தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (5)
(தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (5) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் பற்றிய நந்திதா அக்குசரின் கட்டுரை (தாழி மடல் 288) படித்தீர்கள் அல்லவா? மீண்டும் படியுங்கள். பொதுக் குடியியல் சட்டம் பற்றிய வினாவைப் பாசக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோணத்தில் பார்த்தல் எப்படிப் பிழையானது என்பதை விளங்கிக் கொள்ள அது உதவும். இயங்கியல் அணுகுமுறையோடு இச்சிக்கலில் நாம் முகங்கொடுக்க வேண்டிய முரண்பாடுகளையும்…
தோழர் தியாகு எழுதுகிறார் : நந்திதா அக்குசரின் பொதுக் குடியியல் கட்டுரை.
(தோழர் தியாகு எழுதுகிறார் : பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டத்தைப் பெண்கள் வேண்டுவது ஏன்? ” -நந்திதா அக்குசர் மதச் சுதந்திரம் பொதுக் குடியியல் சட்டத்தை மறுக்க முடியும் என்றால், எல்லா மதத்தினரும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரமாக மீற முடியும் என்று அருத்தமா? பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் நாட்டைப் பற்றிக் கொண்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெண் வெறுப்பாளர்களால் தூண்டப்படுகின்றன. சிறுபான்மை உரிமைகள் என்பதைப் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக…
தமிழ் வளர்த்த நகரங்கள் 13 – அ. க. நவநீத கிருட்டிணன்: வேய்முத்தர்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 12. – அ. க. நவநீத கிருட்டிணன்: திக்கெலாம் புகழுறும் திருநெல்வேலி – தொடர்ச்சி) புராணம் புகழும் நெல்லை வேணுவனத்தில் வேய்முத்தர் திருநெல்வேலியின் தெய்வ மாண்பை விளக்கும் புராணங்கள் இரண்டு. அவை திருநெல்வேலித் தல புராணம், வேணுவன புராணம் என்பன. இப் புராணங்களால் பண்டை நாளில் இந் நகரப் பகுதிகள் பெரியதொரு மூங்கிற் காடாக இருந்தது என்று தெரிய வருகிறது. அதனாலயே நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயரும் வழங்கி வருகிறது. இப் பெருமான் மூங்கிலின் அடியில் முத்தாக முளைத் தெழுந்த…
தமிழ்ப் பெரியார் திரு. வி. க. 6. – வ.உ.சிதம்பரனார்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 5. உயிர்த்தொண்டு – தொடர்ச்சி) தமிழ்க்கலை 6. வ. உ. சிதம்பரனார் [9-11-47 ஞாயிறன்று சென்னை செயின்ட்மேரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கழக மகாநாட்டில் தோழர் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.) நான் வ. உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள் படத்தைத் திறப்பேன் என்றார் தலைவர். இத்தனிப்பேற்றினை வழங்கிய கழகத்தாருக்கும் உங்களுக்கும் என் நன்றி உரியதாகுக. நான் இங்கு எக்கட்சியின் சார்பிலும் வரவில்லை, நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. சிலர் நினைக்கிறார்கள்,…
தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4)
(தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (4) இனிய அன்பர்களே! பொதுக் குடியியல் சட்டம் தொடர்பான உரையாடலை அது வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதமாகச் சுருக்கி விட முடியாது, ‘எடு அல்லது விடு’ என்று முடிவு காண முடியாது. ஆர்எசுஎசு – பாசக கும்பல் பொதுக் குடியியல் சட்டம் என்று சொல்கிறதே தவிர, அதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை. வரைவு ஏதும் வெளியிடவில்லை. அவர்களின் நோக்கமும் நமக்குத்…
தோழர் தியாகு பேசுகிறார்: இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி?
(தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)-தொடர்ச்சி) பொதுக் குடியியல் சட்டம் இந்துச் சட்டம் இந்தியச் சட்டமானது எப்படி? இந்தியாவில், முதலாண்மைப் பெருங்குழுமங்களுக்கும் இந்துக் கூட்டுக் குடும்பத்துக்குமான பிணைப்புச் சொத்தின் மீதும் மூலமுதலின் மீதும் குடும்பத்தின் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தனித்தன்மையதாக உள்ளது எனக் கண்டோம். ஒரு சட்டமுறை நிறுவனமாக இந்தச் சலுகை இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, இது இந்துத் தனியாள், குடும்பச் சட்ட நெறிகளில் வரை யறுக்கப்பட்டுப் புனிதமாக்கப்படுகிறது. அரசமைப்பில் கூறியுள்ளபடி முசுலிம், கிறித்தவர், பார்சி அல்லது…
பூங்கொடி 21 – கவிஞர் முடியரசன்: கோமகன் ஆவல்
(பூங்கொடி 20 – கவிஞர் முடியரசன்: புற்றரைக் காட்சி – தொடர்ச்சி) பூங்கொடி கோமகன் ஆவல் மானிகர் விழியாள் மலர்வனம் புகுசொல் தேனெனப் பாய்ந்தது திருமகன் செவியில்; ‘ஒண்டொடி அவள்மன ஒப்புதல் பெற்றுத் தண்டமிழ் நிகர்க்கும் தையல் கொழுநன் ஆவேன் யான்’ என ஆவல் துரப்பக் காவிற் புகுந்துள பாவையைக் காண்பான் வில்விடு அம்பென விரைந்தனன் கோமகன்; பூங்கொடி வெருவுதல் புகுவோன் றன்னைப் பூங்கொடி நோக்கி ‘இகுளை! இம்மகன் என்மேற் காதல் 60 மிகுமனத் தானென மேலொரு நாளில் தேன்மொழி அனையிடம் செப்பக் கேட்டுளேன்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904-910 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) (தொடரும்)உவமைக்கவிஞர் சுரதாதமிழ்ச்சொல்லாக்கம்
தோழர் தியாகு எழுதுகிறார்- “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3)
(தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? – தொடர்ச்சி) “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் ! (3) காவிக் கூட்டத்தின் பொதுக் குடியியல் சட்டமும் இசுலாமியப் பெண்ணுரிமையும் பொதுக் குடியியல் சட்டம் பற்றிய தொடர் மடலுக்குச் செல்லுமுன்… ஒருசில செய்திகளைப் பகிர வேண்டும். 1) இந்த உரை யாடலில் சொத்துரிமை , வாரிசுரிமை போன்றவற்றுக்கான சட்டங்கள் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்பிய போது, தோழர் சமந்தா நக்குவெய்ன் மார்க்குசியப் பள்ளிக்குச் சென்று வந்த பின் அங்கு…
ஆளுமையர் உரை 73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. ((திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் 73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023 ஐப்பசி 19, 2054 ஞாயிறு 5.11.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) ஆளுமையர் உரை தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 21 : 16. இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் (1)
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 20 : 15. பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது-தொடர்ச்சி) இக்காலம் நாடகக் கலைக்காக உழைத்த சிறுதொண்டுகள் 1938-ஆம் வருசம் முதல் நாடகமாடுவதை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொண்டே வந்தேன் என்று சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம் எனக்கு விருத்தாப்பியம் மேலிட்டதேயாம். ஆகவே இது முதல் நாடகக் கலைக்காக உழைத்ததைப் பற்றி எழுதுகிறேன். 1939-ஆம் வருசம் உலக இரண்டாம் யுத்தம் ஆரம்பித்த பிறகு நாடகக்கலையே இத்தமிழ் நாட்டில் உறங்கிவிட்டது எனலாம் 1942-ஆம் வருசம் சென்னையிலிருந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் : அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : “பொதுக் குடியியல் சட்டம்” – புரட்டும் புரளியும் (2) – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அமித்துசா வாயால் இனவழிப்பு பேசப்பட்டதா? வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தால் கூட தெப்பமாகத் தெரியும். அந்தத் துரும்பைப் பிடித்துக் கொண்டு கரையேறி விட முடியாதா என்றுதான் நினைப்பான். இனவழிப்பு முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு ஆண்டுகள் பதினான்கு ஆன பிறகும் நீதியின் ஒளிக்கதிர் கண்ணுக்கு எட்டாத அவலநிலையில் இருக்கும் தமிழீழ மக்களுக்கு யாராவது தமிழினவழிப்பு என்று பேசி விட்டாலே மனம் நிறைந்து…
