திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 – பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருவள்ளுவர் வரையறுத்த வறுமை ஒழிப்பியல் சிந்தனைகள் 1/4 1.0.0.நுழைவாயில்             “குற்றங்களைப் பெற்றெடுக்கும் நற்றாய், வறுமை”  என்பார் கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில். தீமைகளுக்கு எல்லாம் மூல காரணம் வறுமையே [Poverty is the root cause of all evils] என்பது வறுமை பற்றிய ஓர் அருமைப் பொன்மொழி; ஒரு நன்மொழி.             இந்த நூற்றாண்டிலும் வறுமையின் விளைவுகளாகத் தற் கொலைகள், பட்டினிச் சாவுகள், குழந்தைச் சாவுகள், கொடிய நோய்கள் போன்ற பல்வேறு கொடுமைகள் உலகில் சில நாடுக ளில் நிகழ்கின்றன என்பது வெட்கக்…

தந்தை பெரியார் சிந்தனைகள் 10: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 9 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 10 (15) கடவுளைக் கற்பித்தவர்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும் கடவுள் பெரியவர் 1 என்று சொல்லிக் கற்பித்தார்களேயொழிய மனிதத் தன்மைக்கு மேல் கடவுளிடம் என்ன பெருந்தன்மை உள்ளது என்று எதையும் எவரும் மெய்ப்பித்துக் காட்டவே இல்லை என்பது பெரியாரின் கருத்து. (16) பண்டைக் காலத்தில் தோற்றுவிக்கப் பெற்ற மனிதனும் கடவுளும் அன்றைய பாதுகாப்பிற்குப் போதுமானதாய் இருந்தன. அந்தக் காலத்திய பாதுகாப்பிற்கு இன்று எவரும் பயப்படுவதில்லை. அந்தக் காலத்தில் ஓர் ஐந்து ரூபாய்த்தாளை வைத்து அதன் மீது ஒரு…

தந்தை பெரியார் சிந்தனைகள் 8 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 7 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 8 திருவாழி: சக்கரபாணி என்பது திருமாலின் மற்றொரு பெயர். அண்டங்களின் நடைமுறையை விளக்குவது சக்கரம். கோள் எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. வட்டமிடுவது அவற்றின் இயல்பு. நட்சத்திரங்கள் பல நேரே ஓடிக் கொண்டுள்ளனபோலத் தென்படுகின்றன. பெருவேகத்துடன் பல்லாண்டு பல்லாண்டுகளாகப் பறந்தோடி ஒரு வட்டத்தை நிறைவேற்றுகின்றன. ஒன்றுக்கு அப்பால் ஒன்று அனந்தம் சக்கரங்கள் ஓயாது சுழல்கின்றன. அவையாவும் திருமாலின் திருச்சக்கரத்தில் தாங்கப்பெற்றுள்ளன. அண்டங்கள் யாவையும் உண்டு பண்ணுதலும், நிலைபெறச் செய்தலும், பின்பு அவற்றை நீக்குதலும்…