நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது

  காப்பியனை ஈன்றவளே!      காப்பியங்கள் கண்டவளே!    கலைவளர்த்த தமிழகத்தின்      தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில்      தனிப்பெருமை கொண்டவளே!   தமிழரொடு புலம்பெயர்ந்து      தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில்         சிங்கைதனில் ஈழமண்ணில்    இலக்கியமாய் வழக்கியலாய்         இனக்காவல் தருபவளே! பொங்கிவளர் அறிவியலின்         புத்தாக்கம் அத்தனைக்கும்    பொருந்தியின்று மின்னுலகில்         புரட்சிவலம்…

மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது

பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது? கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது! கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க் கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது? புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது! கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில் காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது வடிவமின்றி முடிவுமின்றி…

எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது

அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?

இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…

அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது

தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!  

உலக நட்பு நாள் வாழ்த்துகள் – சேது சுப்பிரமணியம்

   (ஆகத்து முதல் ஞாயிறு) சாதி, இனம் சாராது சமயம், மொழி பாராது நாடு, நிறம் நாடாது கல்வி நிலை காணாது செல்வநிலை தேடாது பாலினமும் பாராது ஊனங்களை உணராது குற்றங்குறை கூறாது எத்தனை இடர் வரினும் எள்ளளவும் மாறாது சொத்து சுகம் இழந்தாலும் சொந்த பந்தம் இகழ்ந்தாலும் தத்தளிக்கும் சூழ்நிலையில் தனது நிலை பாராது உள்ளமொன்றிப் பழகிடும் உன்னத நிலையிது கள்ளமின்றிப் பழகிடும் அற்புத உறவிது இவ்வுறவுக் கெவ்வுறவும் ஈடு இணை இல்லையே இவ்வுறவுக் கென்றேன்றும் வானம்தான் எல்லையே!  நட்புடன் சிலேடைச் சித்தர்…

தமிழ்மொழிக் கல்வி வீழுதடா மண்ணில்!- ச. சாசலின் பிரிசில்டா,

    தேடும் பொருள் கைவர  ஏற்றம் தரும் கல்வி  தலை முறைகள் கடந்து  திறமை ஊட்டும் கல்வி                                          இன்று வெறுமை யுற்று  சிறுமையுற்று வீழுதடா மண்ணில்!  சந்தையிலே கூவி விற்கும்  சரக்கு ஆனதடா கல்வி  சிந்தை உறைய வைக்குமளவில்  சிக்கலில் தமிழ்க் கல்வி  நாம்வெந்து நொந்து போனாலும் மீட்க வேண்டும் அதனை!  அறிவு மொழியாய் ஆங்கிலம்  நாட்டில் ஆனதடா மாயையாய்  அம்மா அப்பா எல்லாரும்  ‘மம்மி டாடி’ போதையாய்  தனியார்மயக் கல்வியில் தவிக்குதய்யா…

செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013

மறைந்த எழுத்தாளர் செயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘செயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த புதின விருது :  நிசந்தன் எழுதிய ‘என் பெயர்’, ஏக்நாத்து எழுதிய ‘கெடை காடு’ ஆகியவையும் சிறந்த நாடக நூலுக்கான விருது : க. செல்வராசின் ‘நரிக்கொம்பு’ சிறந்த சிறுகதைகள் விருது: புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ செயந்தி சங்கர் எழுதிய ‘செயந்தி சங்கர் சிறுகதைகள்’ சிறந்த கவிதை…

அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா

      எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.      பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை…

நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளை நடத்தும் இலக்கியப் போட்டி

(2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கவிதைப்போட்டி – பரிசளிப்பு விழா) ‘ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்’ என்னும் தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் மரபுக் கவிதை ஒன்று எழுதி அனுப்ப வேண்டுகிறோம். படைப்பாளர் முகவரியும் கடவுச்சீட்டு அளவுள்ள ஒளிப்படமும் தனித்தாளில் படைப்பு தம்முடையதே என்ற உறுதிமொழியும் இணைத்திட வேண்டும். கவிதை உள்ள தாளில் பெயர், முகவரி குறிப்புகள் எவையும் இருக்கக்கூடாது. கவிதை முழு வெள்ளைத் தாளில் எழுதியோ தட்டச்சு செய்தோ கணிணி அச்சு செய்தோ மூன்று படிகள் அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் கவிதைகளுக்கு முதல்பரிசாக…

உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்

    வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…