உ.வே.சா.வின் என் சரித்திரம் 73 : திருவாவடுதுறைக் காட்சிகள் 2.

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 72 : திருவாவடுதுறைக் காட்சிகள் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் 44 தொடர்ச்சிதிருவாவடுதுறைக் காட்சிகள் 2 அங்கே சுவாமி சந்நிதியிலுள்ள (இ)ரிசபம் மிகப் பெரியது. “படர்ந்தஅரசு வளர்ந்த (இ)ரிசபம்” என்று ஒரு பழமொழி அப்பக்கங்களில் வழங்குகிறது.அவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிருவாகத்துக்கு உட்பட்டது.இயல்பாகவே சிறப்புள்ள அவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும்சிறப்புடையதாக விளங்குகிறது. உற்சவச் சிறப்புகுரு பூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் இரதோத்சவம்நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். இரதசப்தமியன்று தீர்த்தம். பெரும்பாலும் இரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்றுஅடுத்தே வரும்; சில வருடங்களில்…

பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம் சென்னை வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம் முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 Act Done Under Colour Of Office பதவியைச் சாக்கிட்டு எதனையும் செய்தல் / பதவியின் உருவில்  அதிகாரப் போர்வைச் செயல் எத்தகைய அரசாங்கப் பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத…

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் ! தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில்  கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம். இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்…

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம்

(தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்-தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்க் கொடியேற்றம் தமிழன் சீர்மைதமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன்…

வள்ளுவர் சொல்லமுதம் -5 : அ. க. நவநீத கிருட்டிணன் : கல்வியும் கேள்வியும்

(வள்ளுவர் சொல்லமுதம் -4 : அ. க. நவநீத கிருட்டிணன் : மனையும் மக்களும்.2 – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம்4. கல்வியும்‌ கேள்வியும்‌ மக்களை மாக்களினின்றும்‌ பிரித்துக்‌ காட்டுவது அவர்‌ பெற்ற கல்வியறிவே. பல்வேறு நூல்களைக்‌ கற்றலால்‌ பெற்றிடும்‌ அறிவே கல்வியாகும்‌. கற்றறிந்த நல்லார்‌ சொல்லக்‌ கேட்டலால்‌ பெற்றிடும்‌ அறிவு கேள்வியாகும்‌. பலகால்‌ பழகிய பழக்க முதிர்ச்சியின்‌ விளைவாலாகிய அறிவு அனுபவமாகும்‌. இங்ஙனம்‌ அறிவை முக்கூறு படுத்தலாம்‌.முதற்கண்‌ கல்வியறிவை நோக்குவோம்‌. கல்‌ என்ற சொல்‌, தோண்டு என்ற பொருளைத்‌ தருவது. உள்ளத்தில்‌ ஆழ்ந்த அறியாமையைக்‌…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்:136-140

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 136-140 136. Abort   கருச்சிதைவுறு   கருக்குலைதல், இடைமுறி, இடையழி, கருச்சிதை, கருப்பங்கரைதல், கருச் சிதைதல், காய்விழுதல், கருச் சிதைந்துவிழுதல், சிதை, செயன்முறி, செயல்முறிப்பு .  இவற்றுள் கரு தொடர்பில்லாத சொற்கள் பொதுவான முறிவுகளைக் குறிப்பன.   abortus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருச்சிதைவு. இதிலிருந்து abort > abortion   உருவாயின. 137. Aborticide கருக்கொலை  தானாகவே கருவைக் குழந்தையாக வளரவிடாமல் அழிப்பது/கொல்லுவது கருக்கொலை. 138. Abortion…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 34 : முத்தக் கூத்தன் கொலை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 33 : தொடர்ச்சி) பூங்கொடி அயரினும் இவ்வுணா அருந்தேன் என்றனன்;அடித்தனர் அவனை அருங்கேன் என்றனன்;அடித்தனர் அவனை அஞ்சேன் என்றனன்;அடித்தனர் அடித்தனர் அடித்தே கொன்றனர்! அந்தோ அந்தோ ஆவி துறந்தனன்; 140 நொந்த அப்பிணத்தை மூடிய கல்லறைசுடுகாட் டாங்கண் தோன்றும்; அதுதான்உடுவான் நிலவால் ஒளிபெற் றிலங்கும்,சித்தம் கலங்கேல், அதன்முன் செல்லின் முத்தக் கூத்தன் முழுவலி வாய்க்கும்’ என் 145றுரைத்ததன் பின்னர் ஒள்ளிழை மேலும் ‘இசை, துறை வல்லாய் இரைகடல் நாப்பண்கடல்நகர் என்னும் ஒருநகர் உளதவண்மடமையில் மூழ்கிய மக்கள் மலிந்துளார்;அப்பெரும் மடமை அகற்றுதல்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 : தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்., ★…

ஆளுமையர் உரை 81 & 82 : இலக்குவனாரின் படைப்புமணிகள்  திறனுரை : இணையஅரங்கம்

தமிழே விழி!                                                               தமிழா விழி! செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள், 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 81 & 82 : இணைய அரங்கம் தை 21. 2055, ஞாயிறு 04.02.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: திரு ப.சிவக்குமார் தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் கவிஞர் பொறி. கந்தையா செயபாலசிங்கம், செயலிகள் தன்னியக்க ஆய்வு வல்லுநர், …

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்-131-135

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன் : 126-130 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  131-135 131. Abolition of titles   பட்டங்களை ஒழித்தல் விருதுகளை ஒழித்தல்‌   இந்திய அரசியல் யாப்பு 18 ஆம் இயல் பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)பற்றிக் கூறுகிறது. 132. Abolition of untouchability தீண்டாமை ஒழிப்பு   தீண்டாமை என்பது மனிதருள் இனம், பிறப்பு, குலம் காரணமாக உயர்வு தாழ்வு கற்பித்து வேற்றுமை பாராட்டும் குமுகாயக் குற்றம்.    அரசியல் யாப்பு…