புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்

புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள்  – மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு – வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும்  இணைந்து  தேசிய நூலக வாரப் பொன் விழா  நடத்தின.   இவ் விழாவில், பாடப்புத்தகங்கள்  தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்  மரு.எசு.குமார் குறிப்பிட்டார்.         இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர்…

‘வள்ளுவர் கண்ட இல்லறம்’ – சி.இலக்குவனார் : 1. மீள்பதிப்புரை

 ‘வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை’ பதிப்புரை     தமிழுக்கென வாழ்ந்த பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் குறிப்பிடத்தக்கப் பணிகளுள் ஒன்று குறள்நெறியைக் குவலயம் எங்கும் ஓங்கச் செய்ய வேண்டும் என்று பாடுபட்டது. ‘இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவர்‘ எனத் தமிழ் உலகத்தவரால் அன்புடன் அழைக்கப் பெற்ற பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், மாணாக்கர்களிடம் கற்பிப்பதை மட்டும் தம் கடமையாகக் கொள்ளாமல், மக்களிடையேயும் சங்க இலக்கிய மாண்புகளையும் தொல்காப்பியச் சிறப்புகளையும் திருக்குறள் நெறிகளையும் விளக்குவதையும் பரப்புவதையும் தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்; இலக்கிய உலாக்களை அமைத்துக்…

தமிழ்த் தென்றல் – கி.ஆ.பெ. 1/2

தமிழ்த் தென்றல்   தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் தமிழ்த். தொண்டு, தொழில் தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு, சமூகத் தொண்டு ஆகிய ஐவகைத் தொண்டும் தன்னலங் கருதாது செய்து வந்த தமிழகத்தின் தனிப் பெருந்தலைவர். பிற்காலத்தில் இத்தனையிலிருந்தும் ஒய்வு எடுத்துக் கொண்டு, இராயப்பேட்டையிலுள்ள அச்சகத்தில் தன் தமையனார் உலகநாத(முதலியா)ர் அவர்களுடன் இருந்து, எழுத்துப்பணி புரிந்தபொழுது நான் அடிக்கடி அவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்வதுண்டு. மாறுபட்ட கட்சியினரிடத்தும், மாறுபட்ட கொள் கையுடையவர்களிடத்தும் சிறிதும் வெறுப்படையாமல் மனம் திறந்து பேசி மகிழ்ச்சியடையும் பெருங்குணத்தை, அவரிடம்…

பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா

  கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 6.00 மணி  பிட்டி தியாகராயர் கலையரங்கம்   கோ.சா.(சி.என்.செட்டி) சாலை, தி.நகர், சென்னை -17 அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேதங்களில் ஒன்றான ‘பொருட்டமிழ் வேதம்’ நூல் வெளியீட்டு விழா   தெய்வத்தமிழ் அறக்கட்டளை செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30   சிறிதளவு உரிமை கிடைத்தால், விடைத்துக் கத்தும் இயல்பினர், அடிமைப்படுத்தினால் அடங்கி வாழும் பண்பினர், தடம் புரண்டலையும் தறுதலைக் குட்டிகள் என்றெல்லாம் வருணிக்கிறார் கவிஞர். மக்கள் மக்களாய் வாழ மக்களே தக்க தீர்ப்பைத் தருவரோ என்றும் எண்ணுகிறார்.   எழுத்தாளர்கள் பற்றி மீண்டும் சொல் சாட்டை சொடுக்குகிறார் பெருங்கவிக்கோ. ‘ஏற்று வளர்ப்பதே வாழ்நா ளெல்லாம் பயிலும் நெறியாய்ப் பாரில் வாழ்பவர் உயிலில்* ஒருவர்க்கு உரிமை செய்தல் போல் அயில்வேல்…

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்

கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017 மாலை 3.30 மணி தமிழ் இலக்கிய மன்றம் பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம் கவியரங்கம் கருத்தரங்கம் சிறப்புரை :  புலவர்  செம்பியன் நிலவழகன் த.மகாராசன்

மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!  – இலக்குவனார் திருவள்ளுவன்

  மாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே! ஈழமலர்ச்சிக்காகவே!    தமிழீழத்தை மனக்கண்களில் கண்டவர்கள்! தங்கள்  நெஞ்சில் சுமந்தவர்கள்! மனக்கண்களில் கண்ட தமிழீழம் உருவாகும்; அங்கே ஈழத்தமிழ் மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தன்னுரிமையுடனும் தன்மதிப்புடனும் வாழ்வார்கள்; அடிமைத்தளையறுந்து, பட்ட துயரங்கள் மறைந்து, இன்னல்கள் நீங்கி, இன்பவாழ்வு வாழ்வர்; தமிழும் தனக்குரிய இடத்தை நாட்டிலும் உலகத்திலும் பெறும்; என்னும் நம்பிக்கையில், தங்கள் இன்னுயிரை நீத்தவர்கள் மாவீரர்கள்! இவர்களை வணங்குவது நமக்காகத்தான்! ஆம்! நமக்காக மறைந்தவர்களை – புகழால் வாழ்பவர்களை – நாம் வணங்குவது அவர்கள் கனவுகளை நாம்…

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே!   தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும்  இணைஉரிமையும்  பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர  வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர்  போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும்  மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது.  மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  04 கழகப் புலவர்களும் பிறரும் இயற்றிய பாடல்களையே பிற்காலத்தார் பொருள் பற்றியும், பாவகை பற்றியும், அடிகள் பற்றியும் பல பிரிவுகளாகத் தொகுத்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்டவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவினுள் அடங்கியுள்ளன. எட்டுத்தொகை என்பதனுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை அடங்கும். பத்துப்பாட்டு என்பதனுள் திருமுருகாற்றுப்படை,  பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி,…

தமிழக வரலாறு  4/5 – மா.இராசமாணிக்கனார்

(தமிழக வரலாறு  3/5 தொடர்ச்சி) தமிழக வரலாறு  4/5 கல்வி நிலை   சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை….

இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 தொடர்ச்சி) இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 ஆளுமை நெறி :   தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இல்லாச்  சூழலே நாம் அடையும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாக அமைகின்றது. தமிழர்க்கு எதிரான  துயரங்களைக்  களைய முடிவெடுக்க வேண்டியவர்கள் பிற மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ்ப்பகுதிகளைத் தமிழ் நிலத்துடன் சேர்ப்பது, சிங்களவர்கள் மீனவர்களுக்கு எதிரான படுகொலைகள், ஈழத்தில் உருவாக்கப்பட்ட பேரின அழிவு முதலானவற்றில்  தலைமைப் பொறுப்புகளில் உள்ள பிறர், அவரவர் மொழியினருக்கும் இனத்தினருக்கும் சார்பாகவும் நமக்கு எதிராகவும் நடப்பதே …

சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு , மசுகட்டு

  சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு      வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி‘ எனும் கட்டுரைகள், மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குநர் திருவாளர் இரவி தமிழ்வாணன் உதவியுடன் அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.   அதன் வெளியீட்டு விழா, ஓமான் தலைநகர் மசுகட்டில் சீரோடும்  சிறப்போடும் கடந்த கார்த்திகை 04,  2018   : 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.   ஓமனுக்கான இந்தியத்தூதர் மேதகு இந்திரமணி பாண்டே நிகழ்ச்சியைக்  குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி…

1 2 6