வாழ்வுநெறி – முனைவர் வ.சுப.மாணிக்கம்.

  (அகரமுதல இதழ் நாள்பங்குனி 2,தி.பி. 2045 /  மார்ச்சு 16, கி.பி. 2014   தொடர்ச்சி) ஒல்லும் வகையான் அறவினை ஓயாதே செல்லும் வாயெல்லாம் செயல். இக்குறளில் அவர் நெகிழ்ச்சியைப் பாருங்கள். ஒல்லும் வகையான் எனவும், செல்லும் வாய் எனவும் அறஞ்செய்வான் நோக்கத்திற்கு எவ்வளவு தாராளமாக விட்டுக் கொடுக்கின்றார்? தலைமேல் புல்லுக்கட்டை இறக்க உதவுவதும், ஆட்டின் கால் முள்ளை அணைத்து எடுப்பதும், முதியோர்க்கு இடங்கொடுத்து செல்வதும் இவ்வண்டி என வினவினார்க்குச் சலிப்பின்றி அறிவுறுத்தலும் எல்லாமே சிறு வினையாயினும் அறிவினையல்லவா? வள்ளலிடம் சென்றான் வறியனாய்த் திரும்பான்;…

தமிழால் முடியாதா? – புலவர் வி.பொ. பழனிவேலனார்

இற்றை ஞான்று தமிழுக்கும் தமிழ் நாகரிகம், பண்பாட்டுக்கும் வந்து கொண்டிருக்கின்றன இடையூறுகள் பல. சமற்கிருதத்தால் தமிழ் அடைந்த கேட்டைச் சரி செய்ய இன்னும் நம்மால் இயலவில்லை. எது தமிழ்ச் சொல். எது சமற்கிருதச் சொல் என்று வேறுபடுத்திக் காண்பது தமிழ்ப் பெரும் புலவர்களால் கூட முடியவில்லை. அடுத்து ஆங்கிலம் வந்தது. அதனால் பல தீந்தமிழ்ச் சொற்கள் வழக்கொழிந்தன. இன்று தமிழ்ப் பேராசிரியர்கள் கூடத் தனித் தமிழில் பேசவோ எழுதவோ இயலாதவர்களாயுளர். தமிழ் வகுப்பில் விளக்கங் கேட்டால் ஆங்கிலத்தில் கூறுகிற அளவுக்கு மொழியறிவு குன்றி விட்டது…

அறிவுச் செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்

  செல்வம் பலவகை, அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால் அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட ‘‘அறிவே செல்வம்’’ என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும்.   எச்செல்வமும் இல்லாத ஒருவரிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்து விட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான். எல்லாச் செல்வங்களையும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால் அவன் எல்லா செல்வங்களையும் இழந்தவனாகிவிடுவான்.   எந்தச் செல்வத்தையும் உண்டு பண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே வள்ளுவர்…

‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…

வைத்தான் செத்தான்! – திருக்குறளார் வீ.முனுசாமி

அறிவுக்கும் பொருளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது – அல்லது இருக்க வேண்டும் என்று எண்ணுதல் இயற்கை விதிக்கு மாறுபட்டதாகும்; அவ்வாறே கல்விக்கும் பொருளுக்கும், பணத்திற்கும், பொருந்திய தொடர்பு இருக்க வேண்டும் என்று இயல்பாக எண்ணுதல் கூடாததாகும். உலக இயற்கையில் அறிவும் கல்வியும் நிறையப் பெற்றவர்கள்தான் செல்வமும், நிறைந்தவர்களாக இருத்தல் வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவ்வாறு நினைத்துப் பார்த்தல் தவறு என்றும் சொல்லிவிடலாம்! ஏனெனில் மனித வாழ்க்கையில் அறிவு, கல்வி என்பவை அமைகின்ற – வருகின்ற வழிவேறு; இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துதான் வருதல் வேண்டும் என்கிறவிதி…

