கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு

தேவதானப்பட்டிப் பகுதில் கறவைமாட்டுக்கடன் திரும்பப்பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் தவிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் வழங்கப்பட்ட கறவைமாட்டுக்கடனைத் திரும்பப் பெற முடியாமல் வங்கி அதிகாரிகள் திணறிவருகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட பாரதஅரசு வங்கிகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி, செயமங்கலம், குள்ளப்புரம் முதலான இடங்களில் உள்ள பாரத அரசு வங்கிக்கிளைகளில் கறவைமாட்டுக்கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வங்கியிலும் தொண்டுநிறுவனங்களின் மேற்பார்வையில்தான் கடன் வழங்கப்பட்டது. அப்போது தொண்டுநிறுவனத்தினரும் வங்கி அதிகாரிகளும் இணைந்து புனையாளாக (பினாமியாக ஆட்களை) வைத்துப் பல கோடி உரூபாய் கடன் வழங்கினார்கள். உணவுப்பொருள் அட்டையின் படி, கடவுச்சீட்டு அளவுப்படம் ஆகியவற்றை…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 3

 (மார்கழி 6, 2045 /  திசம்பர் 21,2014 தொடர்ச்சி) 10.0. திருவள்ளுவமாலை அகச்சான்றுகள்            திருவள்ளுவமாலையில் சொல்நுட்பங்கள் நிறைந்து உறையினும், விரிவுஅஞ்சி முன்குறிப்பிட்டவாறு அறுவர்பாடல் சான்றுகளை மட்டுமே இங்கு நுண்ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறேன். எஞ்சியவற்றை நுண்ஆய்வு மேற்கொள்ளப் பிறரை இவ்ஆய்வுக்கட்டுரை தூண்டுமாயின், அத்தூண்டுதல் என்னை மேலும் ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டுமென நம்புகின்றேன்., 10.1. அருவப்பாடல்— 01 [அசரீரிப்பாடல்]      [உருவம்இல்லாததெய்வஒலி]  சொல்தொடர்: தெய்வத்திருவள்ளுவர் திருவள்ளுவமாலையின் முதற்பாடலில் வரும் தெய்வத்திருவள்ளுவர் என்னும் சொல்தொடர், நுட்பம்நிறைந்தது. தெய்வஆற்றல் மிக்கவர் திருவள்ளுவர் எனப் பொருளால் சிறந்தது. நுட்பங்கள்.      திருக்குறள் உலகுதழீஇய…

தமிழ் இலக்கியக் கலைவிழா

  உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  உலகத் தமிழ் மையம்,  இலண்டன் மலேசியத் தமிழ்ச்சங்கம்  மலேசிய இந்தியப் பண்பாட்டுக் குழு தமிழ் இலக்கியக்கலைவிழா    மார்கழி 10, 2014 / திச.25,2014 சென்னை -28  

உழைக்கும் மாற்றுத்திறனாளி சேகரனுக்கு உதவி தேவை.

தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை,  மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.  இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.   கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது  வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல்,…

“செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா

‘செல்லமே’ மாத இதழ் சார்பில் 2014 ஆம் ஆண்டிற்கான “செல்லமே மாற்றத்தை உருவாக்குவோம்” விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.   தமிழில் பெற்றோருக்காக வெளிவருகின்ற வார இதழான ‘செல்லமே’ தன்னுடைய முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டுத் தமிழ்நாட்டில் பல்வேறு திறமைகளைக்கொண்டு, மக்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்ட, மற்றவர்களால் அறியப்படாத 10 அருவினையாளர் (சாதனையாளர்)களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, கந்தன் சாவடியில் நடைபெற்றது.  இவ்விழாவில், விருது வழங்கப்பட்ட அருவினையாளர்களில் 12 அகவை யோகேசு என்ற சிறுவனும் அடக்கம். இவர் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மின்னணுத்துடைப்பான் ஒன்றினைக்…

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!

