அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன்

அறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு      காலங்கள் தோறும் மூடநம்பிக்கைகள் உருவாக்கப்படுவதும் பரப்பப்படுவதும் அவை வாழ்தலும் வீழ்தலும் மீண்டும் வேறுவடிவில் உருவாவதும் இருக்கத்தான் செய்கின்றன. உலகின் முதல் மொழியாகிய தமிழுக்கும் பாலி முதலிய வேறுசில மொழிகளுக்கும் மிகவும் பிற்பட்ட ஆரியத்தை உயர்த்திக் கூறும் மூடக் கருத்துகளும் அவ்வகையினவே.      ஆரியத்தின் சாதியக்கருத்தைப் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஞாலப் புலவர் திருவள்ளுவரும் அவர் வழியில் பொதுமை நலன் நாடுவோரும் மறுத்து வருகின்றனர்.      “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்      உயிர் செகுத்து உண்ணாமை…

விண் தொலைக்காட்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கிறேன்

ஆவணி 25, 2046 / செப்.11, 2015 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு விண் தொலைக்காட்சி – WIN TV ‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில் இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்   http://wintvindia.com/   இணையத் தளத்திலும் காணலாம். மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.   வாய்ப்புள்ளவர்கள் காண்க.   அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை

(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும்.   அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்,       உள்அழிக்கல் ஆகா அரண்.   அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு.   சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ,       நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு.   அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும்.   எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்,       மெய்ப்பொருள் காண்ப(து),…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 042. கேள்வி

(அதிகாரம் 041. கல்லாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 042. கேள்வி கற்றார் சொல்கேட்டு, அறியாதன அறிதற்கு, எளிமைமிகு நல்வழி.   செல்வத்துள் செல்வம், செவிச்செவம்; அச்செல்வம்,       செல்வத்துள் எல்லாம், தலை.        செல்வங்களுள் எல்லாம், தலைசிறந்த         செல்வம், கேள்விச் செல்வமே.   செவிக்(கு)உண(வு) இல்லாத போழ்து, சிறிது,       வயிற்றுக்கும், ஈயப் படும்.        காதுக்குக் கேள்வி நல்உணவு         இல்லாப்போதே, வயிற்றுக்குச் சிற்றுணவு.   செவிஉணவின் கேள்வி உடையார், அவிஉணவின்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 041. கல்லாமை

(அதிகாரம் 040. கல்வி தொடர்ச்சி)     02. பொருள் பால்  05. அரசு இயல்    அதிகாரம் 041. கல்லாமை           கல்விஅறிவு இல்லாமையால் உண்டாகும்,              பல்வகைத் தீமைகளும், இழிவுகளும்.   அரங்(கு)இன்றி, வட்(டு)ஆடி அற்றே, நிரம்பிய       நூல்இன்றிக், கோட்டி கொளல்.   நூல்அறிவு இல்லாது பேசுதல், அரங்குஇல்லாது சூதுஆடல் போல்.   கல்லாதான், சொல்காம் உறுதல், முலைஇரண்டும்      இல்லாதாள், பெண்காம்உற்(று) அற்று.    கல்லான் பேசவிரும்புதல், மார்பகம் இல்லாதாள் பெண்மை விரும்பல்போல்.   கல்லா தவரும்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 040. கல்வி

(அதிகாரம் 039. இறை மாட்சி தொடர்ச்சி) 02.பொருள்பால் 05.அரசு இயல் அதிகாரம் 040.   கல்வி   கல்வி கற்கும் முறைகள், கல்வி அறிவின் பயன்கள்.   கற்க, கச[டு]அறக் கற்பவை; கற்றபின்,       நிற்க, அதற்குத் தக.             படிப்பதைத் தெளிவாகப் படிக்க;         படித்தபின் படித்தபடி நடக்க.   எண்என்ப, ஏனை எழுத்(து)என்ப, இவ்இரண்டும்,      கண்என்ப, வாழும் உயிர்க்கு.        அறிவியலும், இலக்கியமும், வாழும்         உயிருக்கு, இரண்டு கண்கள்.   கண்உடையர் என்பவர், கற்றோர்; முகத்(து)இரண்டு     …

