வந்தார். தமது வாழ்க்கை முழுவதும் என்னைப் பாதுகாப்பதற்கும் என் அபிவிருத்தியைக் கண்டு மகிழ்வதற்குமே அமைந்ததாக அவர் எண்ணியிருந்தார். தாயின் அன்பு எவ்வளவு தூய்மையானது! தன்னலமென்பது…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32- மகமதியரும் கிருத்துவரும்

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31. தொடர்ச்சி)                    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 32 மகமதியரும் கிருத்துவரும் வாலாசா     தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாசா என்னும் பெயரும் உண்டு. அப் பெயர் ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாசாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந் நகரம்…