தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4-தொடர்ச்சி) ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு – குருநாதன் சிவராமன் சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் பற்றவைத்த நெருப்பு சனாதனிகளைச் சுட்டெரிக்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். “சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த உதாரணம் ஐயா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்தப் பேச்சு வழக்கம்போல அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது. ஐயா வைகுண்டரைக்…

திருச்சி அறிவாளர் பேரவை, முப்பெரும் விழா, சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது வழங்கல்

திருச்சி அறிவாளர் பேரவைமுப்பெரும் விழா பேரவையின் 24 ஆவது ஆண்டு விழாநிறுவுநர் பிறந்த நாள் விழாசான்றோர் பெருந்தகை விருது விழா கார்த்திகை 24, 2054 ஞாயிறு 10.12.2023 காலை 10.00 சிறப்பு விருந்தினர் மாண்புமிகு ந.நல்லுசாமிமேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு வாழ்த்துரை தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி முன்னிலைதொழிலதிபர் பி.கே.தியாகராசன்தொழிலதிபர் வாழையிலை மனோகரன்துவரங்குறிச்சி ந.பாலசுப்பிரமணியன்நாயகன் ஆ.மோகன் ஆட்சித்தமிழறிஞர்இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு நிறுவுநர் கோ.அரங்கநாதன் அவர்களின் நினைவாக, சீர்மிகு சான்றோர் பெருந்தகைவிருது வழங்கிச் சிறப்பிக்கிறோம். தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.பேராசிரியர் முனைவர்…

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு  : புதிய கால வரையறைகள்

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு  : புதிய கால வரையறைகள் மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு, வணக்கம். சிகாகோவில் நடைபெறவுள்ள ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வருகிறீர்கள் என்பதை அறிவோம். கடந்த சில நாட்களாக கட்டுரைச் சுருக்கம் அனுப்பவதற்கான கால வரையறையை நீடிக்கப் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஆய்வுக்குழுவும் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கால வரையறைகள் பின்வருமாறு: ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய நாள்: 15, திசம்பர்.2023 (சிகாகோ நேரம்) முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 4/4 இந்திய நாட்டின் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்த வரையில் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஓலைச் சுவடிகளால் வாழ முடியாது என்பதையும், 300 ஆண்டுகளுக்குள் இவை படி எடுக்கப்படவில்லையென்றால் அடியோடு அழிந்து விடும் என்பதையும், இவ்வாறே எங்கள் தமிழ்ச் சமுதாயம் அச்சு இயந்திரம் வருவதற்கு முன்னரே ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை இழந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டேன். அச்சு இயந்திரம் வந்த பின்பும் 53,000 ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 64 : யான் பெற்ற நல்லுரை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 63 : நான் கொடுத்த வரம் 2 -தொடர்ச்சி) யான் பெற்ற நல்லுரை 39 மறுநாள் காலையில் நாங்கள் திருவிடைமருதூரைவிட்டுப் புறப்பட்டோம். பட்டீச்சுரத்திற்குக் கும்பகோணத்தின் வழியாகவே போகவேண்டும். கும்பகோணத்தில் வித்துவான் தியாகராச செட்டியாரைப் பார்த்துவிட்டுச் செல்லவேண்டுமென்பது பிள்ளையவர்களின் கருத்து. தியாகராச செட்டியார் தியாகராச செட்டியாருடைய பெருமையை நான் பல நாட்களுக்கு முன்பிருந்தே கேள்வியுற்றவன். கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக இருந்த அவர் சிறந்த படிப்பாளி என்றும் அவரிடம் படித்த மாணாக்கர்கள் எல்லாரும் சிறந்த தமிழறிவுடையவர்கள் என்றும் சொல்லிக்கொள்வார்கள். கல்லூரியில் உள்ள…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 3/4 உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் ஓலைச் சுவடிகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஆசியவியல் ஆய்வு நிறுவனம் சேகரித்தது. 1993இல் எடுக்கப்பட்ட ஆய்வின் படி 53,000 தமிழ் ஓலைச் சுவடிகள் உலகமெங்கும் உள்ள தனிநபர்கள், மற்றும் அமைப்புகள், நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தியது. மேலும் இந்த 53,000 தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 30,000க்கு மேற்பட்ட ஓலைச் சுவடிகள் மருத்துவம் போன்ற பழைய தொன்மையான அறிவியல்…

ஊரும் பேரும் 58 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – கருந்திட்டைக்குடி

(ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – வைப்புத் தலங்கள் – தொடர்ச்சி) கருந்திட்டைக்குடி தஞ்சை நகரத்தைச் சேர்ந்த சிற்றூர்களில் ஒன்று கருந்திட்டைக்குடி, முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அவ்வூர் சுங்கந் தவிர்த்த சோழ நல்லூர் என்னும் பெயர் பெற்றது. அது வைப்புத் தலங்களில் ஒன்றென்பது,“கற்குடி, தென்களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி” என்ற திருநாவுக்கரசர் பாட்டால் விளங்கும். அவ்வூர்ப் பெயர் இப்பொழுது கரந்தட்டாங்குடி என மருவி வழங்கும். தக்களூர்‘தஞ்சைத் தளிக்குளத்தார் தக்களூரார்‘ என்று திருநாவுக்கரசரால் குறிக்கப்பெற்ற தக்களூர் இப்பொழுது காரைக்கால் நாட்டில் திருநள்ளாறு என்னும்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 17 – அ. க. நவநீத கிருட்டிணன்: தில்லையின் சிறப்பு

(தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை-தொடர்ச்சி) தில்லை மாநகரம்11. தில்லையின் சிறப்பு தில்லைச் சிதம்பரம் சைவ சமயத்தைச் சார்ந்த மக்களுக்குச் சிறப்பு வாய்ந்த தெய்வத்தலம் தில்லையாகும். அதனால் சைவர்கள் இத் தலத்தினைக் ‘கோயில்’ என்றே குறிப்பிடுவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புற்ற தலம் இதுவாகும். ஆதலின் இத் தலத்தைப் ‘பூலோகக் கயிலாயம்’ என்றும் போற்றுவர். ஐம்பெரும் பூதங்களின் வடிவாக இறைவன் விளங்குகிறான் என்ற உண்மையை விளக்கும் தலங்களுள் இது வான் வடிவாக…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 2/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்-தெ்ாடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் 2/4 பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கிச் சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு.. ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு நாட்டைச்…

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023, பெங்களூரு, சிறந்தநூல் போட்டி முடிவுகள்

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023 பெங்களூரு சிறந்தநூல் போட்டி முடிவுகள் இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு: முதல் பரிசு: உரூ.5,000 சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம் -பேரா.பாலசுந்தரம் இளையதம்பி இரண்டாம் பரிசு: உரூ.3,000 தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம் -இலக்குவனார் திருவள்ளுவன் மூன்றாம் பரிசு: உரூ.2,000 அலைவீசும் நிலாவெளிச்சங்கள் -கவிஞர் கே.சி.இராசேந்திரபாபு சிறப்புப்பரிசு: உரூ.2,000 கனவொளியில் ஒரு பயணம்…

திருக்குறள்மாநாடு – நூற்பதிவு நாள் நீட்டிப்பு

ஐந்தாவது திருக்குறள் மாநாடு பங்குனி 23 -25, 2055 **** 5-7/04/2024 சிகாகோ நூற்பதிவு நாள் நீட்டிப்பு அன்பு கெழுமிய திருக்குறள் ஆய்வுப்படைப்பாளர்களுக்கு வணக்கம். மேற்குறித்தவாறான திருக்குறள் மாநாட்டில் புதியதாகத் திருக்குறள் நூல் படைப்பாளர்களுக்கு வெளியீட்டு நிகழ்ச்சியும் முன்னரே திருக்குறள் தொடர்பான நூல் வெளியிட்டர்களுக்கு நூலறிமுக நிகழ்ச்சியும் நடைபெறும் என்றும் உரிய பதிவை 30.11.23 ஆம் நாளுக்குள் மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தோம். தத்தம் பெயர், நூற்பெயர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். மாநாட்டுச் செய்திகளுக்கான தளம் : https://thirukkuralconference.org எனவும் தெரிவித்துஇருந்தோம். பலரும் ஆர்வத்துடன் பங்கேற்பதாகத் தெரிவித்தும்…

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 1/4 – குலோத்துங்கன்

(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்லூரியில் சாதி விளையாட்டு-தொடர்ச்சி) உதிரும் தமிழ் மலர்கள் (ஓலைச் சுவடிகள்) உதிரும் தமிழ் மலர்கள் 2/4பக்தி இயக்கம் எழுந்தபோது சமயக் காழ்ப்பின் காரணமாகப் பல ஏடுகள் எரிக்கப்பட்டன என்ற வரலாறு உண்டு. ஆனால் சமண சமயத்தைத் தழுவிய மக்களின் வீடுகளில் அத்தகைய ஏடுகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் ஆதீன மடங்களிலும், சமண சமயத்தின் மீது இருந்த காழ்புணர்ச்சி நீங்கி சமண சமய இலக்கிய ஏடுகளையும் பாதுகாத்தார்கள் என்பது வரலாறு.. ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் பல ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சு…