உ.வே.சா.வின் என் சரித்திரம் 17
(உ.வே.சா.வின்என்சரித்திரம் 16 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 அத்தியாயம் 10 இளமைக் கல்வி முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விசயத்தில் அவர் யாரிடமும் பட்சபாதம் காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று…
ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி
கார்த்திகை 14, 2053 / 30-11-2022 புதன்கிழமை மாலை 6.30 மணி ஆரியமா, திராவிடமா?விளக்கப் பொதுக்கூட்டம் சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை விளக்க உரை தோழர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் – திராவிட இயக்கத் தமிழர் பேரவை
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 537-541 
( தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 537-541 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 537. Watch – மணிக்கூடு 538. Latrine – மலசலக்கூடம் 539. dash – கீறல் 540. Jfen – இணைமொழிக்குறி…
தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) – இலக்குவனார் திருவள்ளுவன்
தங்குமிடம் அளிப்போரே! தமிழுக்கும் தங்குமிடம் தாருங்கள்! (தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 12) (“சுவை உணவு தருவோரே சுவைத்தமிழையும் தாரீர்!” தொடர்ச்சி) முந்தைய கட்டுரையில் சுவை உணவு தருவோர், சுவைத்தமிழையும் தர வேண்டுமாய் வேண்டியிருந்தோம். அதற்கு முன்னர் “உணவகத்தோரே! உறைவகத்தோரே! தமிழ்ச்சுவை அழிக்காதீர்” என எழுதியிருந்தோம். இரண்டின் தொடர்ச்சிதான் இக்கட்டுரையும். தமிழ் நாட்டிலுள்ள உறைவகங்கள் – தங்கும் விடுதிகள் – தமிழருக்கானவை யல்ல என அதன் உரிமையாளர்கள் கருதுகின்றனர் போலும். ஆனால், 7% இற்கும் குறைவானவர்களே அயல்நாட்டினராக இங்கு வருகின்றனர். அனைவருமே ஆங்கிலேயர்கள் எனச்…
தமிழ்நாடும் மொழியும் 16; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி
(தமிழ்நாடும் மொழியும் 15 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 16 பல்லவப் பேரரசு தொடர்ச்சி ‘தந்தையை ஒப்பர் மக்கள்‘ என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே. சீனயாத்திரிகனான யுவான்சுவாங்கு இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும்…
தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…
தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.): மாவீரர்களின் பெயரால்… ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும்…
மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்
மாவீரன் பிரபாகரன் மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில் தமிழ்நாடு மலர்ந்து மணம் வீச வீறுமிகு பிரபாகர் தலைமைதனை ஏற்று வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில் நிற்பர் / வையகத்தில் தமிழ்வீரம் வான்கதிரே ஒக்கும் மாழவுமே வைத்தரச பச்சையென்பான் ஈழ மண்ணைவிட்டே மறைந்தொழிவான் மனம்மகிழ மக்கள் வாழவந்த சிங்களத்தை வசைகூறி என்றும் வையகமே தூற்றிநிற்கும் வன்கொலைஞர் என்றே ! 2. கொலைகார அரசபச்சே கொற்றமுமே ஏறின் கொற்றவறம் அன்னவனைக் குப்புறவே வீழ்த்தும் மலையொக்கும் பண்பாட்டில் மலர்ந்து மணம் வீசும் …
6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 1/6
(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்- 1/6 1. வாழ்வு ‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், முனைவர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன. ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல்…
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத் தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது. மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது. நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல் நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது. மாவீரர் நாளில் உலகெங்கும் மொழி இன நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும் தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம். அகரமுதல – மின்னிதழ்
பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! – தொல்லூர் கிழான்
பழுநர் திருமடி சாய்ந்த வெம்புலியே! விரிகடல் கடந்து தண்புலம் ஒரீஇ உறுநிலம் உறைய புள்பறந் தற்றே முதுவர் நீங்கிய ஒற்றை மகவாள் வதுவைப் பருவத்து துடிஇடை முளையல் அரிப்படை நடுக்கிய பெரும்போ ருடற்றியான் வரிப்படை வேட்புற காந்த ளகத்து மகற்படை அன்ன மகட்படை மறவம் அகத்தே உயிர்த்த அறநெறி தழீஇ விழுப்புண் ஏற்றனள் தெவ்வர் நூறி பழுநர் திருமடி சாய்ந்தவெம் புலியே தொல்லூர் கிழான் விரிகடல் கடந்து = எங்கும் புடைபரப்பி விரிந்திருக்கும் பெருங்கடல் கடந்து; தண்புலம் ஒரீஇ = குளிர்பொருந்திய நிலத்தை விட்டு…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 
( தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 532. ICE – நீர்கட்டி சூன்மீ2. சத்தியநேசனில் பிரசுரிக்கப்பட்ட வைத்திய சாத்திரக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலங்கையில் பல்வலியைக் குறித்துப்…
