கல்வி கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) – பேரரசி முத்துக்குமார் (ஐந்தாம் வகுப்பு)
கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பம் (ஓர் அலசல்) முன்னுரை நம் நாடான மலேசியா, கல்வித்துறையில் அறைகூவல்களை எதிர்கொள்ள நாட்டின் கல்வித்துறையில் புது உத்தி(வியூகங்)களை மேற்கொண்டு வருகிறது. இந்த உத்தியின் உயிர்நாடி 21 ஆம் நூற்றாண்டின் கற்றல் அணுகுமுறையாகும். இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாணவனும் தொழில் நுட்பக் கற்றலில் பீடு நடை போடுவது இன்றியமையாததாகும்.. ஆகவே இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சிநிலையில் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் என்பது காலத்தின் விதியாகும். கல்விக் கற்றலில் தகவல் தொழில் நுட்பக் கூறுகள் பள்ளி ஒளிபரப்பு…
வெள்ளிசை(Karoeke) முறையில் தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் – புவனேசுவரி கணேசன்
வெள்ளிசை (Karoeke) தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற மூன்று கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சென்றடைய வேண்டும். இக்கூறுகளை ஒருங்கிணைத்துக் கற்பிக்கப்படும் இலக்கண விதிகளே மாணவர்களின் சிந்தையில் பதியும் என்பதே என் கருத்து. இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் முறையோடு இதனை…
நீலத்திமிங்கிலம் என்னும் இணையக் கொலைக்களம் – தெ.சு.கவுதமன்
நீலத்திமிங்கிலம் என்னும் இணையக் கொலைக்களம் கூகுள் தேடுபொறியில் நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்று போட்டாலே நீலத்திமிங்கிலம் என்னும் இணைநிலை விளையாட்டு குறித்த விக்கிபீடியா தளத்தைத் தான் காட்டுகிறது. அந்த அளவிற்கு, தற்போது ஒட்டுமொத்த உலகையும் அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இரசியாவில் உருவாக்கப்பட்ட இந்த நீலத்திமிங்கில விளையாட்டு, கிலியூட்ட வேண்டும் என்பதற்காக மிகவும் கொடூரமான முறையில் வடிவமைத்து உள்ளார்கள். இந்த விளையாட்டு இணையவழி மட்டுமே விளையாடக்கூடியது. பெருந்தலை போல இதிலும் ஒரு செயலாண்மையர்(நிருவாகி) இருப்பார். இந்த விளையாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அவர் அன்றாடம் ஒரு…
ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3 இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில் ஆய்வு என்ற பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….
இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 . இலக்குவனார் திருவள்ளுவன்
(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! – 2/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3 நெடுமையும் குறுமையும் துறைதோறும் கலைச்சொல், சொல்லாக அமையாமல், பொருள்விளக்கத் தொடராக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டு காண்போம். ? centrifuge வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களைச் சுழற்சியினால் பிரிக்கும் இயந்திரம் இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருள்விளக்கத்தை அப்படியே தமிழில் தந்துள்ளார்களே தவிர, உரிய கலைச்சொல்லை உருவாக்கவில்லை. பொறியின் செயல்பாடு , தோற்ற அடிப்படையில் சுழற்சல்லறைப்பொறி எனலாம். எனினும் இன்னும் சுருக்கமாகப் பிரிவை எனலாம். அல்லது பிரிவை எனக் குறிப்பிட்டு, பிரிவை –…
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்
அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும் உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18) 5.குருபக்தியும் ஐயப்பன் அருளும் “பெருங்கவிக்கோவின் உள்ளம் எதிர் மறைகட்கும் இடமளிப்பது. பக்தியில் பதியும்; பகுத்தறிவை வரவேற்கும்; பழமையின் சீர்மை போற்றும்; புதுமையின் பயனை வாழ்த்தும்;தேசியம் பரவும்; செந்தமிழர் தனி உரிமையும் செப்பும்; உத்தமர் காந்தியையும் போற்றும்; சமதர்ம மாவீரன் இலெனினையும் பாராட்டும். ஒரு வகை யில் அது ஒரு தமிழ்க்கடல் எனலாம்.” இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் பேராசிரியர் க. அன்பழகனார். இக்கூற்றின் உண்மையைப் பெருங் கவிக்கோவின் கவிதைப் படையல்கள்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…
இலக்குவனார் வழியில் இனிய தமிழ் காப்போம்!
ஈன்றதாய் மகிழ்ந்த நாள் : கார்த்திகை 01, தி.பி.1940 / நவம்பர் 17, 1909 தமிழ்த்தாய் அழுத நாள் : ஆவணி 18, தி.பி.2004 / செட்டம்பர் 03, 1973 நன்றி: கம்பருக்கும் வள்ளலாருக்கும்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தல் வந்தது. சட்ட மன்றத்தில் போட்டியிடுவதாக இருந்த பேராசிரியர் இலக்குவனாரிடம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகக் கூறியவர்கள் மேலவைக்காவது அனுப்பி இருக்கலாம். கழகத்தின் ஆதரவைப் பேராசிரியர் கேட்ட பொழுது நடுநிலை வகிப்பதாகக் கூறி மற்றொருவருக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். தமிழுக்காக அனைத்தையும் இழந்தவருடன் மற்றொருவரையும் இணையாக எண்ணி நடுநிலை வகிப்பதாகக் கூறியதை நாடகம் என்று சொல்வதல்லாமல் வேறு என்ன சொல்வது? இருப்பினும் பேராசிரியர் இலக்குவனார் முனைப்பாக…
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (16) தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (17) 4. உலகம் தழுவும் நோக்கு விசாலப் பார்வையால் உலகத்தை நோக்கி ச் சிந்தனைகள் வளர்க்கும் கவிஞர், தென் வியத்துனாம் விடுதலைப்படையின் வெற்றி குறித்து உவகைப் பெருக்கோடு பாடியிருக்கிறார். பாகித்தான் பாதகத்தை எதிர்த்து வீரமுழக்கம் செய்கிறார். எகிப்து இசுரேல் போர் பற்றி உணர்ச்சியோடு கவிதை இயற்றியுள்ளார். இக்கவிதைகளில் அவருடைய நேர்மை உள்ளமும் நியாய உணர்வும் ஒலிசெய்கின்றன. பெருநாடு சிறு நாட்டைப் பிய்த்து வீழ்த்தல் பிழையென்றால் அப்பிழையைச் சிறுநாடும் செய்யாமல்…
ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநரின் நேர்மை (!) – இலக்குவனார் திருவள்ளுவன் இந்தியத் துணைக்கண்டத்தில் மாநில ஆளுநர் என்பவர் நடைமுறையில் மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையேயான மாநில நலம்நாடும் தூதுவராக இருப்பதில்லை. மத்திய அரசின், சொல்லப்போனால் மத்திய ஆளுங்கட்சியின் கைப்பாவையாக, ஏவலராக, எடுபிடியாக, மத்திய அரசின் சார்பில் மாநில அரசை ஆட்டுவிக்கும் முகவராக இருக்கின்றார் என்பதே அரசியலாரின் – அனைவரின் கருத்தாகவும் உள்ளது. இதற்கு விதிவிலக்கானவரல்லர் தமிழகப் பொறுப்பு ஆளுநர். பொறுப்பு ஆளுநர், பொறுப்பான ஆளுநராக இல்லாமல், தன் முதலாளியான மத்திய ஆளுங்கட்சியின் கட்டளையை நிறைவேற்றும் …
