ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1557-1566: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1551- 1556 இன் தொடர்ச்சி) 1557. முதுஉப்பல் அண்டவியல் Old Inflationary Cosmology 1558. முதுமை மருத்துவம் gêras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதுமை. Geriatric Medicine 1559. மூப்பியல் Geronto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் முதியவர்/மூப்பு. Gerontology / Gerology   1560. முத்தயியல் phílēma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் முத்தம்.   Philematology 1561. முப்பருமானவியல் solid என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள்கள் திடப்பொருள், முப்பருமானம். Stereology 1562. மும்மை…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1551- 1556: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1531-1550 இன் தொடர்ச்சி) 1551. முடுக்கிய  வரைவியல்  முனையம் முடுக்கப்பட்ட வரைவியல் துறை,  முடுக்கு வரைகலைத் துறை என்கின்றனர். இச்சொல் கணிப்பொறித் துறையைச் சேர்ந்தது. எனவே, Port -துறைமுகம் என்று பொதுச்சொல்லில் குறிப்பது பொருந்தாது. முனைப்புள்ளியைக் குறிக்கும் இதனை முனையம் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். Accelerated Graphics Port   1552. முட்டையியல் Oology முட்டைஇயல், புள்முட்டை ஆய்வு எனக் கூறப்படுகிறது. புள் என்றால் பறவை. Promorphology என்பது பிறப்பிற்கு முந்தைய வடிவியல் என்று முட்டை ஆய்வைக்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 அல்லற்பட்டு ஆற்றா(து) அழுத கண்ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை.      — திருக்குறள் முருகானந்தம் தன் இடுப்பிலிருந்த இடுப்புவாரை( ‘தோல் பெல்ட்’டை)க் கழற்றிக் கொண்டு அந்த ஆளை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டான். தையற்கடை வாயிலில் கூட்டம் கூடிவிட்டது. முருகானந்தத்தைத் தேடிக்கொண்டு தற்செயலாக ஏதோ காரியமாய் அரவிந்தன் அப்போது அங்கே வந்தான். அவன் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால் முருகானந்தத்தின் சினம் எந்த அளவுக்குப் போயிருக்குமென்று…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி) 1531. மீயொலி யியல் Hypersonics 1532. மீளாமை வெப்ப இயங்கியல் Irreversible thermodynamics 1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல் Recombinant DNA technology 1534. மீள்மை இயங்கியல் Elastodynamics 1535. மீனியல் Ichthyology 1536. மீன் நோயியல் Fish pathology 1537. மீன் பதன நுட்பியல் Fish processing technology 1538. மீன் பிடியியல் Piscatology 1539. மீன்வளப் பொறியியல் Fisheries engineering 1540. மீன்வளர்ப்புப் பொருளியல் Aquaculture economics 1541. முக அழகியல்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி) 1521. மின்னணுப் பொறியியல் Electronics Engineering 1522. மின்னணுவியல் Electronics 1523. மின்னியங்கியல் Electrophysiology 1524. மின்னியல் Electrology (1) 1525. மின்னொளி யியல்  Electrooptics 1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) 1501. மிகு ஒலியியல் Hyperacoustics 1502. மிடறு–மூக்கியல் Laryngorhinology 1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். Laryngology 1504. மிதவை யுயிரியியல் Planktology 1505. மிதிவண்டிப் போக்குவரத்துப்  பொறியியல் Bicycle Transportation Engineering 1506. மின்இயங்கியல் Galvanology / Electrodynamics 1507. மின் உருவாரவியல் …

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1488 –  1500 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1477 – 1487 இன் தொடர்ச்சி) 1488. மாதவிடாயியல்          மாதந்தோறும் என்னும் பொருளுடைய Emmenosஎன்னும் சொல்லில் இருந்து Emmeno உருவானது. பெண்களுக்கு மாதந்தோறும் வரும் விலக்கு குறித்த இயல். Emmenology 1489. மாந்தக் குமுகவியல் Anthroposociology 1490. மாந்தர்விலங்கு தொடர்பியல் மாந்தருக்கும் விலங்கினத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயும் துறை. எனவே, Anthrozoology என்பதன் நேர் பொருளைக் குறிக்கக் கூடாது. இதன் மற்றொரு பெயர் மாந்தர்-அல்மாந்தர்-விலங்குகள் ஆய்வு/human–nonhuman-animal studies என்பதாகும். ஆதலின் மாந்தர் விலங்குகள் தொடர் பியல்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 68

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 67. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு பணம்(மணியார்டர்) கொண்டு வந்து கையில் நீட்டினார். “நூறு உரூபாய்” என்றார். “எங்கிருந்து?” என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன். மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு உரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது?…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1477 –  1487 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1465-1476 இன் தொடர்ச்சி) 1477. மனிதச் செய்திறனியல்  பாதுகாப்பு, செயல் திறன் தொடர்பான மாந்தரின் பணிச்சூழல் ஆய்வு. இந்த இடத்தில் Engineering என்பதை  பொறியியல் என்று கூறுவதை விடச் செய்திறனியல் என்பதே சரியாக இருக்கும். மனிதப் பொறியியல் / மனித உடற்கூற்றுப் பொறியியல் எனப் பிறர் கூறுவது பொருந்தாது. மனிதச் செய்திறனியல் எனலாம். பணிச்சூழலுடன் தொடர்புடையது என்பதால் இதனை ergonomics உடன் இணைத்து விடலாம். Human Engineering   1478. மனிதத் திறன்சார் பொறியியல் Human-Factors Engineering 1479….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  41

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள். அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச்…