திருக்குறள் தொடர்சொற்பொழிவு, பாளையங்கோட்டை

வைகாசி 13, 2048 மே 27, 2017 மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை   தலைவர் – நல்லாசிரியர் புலவர் வை. இராமசாமி முன்னிலை –  தமிழ்மாமணி பேரா.முனைவர் வளன் அரசு  பொழிஞர்: தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா                              பொருள் : நீரினும் நன்றதன் காப்பு உலகத்திருக்குறள் தகவல் மையம்

பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாநோன்பு, பாளையங்கோட்டை

வைகாசி 07, 2048  ஞாயிறு 21.05.2017 காலை 9.00 முதல் மாலை 6.00 வரை சவகர் திடல், பாளையங்கோட்டை   தலைமை : இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்

வந்தவாசி கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில் அருவினை

வந்தவாசி   கவி இணையரின் இரட்டைப்பிள்ளைகள் மாவட்ட அளவில்  அருவினை   + 2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று வந்தவாசி அரசுப் பள்ளியின் இரட்டையர்கள்  அருவினை அண்மையில் வெளியான + தேர்வு முடிவுகளில் வந்தவாசி அரசுப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் மாவட்ட  அளவில் அதிக மதிப்பெண்களைப் பெற்று  அருவினை புரிந்துள்ளனர். 2016-17 கல்வியாண்டிற்கான + தேர்வு முடிவுகள் சித்திரை 28 –  11/5 அன்று வெளியாயின. இதில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி,…

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை

கவிதை உறவு 45ஆம் ஆண்டு விழா, சென்னை வைகாசி 04, 2048 / மே 18, 2017 மாலை 4.45 நூல்கள் வெளியீடு பரிசளிப்பு விருது வழங்கல் மலர் வெளியீடு (படங்களை அழுத்திப் பார்க்கவும்) – ஏர்வாடியார்

பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 – முனைவர் நா.இளங்கோ

(பாவேந்தரும் பொதுவுடைமையும் 1/4  தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4     மானிடத்தின் மகத்துவம் பேசும் கவிஞன், சமத்துவத்தின் தேவையை, உயர்வைப் பேசும் கவிஞன், உழைக்கும் மக்களின் உன்னதத்தைப் பேசும் கவிஞன் என்பதோடு நில்லாமல், புதியதோர் உலகம் செய்வோம்- கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம் புனிதமோடு அதை எங்கள் உயிரென்று காப்போம் என்று புதிய உலகம் அதுவும் பொதுவுடைமை உலகம் அமைக்க விரும்புகிறார் பாவேந்தர். மேலும் உலகப்பன் பாடலில் ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஓர் நொடிக்குள்…

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல் -சென்னைக் கடற்கரை

தமிழீழ இனப்படுகொலைக்கான 8ஆம் ஆண்டு நினைவேந்தல்   கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இலங்கை அரசினால் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தும் நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான சென்னைக் கடற்கரையில்(‘மெரீனாவில்’) கண்ணகி சிலை பின்புறம் ஆண்டுதோறும் மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வைகாசி 07 / மே 21 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.  தமிழீழ இனப்படுகொலையை நாம் மறந்து…

இலக்கியப் பெருவிழா, வைணவத் தமிழ் : தொடர் சொற்பொழிவு

வைகாசி 03, 2048 /  மே 17, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபை, சென்னை 600 018 கவியரங்கம் இன்னுரை எழிலுரை தேனுரை தொடருரை :  முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்  கலசலிங்கம்.- ஆனந்தம் சேவா சங்கம்

சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்

சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு?  சீக்கிரம் நீசொல்லு!   குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக் கொத்தித் தின்கின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!   நெட்டை மரத்தின் நிழலில் ஒருநாள் நின்றேன் இளைப்பாற! சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்  புன்னகைப் பூக்கள்  பக்கம் 36

விட்டர் இராசலிங்கம் புத்தக வெளியீட்டுப் படங்கள்

புத்தக வெளியீட்டு விழா புத்தகத்தின் பெயர் :  ‘ History of the dispossessed Sri lankan Tamils’”  ( உரிமை இழந்த இலங்கைத் தமிழரின் வரலாறு ) வைகாசி 23 / மே 6 மாலை 5.30 இடம் : இரா  அரண்மனை (Erra Palace, 10 Karachi Drive, Markham, Ontario) [பெரிதாகக் காணப்படங்களை அழுத்துக.]  

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது! – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி  இந்தி ஒழியாது!    இந்தித்திணிப்பு என்பது புதிய செயல்போல் தலைவர்கள் அவ்வப்பொழுது அறிக்கை விடுவதும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கமாக உள்ளது. இந்தியை  எதிர்த்து அறிக்கை விடுவதால் எப்பயனும் இல்லை.   “இந்தியைத்திணித்தால் எரிமலையாவோம்”, “இந்தியைத்திணித்தால் புரட்சி வெடிக்கும்! தூங்கும்புலியை இடறாதீர்!”, “நாங்கள் இருக்கும் வரை இந்தியைத்திணிக்க விடமாட்டோம்” என்பனபோன்ற வெற்றுக்கூச்சல்களை அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும்.    நம்மைப்போல், “என்றும் இந்தி! இன்றும் இந்தி!” என்று சொல்லிக்கொண்டிராமல் எங்கும் எதிலும் இந்தியை மத்திய அரசு திணித்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், எப்பொழுதாவது…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு)   தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க   வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி  குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…