வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, தமிழோடுதான் ஒத்துள்ளது! – மு.வ.

வட இந்திய மொழிகளின் தொடர் அமைப்பு, சமற்கிருதத்தோடு அல்லாமல் தமிழோடுதான் ஒத்துள்ளது! இந்திய நாடு முழுதும் மிகப் பழங்காலத்தில் ஒரு மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி என்று (Proto -Dravidian) என்று கூறுவர். வட இந்திய மொழிகள் பலவற்றிற்கும் தென்னிந்திய திராவிட மொழிகளுக்கும் வாக்கிய அமைப்பு முறையில் (Syntax) இன்று வரையில் ஒற்றுமை இருந்து வருவதற்குக் காரணம், மிகப் பழங்காலத்தில் இருந்து வந்த ஒருமைப்பாடே ஆகும். வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்ற பிறகு, பழந்திராவிட மொழி…

வலைமச் சொற்கள் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(வலைமச் சொற்கள் 2 தொடர்ச்சி) 3 ஆ.) பொதியம் -Packet பாக்கெட்டு(packet) என்பது தமிழில் இடத்திற்கேற்றவாறு, பொட்டலம், பொதி, பொட்டணம், சிப்பம், சிறுபொதியம் எனப் பலவாறாகக் குறிக்கப்படுகின்றது. இங்கே தரவுகளைப்  பொதிந்து வைப்பதைக் குறிப்பதால் பொதியம் எனலாம். பொதியம் – Packet பொதிய இழப்பும் மீளனுப்புகையும் – Packet Loss And Retransmission மீ விரைவு புவிஇணைப்பு பொதிய அணுக்கம்/ மீ.வி.பு.பொ.அ. – High-Speed Down-link Packet Access / HSDPA   இ.) ஆவளி – Sequence  array, order, queue, row,…

செல்வி தமிழ் மொழி செந்தமிழ் போல் வாழ்கவே! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

புதுவைக் கவிஞர் தமிழ்நெஞ்சன், தன் மகள் செல்வி தமிழ்மொழியின் பிறந்த நாளில் அவரை வாழ்த்திய பாடல்கள் இரண்டு. என்றன் பிள்ளை என்னுயிர் தமிழ்மொழி எல்லா புகழும் பெற்றிடுவாள் – நாம் முன்னம் வாழ்ந்த முத்தமிழ்க் குடியின் மூச்சாய் இருந்து காத்திடுவாள் அறிவில் அன்பில் ஆற்றலில் எல்லாம் அவளே முதலிடம் பிடித்திடுவாள் – குறள் நெறியில் நின்று நீள்வினை ஆற்றிட நெருப்பாய் நின்று வெடித்திடுவாள் வாழ்க்கை எதுவென வள்ளுவம் சொன்ன வழியில் தானே சென்றிடுவாள் – நம்மை சூழ்ந்த கேட்டைச் சுட்டெ ரிக்கும் சுடர்மதி ஆகி…

தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – கருத்தரங்கம்

தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – தந்தை பெரியார் திராவிடர் கழகக் கருத்தரங்கம் புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015  மாலை 4.00  சூலூர்     அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு உசாவல் நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும்…

நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்   பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.   முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…

இனிதே இலக்கியம் – 6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! : தாயுமானவர்

6 விண்ணப்பத்தைக் கேட்பாயாக! அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே      ஆரமிர்தே என்கண்ணே அரிய வான பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்      பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்      காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்      விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே!   பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது.   தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம்…

புலவர் விசயலட்சுமியின் இரு நூல்கள் வெளியீடு

உலகத் திருக்குறள் மையம் எதிர்காலத் திருக்குறள் எழுச்சி விழா ஏழு நூல்களின் வெளியீடு திருக்குறள் புலவர் தி.வெ.வியலட்சுமியின் ‘ஒரு வரியுள் வள்ளுவம்’, ‘திருக்குறள்அலைகள்’  திருக்குறள் தேனீ  வெ.அரங்கராசன் ‘திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்’ நூல் வெளியீடு

சப்பான் தமிழ்ச்சங்கத்தின் “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி

பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும் அனைவருக்கும் இனிய வணங்கங்கள்! நமது சப்பான் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நடைபெற்ற “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சி சப்பானில் வசிக்கும் தமிழ் மக்கள், சப்பானிய மக்களின் பேராதரவோடு கடந்த புரட்டாசி 16 /அக்டோபர்3 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. நமது பரம்பரை உணவு வகைகளான கம்பங்கூழ்,கேழ்வரகு கூழ், இட்டலி மற்றும் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகள் எனப் பல்வேறு வகையான உணவுகள் சப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. நாம் அமைத்திருந்த செம்மொழி நூலகம், தமிழர்களின் பரம்பரை விளையாட்டுகளான சடுகுடு, பூப்பறிக்க வருகிறோம்,கிளித்தட்டு நாற்கரம், சிறுவர் சிறுமியர்…

முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?

திபேத்தியர் குடியேற்ற இடங்கள் முதல்வரே! தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா?   தமிழ் அறநெறிகளுள் ஒன்று, அடைக்கலம் என வந்தோர்க்கு ஆதரவு காட்டி, அரவணைத்து வாழ்வித்தலாகும். அடைக்கலப் பொருளைப் பொன்போல் காப்பவருக்கும் அடைக்கலமாக வந்தவரைத் தம் உயிரினும் மேலாகக் காப்பவர்க்கும் நற்பேறு கிட்டும் என்பது தமிழர் நம்பிக்கை. ‘விருந்தினர் இருக்கையில் சாவா மருந்தெனினும் தனியே உண்ணக்கூடாது’ என்பது தமிழ் நெறியல்லவா? அதைத்தானே தெய்வப்புலவர் திருவள்ளுவர் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ( திருக்குறள், எண்:82) என்கிறார்.   நம்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 14 : இலக்குவனார் திருவள்ளுவன்

(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 13 தொடர்ச்சி) 14 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை – 02   திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரை மு.வரதராசனார் உரை மணக்குடவர் உரை ஞா. தேவநேயப் பாவாணர் அறிஞர் போப்பு மொழிபெயர்ப்பு கவியோகி சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு கலைஞர் உரை உள்ளன. இவற்றுள் அறிஞர் போப்பு உரையில் மட்டும் எவ்வகைத் தேடுதல் பொறியும் இல்லை. பிறவற்றுள் தேடுதல் தலைப்பின் கீழ்ப் பக்கம் தேடலும் சொல் தேடலும் உள்ளன. உரைப்பக்கங்களில் பக்க எண் தேடல் உள்ளன. இசை வடிவில் குறள் பகுதி…

தமிழன் ஆக்கிய துண்க! – பாரதிதாசன்

தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து!   உண்டி விற்கும் உண்மைத் தமிழரே அண்டிய தமிழர், அமிழ்தமிழ் தமிழ்தெனச் செப்பும் வண்ணம் செய்திறம் பெறுக! உண்டி கொள்ளும் உண்மைத் தமிழரே, தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து! தமிழர் தமிழனை ஆத ரிக்க! தஞ்சைத் தமிழன் செய்தது போல இனிதே யாயினும், எட்டியே ஆயினும், வாழ்வ தாயினும் சாவ தாயினும் தமிழன் ஆக்கிய துண்க தமிழகம் தன்னுரி மைபெறற் பொருட்டே! -பாவேந்தர் பாரதிதாசன்