இதழாளர் மாநில மாநாடு , 2014

  இதழுலுலக வரலாற்றில் இடம் பெற்ற முதல் மாநில மாநாடு அனைத்து இதழியல் தோழர்களே..! ஊடக நண்பர்களே..!! தோளோடு தோளாக நின்று பணியாற்றிய மாநில – மாவட்ட நிருவாகிகளே…!!! ஆலம் விழுதுகளைப் போல் சங்கத்தைத் தாங்கி நிற்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களே.! அனைவருக்கும் தமிழ்நாடு இதழாளர்கள் ஒன்றியத்தின் சார்பாக நெஞ்சார வாழ்த்துகளையும், மனம் மகிழ்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். வரலாற்றில் ஒரு புதுக் கல்லாக நாம் நமது 14- ஆவது மாநில மாநாட்டை இதழ் உலக ஏட்டில் பதிவு செய்துள்ளோம். மறைந்த தோழர்…

வேங்கடமலை தமிழர்க்குரியதே!

    வேங்கடம்:  தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்குஎல்லையாக இருந்தமலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாகஇருந்தது. இது இப்போதுதிருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக்கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர், தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்: பக்கம்.31

மழையால் சேதமடைந்த சாலைகள்

மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தல்   தேனிமாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பொழிந்ததால் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.   தேவதானப்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு வரை செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து காமக்காபட்டி செல்கின்ற சாலையும் தேவதானப்பட்டியிலிருந்து வைகை அணை செல்கின்ற சாலையும் சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.   மேலும் சாலையோரத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்கள் கடையில் மழைத்தண்ணீர் தெளிக்கக்கூடாது என்பதற்காகச் சாலைகளில் கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால்…

தமிழ் அரசாவது தோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும்.

அன்று இமயம் வரையில் ஆட்சி செலுத்திய தமிழர் மரபில் தோன்றியநாம் இன்று எந்நிலையில் உள்ளோம் என்பதை நினைக்கும் தோறும் உள்ளம் குமுறுகின்றதல்லவா? அந்தநாள் இனி வருமா? இமயம் வரையில் படையெடுத்துச்செல்லாவிடினும், தமிழ்நாட்டிலேனும் பிறநாட்டார்க்கு அடிமையாய் இராமல்வாழும் தமிழ் அரசாவதுதோன்றுவதற்குத் தமிழர்கள் உழைத்தல் வேண்டும். – செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்: சங்க இலக்கியம்:பக்கம் 140    

எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்

  எங்குமெழுகவே!   அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே!   – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்

‘தமிழ்நாடு’ எனத் தனிநாடுஅமையவேண்டியதே!

  சங்கக் காலத்தில் தமிழ் நாட்டின்பரப்பு, வடக்கே திருப்பதியிலிருந்தும் தெற்கே பூமையக்கோடு வரைக்கும் பொருந்தி கிழக்கிலும் மேற்கிலும் கடல்களே எல்லைகளாக இருந்தன.   ஒருகாலத்து வடவிமயம் வரை, தமிழ்நாடாக இருந்தது. பின்னர் விந்தியமலைவரை சுருங்கியது. … பழைய தமிழ்நாட்டின் பரப்பைப் பெறமுடியாது போனாலும், எஞ்சியுள்ள தமிழ்வழங்கும் பகுதிகளை ஒன்றுபடுத்தித் தமிழ்நாட்டின் எல்லையை வரையறுத்தல் வேண்டும். இந்தியமாப் பெருங்கடலைக் குமரிக்கடல் என்றே அழைக்கச்செய்யவேண்டும். உலகப்பொது அரசு ஏற்படும் காலத்து நாம் உலக மக்களுள் ஒரு பகுதியினரே. மற்றைய கண்டங்களிலுள்ள மக்களோடு ஒப்பிடும்போது நாம் ஆசியக் கண்டத்தினரே….

