உ.வே.சா.வின் என் சரித்திரம் 19

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 18 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 11விளையாட்டும் விந்தையும் விடுமுறை நாட்களில் நான் உடன்படிக்கும், பிள்ளைகளோடு விளையாடுவது வழக்கம். ஆயினும், என் தந்தையார் காணாமல் விளையாடுவேன். கண்டால் அடித்துவிடுவா ரென்ற பயம் இருந்தது. நான் பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு வீட்டிலும் எப்போதும் படிக்க வேண்டு மென்பது அவரது நினைவு. என் சிறிய தகப்பனார் எனக்கு வீட்டில் பாடம் சொல்லித் தந்தார். அவர் நயமாகக் கற்பிப்பார். என் பாட்டனாரும் கற்பிப்பதுண்டு; அவர் வார்த்தைகளால் கடிந்துகொண்டு போதிப்பார்; சில சமயம் அடிப்பார். என் தந்தையாரோ…

தமிழ்நாடும் மொழியும் 18; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 17 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 18 பல்லவப் பேரரசுதொடர்ச்சி கடிகாசலம், பாகூர் இவ்விரண்டிடங்களிலும் விளங்கிய வடமொழிக் கல்லூரிகளில் முறையே நான்கு வேதங்களும், பதினான்கு கலைகளும் கற்பிக்கப்பட்டன. மேலும் பாகூர் கல்லூரியில் பதினெட்டுவகை வித்தைகளும், மறைகள், சாத்திரங்கள், புராணங்கள் முதலியனவும் சொல்லித்தரப்பட்டன. பல்லவர் காலத்திலே சைவமும் வைணவமும் நன்கு வளர்க்கப்பட்டன. மகேந்திரன் அரசாட்சியின் தொடக்கத்தில் சமண சமயம் செல்வாக்குப் பெற்றபோதிலும், சைவ சமயக் குரவர்களான அப்பர், சம்பந்தர் ஆகியோரின் ஓயாத உழைப்பாலும், அவர் தம் பாக்களின் செல்வாக்காலும் சமணமும் பௌத்தமும் நிலை தடுமாறின….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 566 – 570

( தமிழ்ச்சொல்லாக்கம் 561-565 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 566 -570 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 566. Balcony – உயர்நிலைப்படி கொட்டகையையடைந்ததும் டிக்கெட்டு விவரங்களை விசாரித்தான். இரண்டு டாலர் – அல்லது சுமார் ஏழு உரூபா…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 3/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-2/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 3/6 இந்தி எதிர்ப்புப் போர் 1937 ஆம் ஆண்டின் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத் தேர்தல்களுக்கு நின்று, ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற இராச கோபாலாச்சாரியார் தனது பதவிக் காலத்தில் உயர்நிலைப்பள்ளியில் முதல் மூன்று படிவம் பயிலும் மாணவர் அனைவரும் கட்டாயம் இந்தி பயில வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் விளைவாகக் கட்டாய…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 20

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி    தமிழிலிருந்து தோன்றியது மலையாளம் என்ற உண்மை கிழக்குத் திசையை உணர்த்த அது (மலையாளம்) ஆளும் சொல்லினாலேயே (படி ஞாயிறு) விளக்கப்பெறும். 1   தமிழிலிருந்து பிறந்த மலையாளம் வேறுபட்டதற்குரிய காரணங்கள் : 2         1.  சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால்    தடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டுப் பகுதியுடன்    மிகுதியான தொடர்பு கொள்ளாதிருந்தமை.         2. 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம்  நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.        …

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16

(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 15 தொடர்ச்சி) ஊரும் பேரும் 16 மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள். வட ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.+1 பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந் நகரம் பஞ்சு வியாபாரத்திலும், கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 561-565

( தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 561-565 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 561. Lift – தூக்கி சத்யவிரதன் மறுபடி யவளுக்குத் தைரியத்தைச் சொல்லிவிட்டுத் தூக்கி வழியே கீழே இறங்கினான். அவன் கீழே வந்த…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 82

(குறிஞ்சி மலர்  81 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  29 புண்ணிய நல்வினை திரண்டனையபொன்னொளிர் பொலிவினைகண்ணிற்கரந்தானே மறுபடிகண்ணுள் கலந்தானே! விமானம் மேலே உயரச் சென்று பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்களேசுவரி அம்மாள் ஏதோ புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தாள். பூரணி கண்களை மெல்லத் துடைத்துக் கொண்டாள். ‘உயரத்தில் ஏறிச் செல்லும் போதெல்லாம் நானும் சேர்ந்து வரவேண்டும் என்பாய்! இப்போது என்னை மட்டும் கீழேயே விட்டுச் செல்கிறாய்’ என்று விமானம் புறப்படுமுன் நகைத்துக் கொண்டே கூறினானே அரவிந்தன். அப்போது அவன் முகம் எப்படி இருந்ததென்பதைக் கண்களை மூடிக்கொண்டு…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 

(தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 556-560 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) உருதுமொழிச் சொற்கள் 556. கம்மி – குறைவு 557. சிபாரிசு – தகவுரை 558. டோபிகானா – வண்ணான் சாவடி 559. சராய்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 18

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 10: இளமைக் கல்வி தொடர்ச்சி பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் தானத்தில் இருந்தது. பனையேடுதான் புத்தகம். எழுத்தாணியே பேனா. உபாத்தியாயர் எழுதித் தரும் ஏட்டுச் சுவடியிலிருந்து முதலில் நெடுங்கணக்கை (அரிச்சுவடியை)க் கற்றுக் கொள்வான் மாணாக்கன். அப்பால் எண்சுவடி முதலிய சுவடிகள் பெற்றுப் படிப்பான். ஓலை வாரவும், சுவடி சேர்க்கவும், நன்றாக எழுதவும் தெரிந்துகொள்வதற்குப் பல நாளாகும். சுவடியைப் பிரித்து ஒழுங்காகக் கட்டுவதற்குக்கூடப் பழக்கம் வேண்டும். பிள்ளைகளுக்கு எழுத்துப் பழக்கம் உண்டாக உபாத்தியாயர் ஓர் ஓலையில்…

தமிழ்நாடும் மொழியும் 17; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 16 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 17 பல்லவப் பேரரசு தொடர்ச்சி அபராசிதவர்மன் நிருபதுங்கனுக்குப் பிறகு அபராசிதவர்மன் என்பான் பல்லவ நாட்டின் அரசனானான். கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது திருப்புறம்பியம் என்னும் ஊர். அவ்வூரின் கண்ணே பல்லவனுக்கும் பாண்டியனுக்கும் போர் நடை பெற்றது. அப்போரில் முதலாம் பிருதிவிபதி என்னும் கங்க அரசன் பல்லவ மன்னனுக்கு உதவிபுரிந்தான். இப்போரில் பல்லவனே வெற்றிபெற்றான். ஆனால் வெற்றியைப் பல்லவனால் துய்க்க முடியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இப்போரில் பல்லவன் பக்கம் போரிட்ட முதலாம் ஆதித்த சோழன் போர்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 

(தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 551-555 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 551. Monkey Screw — குரங்குத் திருகு விளக்கைப் பிரதாப்சிங்கிடம் கொடுத்துவிட்டுத் தன் இடுப்பிலிருந்து ஒர் நீண்ட கயிற்றைக் கழற்றினாள். அது சுமார்…