தமிழ் வளர்த்த நகரங்கள் 16 – அ. க. நவநீத கிருட்டிணன்: தமிழ் வளர்த்த நெல்லை
(தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர் – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நெல்லை மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல்களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும்….
தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள்
(தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (3)(ஆ) தமிழ்த் தேசியத்தில் முரண்பாடுகள் நேர்காணல்: மினர்வா & நந்தன் மா.பொ.க.வில்(சி.பி.எம்மில்) இருந்து வெளியேறியதும் தமிழ்த் தேசியச் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினீர்கள் அல்லவா? இந்தியா இலங்கைக்குப் படை அனுப்புகிறது. ஈழத்தில் தமிழ் மக்கள் இந்தியப் படையால் கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதுதான் திலீபன் மன்றத்துக்கான அடிப்படை. விடுதலைக் குயில்கள் அமைப்பு நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியனுடன் இணைந்து 1993இல் தமிழ்த்…
தோழர் தியாகு எழுதுகிறார் : கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும் – தொடர்ச்சி) கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் அந்த நேரத்தில் மா.பொ.க.(சி.பி.எம்.) மாவட்ட மாநாடு நடைபெற்றது. நான் குழு(கமிட்டி) பதவியை விட்டு விலகினேன். இதற்குக் காரணமாக, ‘என் கீழே இருக்கும் உறுப்பினர்களிடம் என்னால் அதிக நாட்கள் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை விட்டு விலகுகிறேன்’ என்று சொன்னேன். இதுதொடர்பாக உ.இரா. வரதராசனுடன் கடுமையான விவாதம் நடைபெற்றது. ‘குழுப் பதவியை விட்டு விலகினாலும் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவீர்கள்’ என்று அவர் கூறினார். ‘நீங்கள் யார்…
சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20: இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன் : 1-10 – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 11- 20 (தொடரும்) இலக்குவனார் திருவள்ளுவன்
செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்
செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் தமிழ்வாழ்த்து (கலித்துறை) அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய் இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய் பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய் பகர்வாய் பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே! (நேரிசை வெண்பா) தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர் சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே முந்தியே காப்பார் முனைந்து (நேரிசை வெண்பா) தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன் கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ் கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த வல்லார் இலக்குவனார்…
தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910), விடுதலை
தமிழ்ப் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910) இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் சிற்றூரில் சிங்கார வேலர் – இரத்தினம் அம்மையார் ஆகியோரைப் பெற்றோராகக் கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் படித்த அவர் முதுகலைப் பட்டங்களையும் பெற்றார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் கற்றுத்தேர்ந்தவர்.தொல்காப்பியத்தை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் என்பது அசாதாரணமானது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகப் போப்பைச் சந்தித்த போது இந்நூலினைத்தான் நினைவுப் பரிசாக அளித்தார்.எழிலரசி உள்ளிட்ட கவிதை நூல்கள், தமிழ்…
தோழர் தியாகு எழுதுகிறார் : மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்
(தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம் – தொடர்ச்சி) மா.பொ.கட்சியின் ஈர்ப்பும் விலகலும்: தியாகு கீற்று நேர்காணல் (3)(அ) : மினர்வா & நந்தன் சிறையில் இருந்து வெளியே வந்ததும் மா.பொ.க.(சி.பி.எம்)-இல் சேருகிறீர்கள். அங்கு உங்கள் செயல்பாடு என்னவாக இருந்தது. அங்கிருந்து வெளியேற என்ன காரணம்? நானும் தோழர் இலெனினும் சிறையில் இருந்த படி கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடிநிலை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மா.பொ.க.(சி.பி.எம்.) தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்குசியக் கட்சியின் சோதிபாசு, ஈ.எம்.எசு, பி.இராமமூர்த்தி போன்ற…
பூங்கொடி 24 : தாமரைக்கண்ணி தோன்றிய காதை
(பூங்கொடி 23 : காமங் கடந்தவள் – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் கலக்கம் கோமகன் விழியிற் குலமகள் படுதலும் காமங் கதுவிய கருத்தின னாகிப் படிப்பகம் புகுதப் பார்த்தனன்; `அடஓ! சித்தமும் விழியும் சேர்ந்து பதிந்திடப் புத்தகம் பயில்வோர் பொருந்திடன் அன்றோ! புத்தகம் புரட்டும் புல்லென் ஓசையும் உரவோர் உயிர்க்கும் ஓசையும் அன்றி அரவம் சிறிதும் அறியா இடமாம்; அறிவை வளர்க்கும் ஆய்வுரை நூல்பல 5 நிறைதரும் அவ்வகம் தூய்மை நிலையம்; கொள்கைச் சான்றோர் குழுமும் நூலகம்; உள்ளிற் செல்லுதல்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) ★ (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
தோழர் தியாகு எழுதுகிறார் : மூலதனம் தமிழாக்கம்
(தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு – தொடர்ச்சி) கீற்று நேர்காணல் (2)(இ) : மினர்வா & நந்தன் மூலதனம் தமிழாக்கம் சிறையில் இருக்கும் போது நீங்கள் செய்த மிக முக்கியமான பணி மூலதனத்தை மொழிபெயர்த்தது. அந்த எண்ணம் எப்படி ஏற்பட்டது? சிறைக்குச் செல்லும் வரை மார்க்குசு, இலெனினின் எழுத்துகளை அதிகம் படித்தது இல்லை. படித்திருந்தால் சாரு மசூம்தாரின் எழுத்துகள் என்னை ஈர்த்திருக்காது. சிறைக்குள் நான் முதலில் படித்தது இலெனினின் புத்தகங்கள். அதுதான் எல்லாப் புத்தகங்களையும் தேடிப் படிக்கும் ஆர்வத்தை…
தோழர் தியாகு எழுதுகிறார் : நாம் வந்த பாதை தவறு
(தோழர் தியாகு எழுதுகிறார் : சிறை வாழ்க்கை – தொடர்ச்சி) நாம் வந்த பாதை தவறு அப்போதிருந்த மனநிலைப்படி ‘இந்தியப் புரட்சி என்பது சாத்தியம். ஆனால் அதற்கு மொழி தடையாக இருக்கிறது. அதைக் கடப்பதற்கு இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்ற கருத்தே எனக்கு இருந்தது. இதேபோல் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு எங்களுக்குள் கடுமையான விவாதம் நடைபெற்றது. உங்களுடன் கைதான மற்றத் தோழர்கள் இந்த விவாதத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? அப்போது நக்குசலைட்டு கைதிகள் பலருக்கு ‘இன்னும் சில ஆண்டுகளில் புரட்சி வெற்றிபெற்று விடும்’…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை – தொடர்ச்சி) என் சுயசரிதை 21. கிழ வயது இந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சட்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறித்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்குக் கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது. என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம்…