பொதுமொழி தேவை என்பது தவறு

   இந்தியாவின் அரசியல் பொதுமொழி வேண்டும். இந்திமொழி நாடெங்கும் பெருவழக்கிற்று. அதுவேசிறந்தது என்கின்றனர். அரசியல் வளர்ச்சிக்குப் பொதுமொழி இன்றியமையாதது என்பதே தவறு. இந்திய நாடு இந்நிலை வருவதற்கு இந்திமொழி சிறிதும் துணைசெய்ததில்லை. நாட்டில் வழங்கி வரும் பன்மொழிகளும் துணைசெய்து மக்கட்கு அரசியல் உணர்ச்சியை அளித்தன. காந்தி அடிகள் ஆகிய தலைவர்கள் தென்னாட்டிற்கு வந்த காலை நாட்டுமொழி அறியாது இடர்ப்பட்டாரில்லை.  அவர்கள் கருத்துகளை அறியுமாறில்லாத தென்னாட்டினர் தடுமாறினதுமில்லை. இந்தி மொழி இந்தியநாடெங்கும் வழக்கில் உள்ளது எனுங் கூற்று ஒப்பத்தக்கதன்று. இந்திமொழி தென்னாட்டில் வழக்கில்லாதது. வடநாட்டில் சிற்சில…

இந்தி ஆட்சிமொழி என்பது மதியின்மை ஆகும்

  மொழிவேற்றுமையால் மனவேற்றுமை விளையும்.  மொழி ஒன்றுபட்டால் மக்களின்மனமும் ஒன்றுபடும் என்பது மற்றொரு காரணம். இதுவும் அனுபவத்திற்கு முரண்பட்டபொய்யுரை. சாதிபற்றியும் சமயம் பற்றியும் போராட்டங்கள் நிகழ்வது உண்மை. சாதி சமயப் பிணக்குகளால் கொலை, பழி பாதகங்களும் பகைமையும் ஒரு மொழிபயில்வோருக்குள்ளேயே நாடெங்கும் மலிந்து கிடக்கின்றன. மக்களும் வேற்றுமைஉணர்ச்சிகளை வளர்த்து இன்னல்களை விளைவிக்கும் தீய செயல்களும் கொள்கைகளும் பலவாயிருக்க, அவற்றை அகற்றி ஒற்றுமையை வளர்க்கக் கருதாத மந்திரி இந்திமொழியை ஆட்சியில் கொணர்ந்து ஒற்றுமை வளர்ப்போம் என்பது மதியின்மையும்ஏமாற்றமும் ஆகும். – தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார்: இந்திமொழி எதிர்ப்பு:…

சீர்திருத்த முயற்சியில் இருந்து தமிழைக் காப்பது முதன்மையான கடமை

    இன்றையநாளில் தமிழை வளம் படுத்துவோமெனத் தலைப்படும் ஒரு சிலர் தமிழ் எழுத்திலக்கணத்தில் குறைபாடுகள் மலிந்திருப்பதாகவும், அவற்றை அகற்றுதல் மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாததெனவும் கூறுகின்றனர். நூலகவழக்கிலிருக்கும் மொழிகளையும் அவற்றின் எழுத்திலக்கணங்களையும் இக்கொள்கை­யினர் நடுநின்று ஆய்வரெனில், பிற மொழிகளிற் காணும் குறைபாடுகள் சொல்லிறந்தனவென்றும், தமிழ் மொழியில் அத்துணை குறைபாடுகள் இல்லை என்றும் காண்பர். கார்மர் பிரபு (Lord Cormer) என்ற ஆங்கிலப் புலவர் தம் மொழியின் எழுத்திலக்கணத்திற் காணப்பெறும் குறைகள் சிலவற்றைத் தொகுத்து, அவை புலனாகுமாறு இக்கவியில் விளக்குகின்றனர். “In the English tongue…

தேனி மாவட்டத்தில் புத்துயிர் பெறுமா வெல்லம் உற்பத்தித் தொழில்?

  தேனி மாவட்டத்தில் வெல்ல உற்பத்தித் தொழில் நலிவடைந்துள்ளது.   தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, குள்ளப்புரம், மஞ்சளாறு அணைப்பகுதிகளில் கரும்புகளில் இருந்து வெல்ல உற்பத்தித் தொழில் சிறப்பாக நடைபெற்று வந்தது. உழவர்கள் தங்கள் தோட்டத்தில் வெல்லம் உருவாக்கத்தேவையான குடிசைகள், கலன்கள், அடுப்புகள் போன்றவற்றை அமைத்து அதற்கு ஆட்களையும் வைத்திருப்பார்கள். கரும்பு முற்றியவுடன் கரும்புகளை ஆட்டிக் கொதிகலன்களில் சூடாக்கி வெல்லம் உற்பத்தி செய்வார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வெல்லம் தமிழகம் முழுமைக்கும் பிறமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வாழ்ந்திருந்தனர்.  …