தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று 13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்…

தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி) தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே…

தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1 / 2 இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையும் (1987) அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய வல்லரசு தமிழீழத்தின் மீது நடத்திய படையெடுப்பும் இந்தியப் படை நடத்திய வன்கொடுமைகளும் தமிழர்கள் மறக்கக் கூடாத வரலாற்று உண்மைகள். ஆனால் இப்போது எழுந்துள்ள புதிய சூழலில் இந்த உண்மைகளை மறப்பதுதான் சரி என்று சிலர் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உண்மைகளை மறைக்கவும் அழிக்கவும் கூட…

தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்!

(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்! தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம். இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 181 : பாவலரேறு தொட்ட உயரம் – தொடர்ச்சி) சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் இந்தியாவில் நாம் அடிக்கடி காணக் கூடிய ஒன்றுதான்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர்கள் நல்ல பல அறிவுரைகளை நாட்டு மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் கூட வாரி வழங்குவார்கள். கண் கெட்ட பின் சூரிய நமசுக்காரம் என்பது போல் இருக்கும். இலங்கையிலும் இப்படி நிகழ்வதுண்டு. ஆனால் இந்தியாவிலும் சரி, இலங்கையிலும் சரி, இந்த ‘முன்னாள்’கள் தங்கள் ‘ஞான தரிசனங்’களுக்கு ஓர் எல்லை வைத்திருப்பார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இந்தியாவின் இறைமைக்கும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 92  :  மறதிச் சேற்றில் புதைந்து போகாமல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 91: இழிதொழில்புனிதமா? தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் இனிய அன்பர்களே! மறக்க முயன்றாலும் மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழினத்தின் கூட்டு உளச்சான்றில் மாறா வடுவாய்ப் பதிந்து விட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்காக மட்டுமன்று, அப்படி ஒரு கொடுமை நடந்து விடாமல் தடுக்க தமிழீழத் தாயகமும் தமிழ்நாடும் புலம்பெயர் தமிழுலகும் உலகத் தமிழர்களும் நடத்திய உணர்வார்ந்த போராட்டங்களும் மறக்கவியலாதவை. மறக்கக் கூடாதவை. அந்த மறவா நிகழ்வுகளில் ஒன்று 2009 பிப்பிரவரி 19ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை நடத்திய கொடுந்தாக்குதல். அந்தத் தாக்குதலில் மண்டையுடைந்து குருதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 69 : தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 68 தொடர்ச்சி) தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம் இனிய அன்பர்களே! தமிழீழத் தோழமையைப் பொறுத்த வரை, திராவிடத்தைத் தமிழ்த் தேசியத்தால் வெல்வதோ தமிழ்த் தேசியத்தைத் திராவிடத்தால் வெல்வதோ நம் நோக்கமில்லை. தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமைக்குக் கேடில்லாமல் இந்த இரு கருத்தியல் நிலைப்பாடுகளுக்குமிடையே விவாதித்துக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவரவர் நிலைப்பாடுகளில் நிற்க வேண்டிய நேரத்தில் நின்றபடி தேவையான போது தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்தி ஒருங்கிணைந்து போராட முடியும். இது கடந்த காலத்தில் முடிந்தது, நிகழ்காலத்தில் முடிகிறது,…

தோழர் தியாகு எழுதுகிறார் 28: மாவீரர்களின் பெயரால்…

(தோழர் தியாகு எழுதுகிறார் 27: தொடர்ச்சி) மாவீரர்களின் பெயரால்  ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது.. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக…

தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்

(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.): மாவீரர்களின் பெயரால்… ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள். 2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும்…

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! – புலவர் பழ.தமிழாளன்

மாவீரன்   பிரபாகரன்  மலர்ந்தொளிர்வர் ! 1. ஈழமண்ணில்  தமிழ்நாடு மலர்ந்து மணம்   வீச    வீறுமிகு  பிரபாகர் தலைமைதனை   ஏற்று  வாழவினம் உயிர்கொடுத்தோர் வரலாற்றில்  நிற்பர் /      வையகத்தில்  தமிழ்வீரம்  வான்கதிரே  ஒக்கும் மாழவுமே  வைத்தரச  பச்சையென்பான் ஈழ     மண்ணைவிட்டே  மறைந்தொழிவான்  மனம்மகிழ  மக்கள் வாழவந்த  சிங்களத்தை  வசைகூறி   என்றும்     வையகமே  தூற்றிநிற்கும்  வன்கொலைஞர்  என்றே ! 2. கொலைகார  அரசபச்சே  கொற்றமுமே  ஏறின்     கொற்றவறம்  அன்னவனைக்  குப்புறவே  வீழ்த்தும் மலையொக்கும்  பண்பாட்டில்  மலர்ந்து  மணம்  வீசும்    …

மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

மாவீரர்களுக்கு வீர வணக்கம்! தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத் தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது. மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது. நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல் நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது. மாவீரர் நாளில்  உலகெங்கும் மொழி இன நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும் தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.  அகரமுதல – மின்னிதழ்