கடல்வழி போக்குவரவினை முதலில் கண்டறிந்தவர் தமிழரே!

    தமிழ்வேந்தர்கள் அமைத்த கோட்டைகளின் இயல்பு சங்க இலக்கியங்களிற் குறிக்கப்பட்டுள்ளது. நகரங்களின் புறத்தே காவற்காடும் அதனை அடுத்து, ஆழ்ந்த அகழியும், அதனைச் சார்ந்து வானளாவ ஓங்கிய மதிலும், அரண்களாக கொள்ளப்பட்டன. முற்றுகையிட்ட பகைவர் படையினை உள்ளிலிருந்து எய்தற்குரிய போர்க் கருவிகள் மதிலில் அமைக்கப்பட்டு இருந்தன. கோட்டையில் சிறந்த பகுதி மதிலாகும். சுடுமண்ணாகிய செங்கற்களாற், சுண்ணாம்பு சாந்திட்டு மதில்கள் கட்டப்பட்டன. அங்ஙனம் கட்டப்பட்ட மதில்கள் செம்பினாற் செய்தாற் போன்ற தோற்றமும் திண்மையும் உடையவனாய் அமைந்தன. புறத்தேயுள்ள பகைவர் காணாதபடி உள்ளிருப்பார் மறைந்து நின்று போர்…

சுரேசமீ எழுதிய ‘வள்ளுவமாலை-100’ நூல் அறிமுகக் கூட்டம்

தமிழ் ஆர்வலர் சுரேசமீ எழுதிய ‘வள்ளுவமாலை-100’ நூல் அறிமுகக் கூட்டம் மசுகட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைகாசி 24, 2046, சூன் 07, 2015 அன்றுநடைபெற்றது.    தமிழ்த்தாய் வாழ்த்துடனும் சிறப்பு வழிபாட்டுடனும் நிகழ்ச்சி தொடங்கியது.  இதில் சிறப்பு விருந்தினராக மசுகட்டுத் தமிழ்ச்சங்க மேனாள் தலைவரும், இன்றைய நெறியாளருமான. சானகிராமன், மசுகட்டுத் தமிழ்ச் சங்கத் தலைவர் அபு ஃகசன், பொருளாளர் திருவாட்டி .விசயலட்சுமி, இலக்கிய அணிச் செயலாளர் திருவாட்டி விசாலம், திருக்குறள் தென்றல். தங்கமணி, சுவாமிநாதன், சந்திரசேகர், கலைமணி, இலக்கியா முதலான பலர் கலந்து…

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 28 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015 தொடர்ச்சி) காட்சி – 28 அங்கம்    :     அன்பரசன், கவிஞர் இடம்      :     குடிலின் முன்வாசல் நிலைமை  :     (ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு நினைவாய்க் கவிஞரின் உள்ளத்தைக் கக்கவே வைக்க இவ்வொரு காட்சியோ! இன்னும் தூண்ட அவிழ்த்தே விரித்தார்! பட்டப்பகலாய்) கவி  :     பார்த்தாயா தம்பி! பணம் பேசும் பேச்சை! சொல்லால் சொல்ல வழியும் உண்டா? அன் :     பரம்பரையாகக் கொள்ளயடித்தே வருவோரை நாம் தான் செய்வது என்ன? கவி  :    …

இடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!    இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்? வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம். மக்கள்…

இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இணையமாநாடு 2015, சிங்கப்பூர்   இயல்பான கணிணி மொழி பெயர்ப்பிற்குச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com முன்னுரை:     உலகின் முதல் குடியாகிய தமிழ்க்குடி தோன்றிய பின்னர், இயற்கைச் சீற்றங்களால், கடல் கோள்களால், நிலத் திட்டு நகர்வுகளால் மக்களினம் பிரியும் சூழல் ஏற்பட்டது. அங்கங்கே பிரிந்து சென்றவர்கள் தாய்க்குடியுடன் தொடர்பின்றி அங்கங்குள்ள சூழலுக்கேற்பப் பேசி புதிய மொழிகள் பிறந்தன. பல மொழிகள் பிறந்ததும், வெவ்வேறு மொழி பேசுவோரிடையே தொடர்பு   ஏற்பட்டதும் மொழிபெயர்ப்பும் உருவானது. தமிழில் கிடைத்துள்ள மூவாயிரம் ஆண்டிற்கு…

இணைய மாநாட்டுத் தகவல்நுட்பக்காட்சி ஒளிப்படங்கள் சில, சிங்கப்பூர்

  சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் 14ஆவது இணைய மாநாடு  மூன்று நாள் நடைபெற்றது.   இம்மாநாட்டில்   தொடக்க நாளான சித்திரை 16, 2046 / மே 30, 2015 சனியன்று சிங்கப்பூர்த் தலைமையமைச்சுத்துறையமைச்சர் ஈசுவரன்  தகவல்நுட்பக் காட்சியரங்கத்தைத் திறந்து வைத்தார். படங்கள் : அகரமுதல & தினமலர்

சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா

  கவிக்கோ அப்துல் இரகுமான்  75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில்   ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள்  பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழ்ச்சங்கங்களில் இசைஆராய்ச்சியும் நடைபெற்றது.

  வடிம்பலம்ப நின்றானும் அன்றொருகால் ஏழிசை நூற்சங்கம் இருந்தானும் கிழக்கத்திய இசை (Oriental Music) சீரிலும் சிறப்பிலும் மிக உயர்ந்தது என்றும் மிகவும் திருத்தம் பெற்றது என்றும் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கத்திய இசை என்பதில் தமிழிசை உட்படுகிறது என்பதை அறிய வேண்டும். இது ஐந்திசை, ஆறிசை, ஏழிசை என்ற முறையில் முன்னேறித் திருத்தமடைந்துள்ளதாக, அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. (The Encyclopaedia Americans, Vol.19. page. 627) – முனைவர் ஏ.என். பெருமாள்: தமிழர் இசை: பக்கம்.14

மணவை முசுதபா 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

  அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.    தேநீர் விருந்துடன் தொடங்கும் விழா, இரவு விருந்துடன் நிறைவடைகிறது.   அந்நிகழ்வின் பொழுது அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்க விண்ணியல் அறிவியல் துறையில் அருந்திறல் ஆற்றியுள்ள மதிற்பிற்குரிய முனைவர்…

தமிழ் நாடு – பாவேந்தர் பாரதிதாசன்

சேரன் செங்குட்டு வன்பிறந்த வீரம் செறிந்த நாடிதன்றோ?   சேரன் செங்குட்டுவன்… பாரோர் புகழ் தமிழ்ச் சேயே பகை யஞ்சிடும் தீயே நேரில் உன்றன் நிலையை நீயே நினைந்து பார்ப் பாயே.   சேரன் செங்குட்டுவன்… பண்டி ருந்த தமிழர் மேன்மை பழுதாக முழு துமே கண்டி ருந்தும் குகையிற் புலிபோல் கண்ணு றக்கம் ஏனோ?   சேரன் செங்குட்டுவன் … – பாவேந்தர் பாரதிதாசன்