நரேந்திரர்(மோடி) இந்து வெறியர் அல்லர்!   நரேந்திர(மோடி)யையும் அவர் சார்ந்த இராசுட்டிரிய சேவா சங்கம் என்னும் அமைப்பையும் இந்து   வெறி பிடித்தவர் என்றும் இந்து வெறி அமைப்பு என்றும் பலரும் கூறி வருகிறோம். உண்மையில் அவரோ அவர் சார்ந்த அமைப்போ இந்து சமய வளர்ச்சிக்கான குறியீடு அல்ல. இத் துணைக் கண்டத்தில் எவ்வாறு பல்வேறு இன மக்களையும் இந்தியர் என அழைக்கிறார்களோ அதுபோல்தான் பல சமயங்களின் கூட்டே இந்து என்னும் சமயமும். எவ்வாறு, அரசியல் அடிப்படையில் நாம் இந்தியர் எனப்பட்டாலும் வரலாற்று அடிப்படையில் இந்தியர்…

வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா

வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா மருத்துவர் மு.சீவகன், சிறுநீரக மருத்துவ வல்லுநர் மருத்துவர் சீ.இலட்சுமி பிரசன்னா சீவகன், மயக்கு மருத்துவ வல்லுநர் அன்புடையீர்,  வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராசன்] எம்.ஏ.,பி.எல், அவர்களின் அண்ணாவுமான எம்.எசு.பி..முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் 24 திசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு, காந்தி நகர் முதலாவது…

2014 தமிழிசை விழா

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை Federation of Tamil Sangams of North America இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் Sangeeth Saagar Cultural Trust 10-ஆம் ஆண்டு விழாவில் வழங்கும் 2014 தமிழிசை விழா இடம்: பசும்பொன் தேவர் மண்டபம், 157 அபிபுல்லா சாலை, வடக்கு உசுமான் சாலை, தியாகராய நகர், சென்னை 600 017 மார்கழி 14, 2045 / 2014 திசம்பர் 29 (திங்கள் பிற்பகல்), திருவள்ளுவர் ஆண்டு 2048 நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி…

தேனிமாவட்டத்தில் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்

தேனிமாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குற்றஉடைமை(மாஃபியா)க் கும்பல்   தேனிமாவட்டத்தில்   ஏமாற்றும் குற்றக்கும்பல் மறுபடியும் தொழிலில் இறங்கிப் பலரை வஞ்சித்து வருகிறது.   தேனி மாவட்டத்தில் மண்ணுளிப் பாம்பு, நாகரத்தினக்கல், குபேரச்செம்பு, கலசம், மயில்படம் போட்ட பத்து உரூபாய்த்தாள், திப்பு சுல்தான் வாள், ஓர் இலட்சம் கொடுத்தால் இரண்டு இலட்சம், கள்ளப்பணம், அரியவகை மூலிகை, கருப்புப் பூனை, கருப்பு மை, கருந்துளசி, இரிடியம்,குபேர பூசை, 500உரூபாய் வண்ணப்படிமை, 1000உரூபாய், பழங்கால நாணயங்கள், பழங்காலத்து தினார்பணத்தாள்கள், களங்கம்(தோசம்) கழிக்கும் பூசை, அகழ்வராய்ச்சியின்போது கிடைத்த மன்னர்காலத் தங்கக் காசுகள்,…

இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் – வைகை அனிசு

இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள்! அரசு ஆவணங்கள் வெளியில் கடத்தப்படும் கண்டம்(அபாயம்)   தேனிமாவட்டத்தில் இடைத்தரகர்களின் பிடியில் அரசு அலுவலகங்கள் இயங்கிவருவதால் அரசு அதிகாரிகள் யார், இடைத்தரகர்கள் யார் எனப் புரியாமல் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.   தேவதானப்பட்டியில் செயல்படும் அரசு அலுவலகங்கள், வங்கிகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் தற்காலிகமாகத் திறன் குறைந்த தொழிலாளர்களை அமர்த்திப் பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களில் பணியில் இருக்கும் அரசு அலுவலர்கள் வெளிஆட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.   தேவதானப்பட்டி பாரதஅரசு வங்கியில் வெளியார்களும் ஓட்டுநர்களும் வங்கியினுள் உள்ளே உட்கார்ந்து…

தேனியில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்

தேனி மாவட்டத்தில் தீயணைப்புத்துறையைப் புதுமைப்படுத்தவேண்டும்! சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!   தேனிமாவட்டத்தில் தீயணைப்புத்துறையை புதுமைப்படுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆறுகள், குளங்கள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் சிறுவர்கள் தண்ணீரில் குளிக்கும் ஆர்வத்துடன் நீச்சல் அடிக்கின்றனர். நீச்சல் பயிற்சியின்போது முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல் பலர் இறந்துவிடுகின்றனர். இறந்த உடலை மீட்பதில் காலத்தாழ்ச்சி ஏற்படுகிறது. இதற்குச் காரணம் தீயணைப்புத்துறையில் நவீன மீட்புக்கருவிகள் இல்லை.   மஞ்சளாறு அணைக்குச் செல்கின்ற வழியில் மொக்கையன்…