திருக்குறள் அறுசொல் உரை –076. பொருள் செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 075. அரண் தொடர்ச்சி) 02. பொருள் பால் 09. பொருள் இயல் (கூழ் இயல்) அதிகாரம் 076. பொருள் செயல் வகை. செல்வத்தின் தன்மை, தேவை, சிறப்பு, திரட்டும் வழிமுறைகள். பொருள்அல் லவரைப், பொருள்ஆகச் செய்யும் பொருள்அல்ல(து), இல்லை பொருள். மதிப்பு இல்லாரையும், மதிப்பு உள்ளாராக மாற்றுவது செல்வமே. இல்லாரை, எல்லாரும் எள்ளுவர்; செல்வரை, எல்லாரும் செய்வர் சிறப்பு. செல்வம் இல்லாரை, எல்லாரும் இகழ்வார்; உள்ளாரைச் சிறப்பிப்பார். பொருள்என்னும் பொய்யா விளக்கம்,…
திருக்குறள் அறுசொல் உரை – 075. அரண் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 074. நாடு தொடர்ச்சி) 02. பொருள் பால் 08. அரண் இயல் அதிகாரம் 075. அரண் நாட்டிற்குத் தேவையான இயற்கை, செயற்கைப் பாதுகாப்பு அமைப்புக்கள். ஆற்று பவர்க்கும், அரண்பொருள்; அஞ்சித், தம் போற்று பவர்க்கும் அரண். போரைச் செய்வார்க்கும், அஞ்சுவார்க்கும் கோட்டையே தக்கதோர் பாதுகாப்பு. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடைய(து) அரண். ஆழ்அகழி, வெட்டவெளி, மலைகள் காடுகள் கொண்டது அரண். உயர்(வு),அகலம், திண்மை, அருமை,இந் நான்கின் அமை(வு)அரண் என்(று),உரைக்கும் நூல். …
திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல் அதிகாரம் 074. நாடு நாட்டின் இலக்கணம், சிறப்புகள், நாட்டு மக்கள்தம் பண்புகள். தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச் செல்வரும், சேர்வது நாடு. தொடர்விளைவு, தக்கார், உயர்மனச் செல்வர், இருப்பது நல்நாடு. பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. பெரும்பொருளால், கேடும் இல்லா நிறைவிளைவால், அமைவது நாடு. பொறைஒருங்கு மேல்வரும்கால்…
திருக்குறள் அறுசொல் உரை – 073. அவை அஞ்சாமை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 072. அவை அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 073. அவை அஞ்சாமை கூட்டத்தார் திறன்களை ஆராய்ந்து சற்றும் அஞ்சாது பேசும்திறன் வகைஅறிந்து வல்அவை வாய்சோரார், சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். தூயநல் சொல்அறிஞர் சொல்வல்லார் கூட்டத்தில் வாய்தவறாது பேசுவார். கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். கற்றார் மனம்பதியச் சொல்வாரே கற்றாருள் கற்றார் எனப்படுவார். பகைஅகத்துச் சாவார், எளியர்; அரியர்,…
திருக்குறள் அறுசொல் உரை – 072. அவை அறிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 071. குறிப்பு அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 072. அவை அறிதல் அறிஞர் கூட்டத்தின் இயல்புகள் ஆராய்ந்து ஒப்ப நடத்தல். அவைஅறிந்(து), ஆராய்ந்து சொல்லுக, சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். சொல்வள நல்அறிஞர், அவையின் இயல்பை ஆராய்ந்துதான் பேசுவர். இடைதெரிந்து, நன்(கு)உணர்ந்து, சொல்லுக, சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். தமக்கும், அவைக்கும், இடைநிற்கும் இடைவெளியை நன்குணர்ந்து சொல்க. அவைஅறியார், சொல்லல்மேற் கொள்பவர், சொல்லின் …
திருக்குறள் அறுசொல் உரை – 071. குறிப்பு அறிதல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 071. குறிப்பு அறிதல் பிறரது மனஉணர்வுகளைக் கண்கள், முகங்கள்வழி ஆராய்ந்து அறிதல். கூறாமைநோக்கிக் குறிப்(பு) அறிவான், எஞ்ஞான்றும், மாறாநீர் வையக்(கு) அணி. முகக்குறிப்பால் மனஉணர்வை அறிவார் உலகிற்கே நல்நகை ஆவார். ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத், தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல். மனத்தின் உள்கருத்தை ஐயம்அற, உணர்வார் தெய்வத்திற்குச் சமம். குறிப்பின் குறிப்(பு)உணர் வாரை, உறுப்பினுள், யாது…
