பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7     “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல்   வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…

திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை

கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு     தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.   நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.   சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக் கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ]  தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி)  அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும்   ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார்.   மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…

‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்

(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் அன்னைத்தமிழ் உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு, நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற்…

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு

திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை           அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார்.    இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள்.      அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல்.         இந்த நூலில்…

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும்    மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…

இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி

3 இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ என்கிற தலைப்பில் நளினி எழுதியிருக்கும் நூலின் மூன்றாம் பகுதி இது!   19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர் யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன.   “நான் பிரியங்கா…

தமிழ்நிதி விருது வழங்கும் விழா

தமிழ்நிதி விருது  வழங்கும்  விழா     கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047  செவ்வாய் சனவரி 03, 2017 அன்று   தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.   தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன்,  புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார்.   தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி,  திருக்குறள்,…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்   [ஙோ] 3. தமிழ்நலப் போராளி  இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும்  கருத்துகளைக் காணலாம்.  “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…

இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : வல்லிக்கண்ணன்

  மார்கழி 26, 2047  செவ்வாய் 10.01.2017  மாலை 06.30 மணி  பாரதிய வித்யா பவன் – மயிலாப்பூர் ‘மறுவாசிப்பில் வல்லிக்கண்ணன்‘   முன்னிலை  : திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை: முனைவர் மா.இரா.அரசு சிறப்புரை : தோழர் இரா.தெ. முத்து அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் ஆசு  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் இலக்கியவீதி கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்யா பவன்