தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 52,53 & 54 : இணைய அரங்கம்: 18.06.2023
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (திருவள்ளுவர், திருக்குறள் – 415) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 52, 53 & 54 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஆனி 03, 2054 / ஞாயிறு / 18.06.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும்…
ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 –தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! எழுதவே வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! எத்தனை முறைதான் அரசின் ஆங்கிலத்திணிப்பைக் குறித்து எழுதுவது? இரு நாள் முன்னர்ப் பிறப்பித்த இ.ஆ.ப. அலுவலர்கள் மாறுதல் ஆணை கூட ஆங்கிலத்தில்தான். பொதுத்துறை உட்பட எல்லாத்துறைகளிலும் தமிழ் ஈடுபாடு மிக்கவர்களையே அரசு செயலர்களாக அமர்த்தினால்தான் தமிழைக் காண முடியும். ஆங்கிலத்தைத் திணிப்பதற்கு அவர்கள் வெட்கப்படாமல் இருக்கலாம். வேதனை உறாமல்…
உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும்
உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 அன்று சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. உ.த.ஆ.நி. தலைவராக முனைவர் பொன்னவைக்கோவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பொறி.அரசரும் மாநாட்டுச் செயற்தலைவராக முனைவர் சான்சாமுவேலும் உள்ளனர். அறிஞர்கள் பலரும் பணிக்குழுப் பொறுப்புகளில் உள்ளனர். இம்மாநாட்டில் நூல்…
தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2
(தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 1/2 -தொடர்ச்சி) இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 இப்போது அதிபராகியுள்ள இராசபட்சர் சந்திரிகாவால் தலைமையமைச்சர் பதவிக்குப் பொறுக்கியெடுக்கப்பட்டவர். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே எவ்வித அரசியல் தடையுமின்றி அவர்களால் ஒரு தீர்வை முன் மொழிந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. புலிப்படையை அழித்தொழித்துத் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் ஆசைத் திட்டத்தைக் கைவிடவும் இல்லை. அதனால் புலிகளோடு உடன்பாடு காண்பதை விடவும் இந்தியாவோடு இராணுவ உடன்படிக்கை…
தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சிங்களப் பேரினவாத அரசு காரணம், அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு காரணம் என்ற உண்மையை மறைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழிபோடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படிப் பழி சுமத்துகின்றவர்கள் எடுத்துக் காட்டும் ஒரு முகன்மைச் சான்று 2005ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் இரணில் விக்கிரமசிங்காவும் மகிந்த இராசபட்சேவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகளின்…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம்: 04.06.2023
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.(திருவள்ளுவர், திருக்குறள் 416) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 49,50 & 51 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: வைகாசி 21 , 2054 / ஞாயிறு / 04.06.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) “தமிழும் நானும்” – உரையாளர்கள் இணையத்தமிழ்ச்சுடர்…
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் உரைகளும் அறிவிப்புகளும்
(சிங்கப்பூர்)11ஆவது உலகத்தமிழ் மாநாடு – ஆன்றோர் அறிவிப்புகளும் உரைகளும் பிரிவு 2 இலக்குவனார் திருவள்ளுவன் 01- 10.12 முனைவர் உலகநாயகி 10.13 -14.47 முதுமுனைவர் முருகன் 14.48 – 19.25 முனைவர் சேயோன் 19.26- 23.48 முனைவர் அருத்தநாரீசுவரன் 23.49 – 24.53 பிரிவு 1 முனைவர் மருதநாயகம் 01.-7.39 முனைவர் பொன்னவைக்கோ 7.40 – 12.25 முனைவர் சுந்தரமூர்த்தி 12.26 – 15.19 முனைவர் பிரான்சிசு முத்து 15.20 – 21.56 முனைவர் சான் சாமுவேல் 21.57- 41.02 நேருரை தொடுப்பு :செல்வி…
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 46,47 & 48 : இணைய அரங்கம்: 21.05.2023
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 46, 47 & 48 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: வைகாசி 07 , 2054 / ஞாயிறு / 21.05.2023 தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) “தமிழும் நானும்” – உரையாளர்கள்…
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா?
குறள்நெறி மின்னிதழ் பெற வேண்டுமா? தமிழ்நெஞ்சங்களுக்கு, வணக்கம். தமிழ் அரிமா சி.இலக்குவனார் தோற்றுவித்துத் தம் வாழ்நாளெல்லாம் நடத்திவந்த “குறள்நெறி” இதழ் கடந்த 2021-ஆம் ஆண்டுத் திருவள்ளுவர் திருநாள் முதல் கடந்த மூன்றாண்டுகளாக இலவச இணையத் திங்களிருமுறையாகத் தொடர்ந்துவெளிவந்துகொண்டிருக்கிறது. எஞ்ஞான்றும் நன்கொடையோ ஆண்டுக்கட்டணமோ எவ்வகையான பொருளிதவியோ வேண்டா. தொடர்ந்து படியுங்கள்.மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கைப்பேசிப் புலன எண்களைத் தெரிவித்தால் உங்கள் நண்பர்களுக்கும் சுற்றத்தினர்க்கும் அனுப்புவோம். பின்வரும் தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறள்நெறி குறள் முழக்கம் குறள் விருந்து Thirukkural express அனைத்து மின்னிதழ் களுக்குமான…
(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9
(சிங்கப்பூர்) உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் – சூலை 7-9 உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) சிங்கப்பூரில் நடத்த இருந்த 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னையில் வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08 & 09.2023 செம்மணஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும். சென்னையில் நடைபெறுவதால் கூடுதலாகக் கட்டுரையாளர்களைத் தெரிவு செய்கின்றனர். கட்டுரையாளர்களுக்கு அனுப்பப்பெறும் அழைப்பு மடல்கள் வரும் திங்கள் இரவிற்குsள் அனுப்பப்படடு விடும் என இவ்வமைப்பின் தலைவர் முனைவர் பொன்னவைக்கோ தெரிவிததார்….
அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும், சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர். ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம். பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு…
தோழர் தியாகு எழுதுகிறார் 69 : தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 68 தொடர்ச்சி) தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம் இனிய அன்பர்களே! தமிழீழத் தோழமையைப் பொறுத்த வரை, திராவிடத்தைத் தமிழ்த் தேசியத்தால் வெல்வதோ தமிழ்த் தேசியத்தைத் திராவிடத்தால் வெல்வதோ நம் நோக்கமில்லை. தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமைக்குக் கேடில்லாமல் இந்த இரு கருத்தியல் நிலைப்பாடுகளுக்குமிடையே விவாதித்துக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவரவர் நிலைப்பாடுகளில் நிற்க வேண்டிய நேரத்தில் நின்றபடி தேவையான போது தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்தி ஒருங்கிணைந்து போராட முடியும். இது கடந்த காலத்தில் முடிந்தது, நிகழ்காலத்தில் முடிகிறது,…
