சல்லிக்கட்டா? ‘ஜ’ல்லிக்கட்டா? – தி.வே. விசயலட்சுமி

  சல்லிக்கட்டா? ‘ஜ‘ல்லிக்கட்டா?     தமிழர் திருநாளான பொங்கல் விழாவை ஓட்டித் தமிழகமெங்கும் சிற்றூர்ப் புறங்களில் பல்லாண்டுகளாய் நடந்து வரும் வீர விளையாட்டே சல்லிக்கட்டு என்பது. தமிழர்தம் முல்லைநில நாகரிகத்தில் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவர். மணப்பெண்வீட்டாரின் காளையை அடக்கி மணப்பர் என்று சங்க இலக்கியம் கொண்டு அறிகிறோம். இன்று இவ்வீரவிளையாட்டு திருமணத்துடன் உறவு கொள்ளாமல் இளைஞர்தம் மறப்பெருமையைப் பாரோர்க்கு எடுத்துக்காட்டும் ஒன்றாக மட்டுமே செயல்பட்டு வருகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய கட்டுத்  தொகை முடிவு செய்யப்படும்….

சொல் விளக்கம்: முன்னுரையும் முற்காட்சியும் (preface & preview) – இலக்குவனார் திருவள்ளுவன்

சொல் விளக்கம்:  முன்னுரையும் முற்காட்சியும் (preface &  preview) நண்பர் வேந்தன் அரசு, மடலாடல் குழு ஒன்றில், “preface, preview இவ்விரண்டுக்குமே முகவுரை எனச் சொல்லலாமா?” கேட்டிருந்தார். அவ்வாறு ஒரே சொல்லைக் குறிப்பிட்டால் தவறில்லை. பொதுவாக எந்தச் சொல்லும் அச்சொல் பயன்படும் இடத்திற்கு ஏற்பவே பொருள் கொள்ளும்.  ஒரே பொருள் தரக்கூடிய சொற்களையும் நாம் விரும்புவதற்கேற்பப் பயன்படுத்தும் வழக்கமும் உள்ளது. preface என்பதற்கு, அணிந்துரை சிறப்புப் பாயிரம் தந்துரை தலைவாசகம் நூன்முகம் பதிகம் பாயிரம் பீடிகை புறவுரை புனைந்துரை பெய்துரை பொதுப்பாயிரம் முகவணை முகவுரை…

பன்னாட்டுக்கருத்தரங்கம், மார்ச்சு 2017, மதுரை

 பங்குனி 28, 2048 / 31.03.2017   தமிழ் உயராய்பு மையம், தியாகராசர் கல்லூரி,மதுரை  மாணிக்கவாசகர் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரை – இலக்கியங்களில், ஆவணங்களில், வாழ்வியலில்!     ஒருங்கிணைப்பாளர்: முனைவர் இ.பேச்சிமுத்து, 7598132916  

திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால்  15.கற்பு இயல்  நினைந்தவர் புலம்பல்    இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல்.   (01-02 தலைவன் சொல்லியவை)  உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால்,       கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும்.   எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார்       நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது.   [03-10 தலைவி…

எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்

எல்லாம் கொடுக்கும் தமிழ்!     என்னயில்லை   நம்தமிழில்   ஏன்கையை   ஏந்தவேண்டும் இன்னும்   உணரா   திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத   தாழ்வுமனம்   போக்கியுள்ளே   ஆய்ந்துபார் எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   எள்ளல்   புரிகின்றாய்   ஏகடியம்   பேசுகின்றாய் உள்ள   துணரா   துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல்   தாழ்த்துகிறாய்   காண்கதொல்   காப்பியத்தை எல்லாம்   கொடுக்கும் தமிழ் !   எந்த   மொழியிலுமே   இல்லா   இலக்கணமாம் நந்தமிழில்   மட்டுமுள்ள   நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க   வாழ்க்கைக்கு   நல்வழியைக்   காட்டியிங்கே எல்லாம்   கொடுக்கும்   தமிழ் !   ஐந்தாய்  …

சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…

தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா.

தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார்!   எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல், எவ்வளவென்று மலைக்கின்றார். இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி, எளியரும் பண்பைக் கலைக்கின்றார். தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி, தரணியைச் சீர் குலைக்கின்றார். அப்படிப்பட்டோர் கையினில் மீள, அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்! கெர்சோம் செல்லையா

சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்? – புகழேந்தி தங்கராசு

(மு.க.தாலின் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை பிப்பிரவரி 19ஐ –  தொடர்ச்சி) மு.க.தாலினும் பிப்பிரவரி 19-உம்! (2) சூழ்ச்சித் திட்டம் தீட்டியது யார்?   ‘பழையவற்றையெல்லாம் ஏன் கிளறுகிறீர்கள்’ – எனச் சண்டைக்கு வருகிறார்கள், பழைய நண்பர்கள் சிலர். உள்ளூர் அழைப்புக்கும் 25 காசு, வெளியூர் அழைப்புக்கும் 25 காசு என்கிற கட்டணக் குறைப்புத் திட்டத்தில் (Rate cutter) இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது… என்னை ஒரு சொல் சொல்ல விடாமல் மூச்சு விடாது பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூட இருந்தே குழி பறிப்பவர்களுக்கு மறப்போம் மன்னிப்போமெல்லாம் பொருந்தாது…

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்! – வவுனியாவில் போராட்டம்

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சான்றினைத் தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்  (ஒளிப்படங்களும் காணுரைகளும்)  தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த மாசி 12, 2048 / 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும், ‘தீர்வு கிடைக்கும் வரை (சுழற்சிமுறையிலான) உணவு தவிர்ப்பு’ போராட்டம்  மாசி 26, 2048 / 10.03.2017 வெள்ளிக்கிழமை 15  ஆவது நாளாகவும் தொடர்கின்றது.   இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள்,  உலக மகளிர்  நாளில் (மார்ச்சு- 8,…

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2

(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ?  தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…

பொய் சொல்ல மாட்டேன்! -சந்தர் சுப்பிரமணியன்

பொய் சொல்ல மாட்டேன்!   பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! கையில் எதுவும் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்!   பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! மெய்யின் வழிதான் மேன்மை, எனவே பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்!   -சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 28    

சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்

சிங்கள அரசின் ஏமாற்று வேலை   இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில்  ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும்  உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.   அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது.   2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…

1 4 5 6 8