திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் –  4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 தொடர்ச்சி) திருவள்ளுவர்  : 3   தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும். (263)   நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவா நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலின். (கலி. நெய்தல்-8)   களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉ மாங்கே மிகும். (928)   . . . . . . . . . காமம் மறையிறந்து மன்று படும். (1138)   தோழிநாங், காணாமை யுண்ட கருங்கள்ளை…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2

(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1 தொடர்ச்சி) திருவள்ளுவர்  2. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :- இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. (1030) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த…

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1

திருவள்ளுவர்: 1   சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து…

எண்வகை மணம் – சோமசுந்தர பாரதியார்

எண்வகை மணம்   (எனவே ) ஐந்திணை ஒழுக்கமாகிய களவு, கற்புத் திருமணமும், கைக்கிளை மணம், பெருந்திணை வாழ்வு இம் மூன்றும் தமிழர் வாழ்விலே நிகழ்ந்த இயற்கை நிகழ்ச்சிகள். இவை எந்த நாட்டிலிருந்தும் இந்த நாட்டில் குடிபுகுந்தவையல்ல; எந்தச் சமூகத்தாரிடமிருந்தும் தமிழர்கள் கடன் வாங்கியவையல்ல; எந்த மொழிகளிலிருந்தும் தமிழ்மக்கள் கற்றுக்கொண்டவையும் அல்ல; தமிழர் சமுதாயத்தில் தாமே தோன்றி நிலவிய இயற்கை மணவாழ்வாகும். இதுவே தொல்காப்பியக் கண்ணாடி நமக்குக் காட்டும் உண்மை. – நாவலர் சோமசுந்தர பாரதியார்

நாள் கணக்கிடும் முறை – சி.இலக்குவனார்

நாள் கணக்கிடும் முறை   நள்ளிரவு அரைநாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்ற ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும். -செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க…

சமற்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம்! – கருணாநிதி

    சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும்  முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி,  சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார்.   மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் –  சமற்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படை யெடுக்குமா? எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய  தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய…

குறள்நெறிப்படி முதாயத்தை நிறுவிட வேண்டும் – சோமசுந்தர பாரதியார்

  குறள்நெறிப்படி சாதி சமயமற்ற சமுதாயத்தை நிறுவிட முன்வரவேண்டும்   2000 வருடங்களுக்கு முன்னர்த் தமிழகத்தில் இருந்தவற்றையும், இனி இருக்க வேண்டியவற்றையும் வள்ளுவர் குறளில் கூறியுள்ளார். குறள்நெறி தமிழகத்தில் பரவிடும் நேரத்திப், பிறர் தந்த கலைக்கும் பண்பாட்டிற்கும் இடம் கொடுத்ததின் காரணமாகத் தமிழர் மாண்புகள் நாசமாகி விட்டன. இன்று தமிழர், குறள்நெறியைப் போற்றிடும் காலம் வந்துள்ளது.   குறள் நெறியுடன் வாழ்ந்த தமிழரை, சமுதாயத்தின் நச்சுப்பூச்சிகள் என்று கூறியவர் எவர்? ஏன் தமிழர் சமுதாயம் சீர்கெட்டது? இன்று மீண்டும் குறள் நெறிப்படி சாதி, சமய…

ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்க்கே பொருந்தாதன – நாவலர் பாரதியார்

தமிழர் திருமண முறை சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேற்றிய புதிய ஆரியக்களியால் தமிழர், தமிழையும் மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர். தமிழர் திருமணத்துக்கு எவ்வகைச் சடங்கும் இன்றியமையாததெனப் பண்டைத் தமிழ்மக்கள் கருதவில்லை என்பதற்குப் பற்பல சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களுள் உண்டு. முதற்கண்ணும் எஞ்ஞான்றும் உழுவலன்பே மணத்திற்கும், இல்வாழ்க்கை இன்பத்திற்கும் உரியதொன்றாக இருந்தது. பொருந்தாதனவும் செயற்கையும் ஆகிய ஆரியர் வழக்குகளையும், முறைமைகளையும் தமிழரின் காதல்பற்றிய வழக்குகள், குறிக்கோள்களோடும் இணக்கி வேறுபாடு அழித்து ஒன்றாக்கச் சில பிராமண பிராமணீய இலக்கண…