திருக்குறளைப் போலச் சிறந்ததொரு நூலில்லை- கருமுத்து. தி.சுந்தரனார்

நம் கடமை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’’ நம் நாடாகும். தெய்வமணம் கமழும் திருக்குறள் நெறியைப் பாரெங்கும் சென்று பரப்ப வேண்டியது பைந்தமிழர் கடமையாகும். மகளிர் மாண்பு திருவள்ளுவரின் முப்பாலைப் பற்றி இங்கே இருபாலார் பேசுவது மகிழ்ச்சிக்குரியதாகும். அதிலும், மகளிர் அறத்துப்பாலைப்பற்றி உரை நிகழ்த்துவது மிகவும் பொருத்தம் உடையதாகும். மக்களைப் பெற்று அன்புடன் பேணி வளர்த்து இல்லறத்தை நல்லறமாக நடத்துவதற்கு ஏற்ற பண்புகள் பெற்று விளங்குபவர் மகளிரேயாவர் அன்றோ! துணிவு வேண்டும் பிறமதத்தவர் தம் மதங்களின் உயர்வுகளை எடுத்துக் கூறுகின்ற…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி

நம் மொழிக்கு நம் முன்னோர் சூட்டிய பெயர் ‘தமிழ்’ என்பதுதான். ஆனால், சிலர் பிற்பட்ட வழக்கான ‘திராவிடம்’ என்பதிலிருந்து ‘தமிழ்’ வந்ததாகத் தவறாகப் பரப்பி வருகின்றனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நூலான –  உலகின் முதல் நூலான – தமிழர்க்குத் தமிழில் கிடைத்துள்ள முதல் நூலான – தொல்காப்பியத்திலேயே ‘தமிழ்’  இடம் பெற்றுள்ளது. இதன் தொன்மையை மறைக்கும் வகையிலேயே ‘தமிழ்’ என்னும் சொல்லைப் பிற்கால வழக்காகக் குறிப்பிடுகின்றனர். சிலர் ‘தமிழ்’ என்னும் சொல் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளதா என அறியாமையில் கேட்கின்றனர். அதன் மூலம்…

எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் – பாரதியார்

  தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய். சாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘சாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம். தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட…

குற்றியலுகரமும் பாவேந்தரும் – கவிஞர் முருகு சுந்தரம்

‘முல்லை’ என்ற திங்களிதழில் பாவேந்தர் பாரதிதாசனாரின் மீசையைப் பற்றிப் பத்து எண்சீர் விருத்தங்கள் எழுதியிருந்தேன். அப்பாடலைப் பார்க்கும் வாய்ப்புப் பாவேந்தருக்கு ஏற்பட்டது. அப்பாடலைப் படித்ததும் அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, ‘எனது மீசையைப் பற்றிப் பாடல் எழுத வேண்டுமென்ற எண்ணம் உனக்கு ஏன் ஏற்பட்டது?’ என்பது தான். ‘மேலை நாட்டில் வோர்ட்சு வொர்த் என்ற கவிஞன் வாழ்ந்த காலத்தில், அவன் மூக்கைப் பற்றிக் கவிதை எழுதி அந்நாட்டு மக்கள் பாராட்டினர்; கீட்சு என்ற ஓர் ஆங்கிலக் கவிஞன் வாழ்ந்தான்; அவன் தலைமுடி பொன்நிறமானதா?…

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.

 (சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)   விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…

ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.,

    மழை பெய்கிறது கதிரவன் காய்கிறது. இவற்றால் மண்ணால் புற்பூண்டுகள் பயிர் பச்சைகள் முளைத்துத் தழைக்கின்றன. இன்னோரன்ன பல்வேறு நிகழ்ச்சிகள் இயல்பாய் நடைபெறுகின்றன. மழை எங்கிருந்து உருவாகின்றது? காயும் கதிரவன் எவ்வாறு இயங்குகின்றது? மண்ணினிருந்தும் புற்பூண்டுகள் எப்படித் தோன்றி வளர்கின்றன? இத்தகைய வினாக்கள் நம் மனத்துள் எழுதுவதில்லை. நாம் இவற்றையெல்லாம் இயற்கையெனக் கூறி மேனோக்கோடு விட்டு விடுகின்றோம். ஆனால் ஒரு விஞ்ஞானியோ இவை போன்ற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து நோக்குகின்றான். நோக்கியவற்றை ஆழ்ந்த அறிவு கொண்டு ஆய்கின்றான். இங்ஙனம் பெற்ற ஆராய்ச்சி அறிவைப் புதுமைகள்…