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 039. இறை மாட்சி

(அதிகாரம் 038. ஊழ் தொடர்ச்சி) 02.பொருள் பால்    05. அரசு இயல்  அதிகாரம்  039. இறை மாட்சி   ஆள்வோரிடம் அமைய வேண்டிய,  பேரறிவுத்   திறனும்,  பெரும்பண்புகளும்.   படை,குடி, கூழ்,அமைச்சு, நட்(பு),அரண், ஆறும்       உடையான், அரசருள் ஏறு.       படை,மக்கள், உணவு,அமைச்சு, நட்பு,அரண்         உடையான், நல்ல ஆட்சியான்.   அஞ்சாமை, ஈகை, அறி(வு),ஊக்கம், இந்நான்கும்       எஞ்சாமை, வேர்ந்தர்க்(கு) இயல்பு.        அஞ்சாமை, கொடைமை, அறிவு,         ஊக்கம், ஆட்சியரது இலக்கணம்.   தூங்காமை, கல்வி, துணி(வு)உடைமை, இம்மூன்றும்,       நீங்கா, நிலன்ஆள்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 038. ஊழ்

(அதிகாரம் 037. அவா அறுத்தல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 04. ஊழ் இயல் அதிகாரம் 038. ஊழ்   உலக இயற்கை முறைமைகளை,   உணர்ந்து, தக்கபடி நடத்தல்ஆம்.   ஆ(கு)ஊழால், தோன்றும் அசை(வு)இன்மை; கைப்பொருள்,    போ(கு)ஊழால் தோன்றும் மடி.     ஆகுசூழல் ஊக்கத்தால், பொருள்ஆம்;        போகுசூழல் சோம்பலால் பொருள்போம்.   பேதைப் படுக்கும், இழ(வு)ஊழ்; அறி(வு)அகற்றும்,    ஆகல்ஊழ் உற்றக் கடை.     அழிவுச் சூழலில் அறியாமைஆம்        ஆக்கச் சூழலில் அறிவுஆம்.   நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்,தன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 037. அவா அறுத்தல்

 (அதிகாரம் 036. மெய் உணர்தல் தொடர்ச்சி)  01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 037. அவா அறுத்தல்  பெரும்துன்பம் தருகின்ற பேராசைகளை,    முழுமை யாகவே அறுத்[து]எறிதல்.   அவாஎன்ப, எல்லா உயிர்க்கும்,எஞ் ஞான்றும்,      தவாஅப் பிறப்(பு)ஈனும் வித்து.      தொடரும் பேராசைதான், எல்லா        உயிர்களின் பிறப்புகட்கும் விதை.   வேண்டும்கால், வேண்டும் பிறவாமை; மற்(று)அது,      வேண்டாமை வேண்ட வரும்.          விரும்பின், பிறவாமையை விரும்பு;        விருப்புக்கெடின், இல்லை பிறப்பு.   வேண்டாமை…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி)         பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களின் மற்றொரு குறிப்பிடத்தக்க பாடல் படைப்பு அவரின் ‘துரத்தப்பட்டேன் என்னும்’ உள்ளக் குமுறலாகும். நம் நாடு சிறந்த மக்களாட்சி நாடாக விவரிக்கப்பட்டு வந்தாலும் உள்ளபடியே பல உரிமைகள் ஏட்டளவோடு நின்று நடைமுறையில் மறுக்கப்படுவனவாகவே உள்ளன. இதற்கொரு சான்றே, பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள், தம் கல்லூரிப் பணியைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், சாதிக் கண்ணோட்டத்தால் வேலைவாய்ப்பை இழந்தது ஆகும். விருதுநகர்ச் செந்திற்குமார இந்து நாடார் கல்லூரியில் பேராசிரியர் அவர்கள்,…

‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047

 ‘காக்கைச் சிறகினிலே’ மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’ – வள்ளுவராண்டு 2047   வணக்கம்!   நான் முகிலன் என்ற முகுந்தன். மறைந்த கவிஞர் கி.பி. அரவிந்தன் அவர்களுடைய நாற்பதாண்டு நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன் காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி ‘கி பி அரவிந்தன்’ கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.   பாரதி கண்ட “சென்றிடுவீர் எட்டுத்…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 6 இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 6 9.] தண்டியலங்காரம் தேடுதல் பகுதி சென்றால் சொல் தேடல் பாடல் தேடல் ஆகியன உள்ளன. ஆனால், ஒவ்வொரு பக்க மேற்தலைப்பிலும் தேடுபொறி இடம் பெறவில்லை. இடப்பக்க அட்டவணையில் உள்ள உரைப்பகுதிக்குச் சென்று சொடுக்கினால்தான் உரையைப் படிக்க இயலும். அவ்வாறு சொடுக்காமல், மூலப்பகுதிகளில் உள்ள ‘உரை’ என்னும் இடத்தில் சொடுக்கினால் அப்பகுதியைக் காண இயலாது. உரைப் பகுதி செயல்படவில்லை என்ற எண்ணம் அல்லது உரை இல்லை என்ற எண்ணம் படிப்போருக்கு ஏற்படும்….