திருக்குறள் அறுசொல் உரை – 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 069. தூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 070. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் ஆட்சியரிடம் பழகும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள். அகலா(து), அணுகாது, தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர் சேர்ந்(து)ஒழுகு வார். மாறுபட்டு ஆள்வாரோடு விலகாமல், நெருங்காமல் ஆய்ந்து பழகு. மன்னர் விழைய விழையாமை, மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். ஆட்சியார் விரும்புவதை விரும்பாமை, நிலைக்கும் நன்மைகள் தரும். போற்றின், அரியவை போற்றல்; கடுத்தபின், தேற்றுதல்…
திருக்குறள் அறுசொல் உரை – 069. தூது : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 068. வினை செயல் வகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 069. தூது தூதரது கல்விஅறிவு, தூதுஇயல் அறிவு, செயல்உறுதி, சொல்முறை. 681. பண்(பு)உடைமை, தூ(து)உரைப்பான் பண்பு. நாட்டுப்பற்றும், உயர்குடிப் பிறப்பும், பண்பும், தூதர் இலக்கணம். அன்(பு),அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூ(து)உரைப்பார்க்(கு) இன்றி யமையாத மூன்று. அன்பும், அறிவும், சொல்ஆய்வுத் திறனும், தூதர்க்கு மிகத்தேவை. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள் வென்றி வினைஉரைப்பான்…
திருக்குறள் அறுசொல் உரை – 067. வினைத் திட்பம் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 066. வினைத் தூய்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 067. வினைத் திட்பம் செயல்வெற்றிக்கு மிகவும் தேவையான செயல்உறுதி மேலாண்மைத் திறன்இயல் வினைத்திட்பம் என்ப(து), ஒருவன் மனத்திட்பம்; மற்றய எல்லாம் பிற. செயல்உறுதி என்பது மனஉறுதி; மற்றவை, எல்லாம் வேறு. ஊ(று)ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ்இரண்டின் ஆ(று)என்பர் ஆய்ந்தவர் கோள். வரும்முன் காத்தலும், வந்தபின் தளராமையும் ஆய்வாளர் கொள்கை. கடைக்கொட்கச், செய்தக்க(து) ஆண்மை; இடைக்கொட்கின்,…
திருக்குறள் அறுசொல் உரை – 068. வினை செயல் வகை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 067. வினைத் திட்பம் தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 068. வினை செயல் வகை தூய செயலை, மனஉறுதியுடன் செய்தற்கு உரிய வழிமுறைகள் சூழ்ச்சி முடிவு துணி(வு)எய்தல்; அத்துணிவு, தாழ்ச்சியுள் தங்குதல் தீது. ஆழ்ந்தாய்ந்து எடுத்த நல்முடிவைக், காலம் தாழ்த்தாது, துணிந்துசெய். தூங்குக, தூங்கிச் செயல்பால; தூங்கற்க, தூங்காது செய்யும் வினை. செயல்களைப் பொறுத்துக் காலம் தாழ்த்தியும், தாழ்த்தாதும் செய்க. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால்,…
திருக்குறள் அறுசொல் உரை – 066. வினைத்தூய்மை : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 065. சொல்வன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 066. வினைத் தூய்மை செயற்பாடுகளில் குற்றம் குறைகள் இல்லாமை; தூய்மை உள்ளமை. துணைநலம், ஆக்கம் தரூஉம்; வினைநலம், வேண்டிய எல்லாம் தரும். நலத்துணை முன்னேற்றத்திற்கு உதவும்; நலச்செயல் எல்லாமும் தரும். என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை. புகழோடு, நன்மை தராச்செயலை, எப்போதும் விலக்கல் வேண்டும். ஓஒதல் வேண்டும், ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னும் அவர். …
திருக்குறள் அறுசொல் உரை – 065. சொல்வன்மை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 064. அமைச்சு தொடர்ச்சி) 02. பொருள் பால் 06. அமைச்சு இயல் அதிகாரம் 065. சொல்வன்மை கேட்பார் உள்ளம் கொள்ளும்படி, சொற்களைச் சொல்லும் வல்லமை. நாநலம் என்னும் நலன்உடைமை, அந்நலம், யாநலத்(து) உள்ளதூஉம் அன்று. எல்லாத் திறன்களுள்ளும் மிகச்சிறந்த வெல்திறன் பேச்சுத் திறனே. ஆக்கமும், கேடும், அதனால் வருதலால், காத்(து)ஓம்பல் சொல்லின்கண் சோர்வு. வளர்ச்சியும், வீழ்ச்சியும், தரும்பேச்சைத், தவறு இல்லாது பேசுக. கேட்டார்ப் பிணிக்கும்…
