நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே
ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து…
முள்ளிவாய்க்கால் உனக்கே சொந்தம் – கவிதை
தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா? அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது அனுபவித்தவர்கள் இப்போதும் அநாதைகளாய்த்தான் அந்தரிக்கிறார்கள்!!! முள்ளிவாய்க்கால் கடற்கரை ஓரங்களில் ஐயோ.. அம்மா.. ஆ… என்ர பிள்ளை.. என்ர அம்மா.. என்ர அப்பா.. என்ர அண்ணா…….ஐயோ………. நான் என்ன செய்வேன்………………………….. என்ற அவலக்குரல்கள்தான் அதிகரித்தன அந்த நாட்களில் அப்போது கந்தகக் குண்டுகள் அப்பாவித் தமிழர் உடல்களை துளைத்துத் துவம்சம் செய்து சிதைத்து மமதை கொண்டன. காரணம் அங்கே ஏவப்பட்ட குண்டுகள் அனைத்தும் இனவாதக் குண்டுகளே அதனால்தான்…
காவியச் சதுக்கம் – கவிஞர் தமிழவன்
கல்லறை தின்றதோ எங்கள் மறவரை களங்கள் தேடுதே அந்த வீரரை நிலத்தில் இடியான எங்கள் சோதரை கண்ணிவெடிகள் மறக்குமா புதைத்த மாதரை விடிவு ஒன்று தான் எம் மண்ணின் மூச்சு விடியும் வரையும் இல்லை வாய்ப்பேச்சு தமிழர் என்பதே தலைவிதி ஆச்சு என்று சங்கை ஊதியே களம் சேர்ந்தாச்சு முப்படை என்பதே உலகின் வழக்கம் நாற்படை கண்டது புலிகள் இயக்கம் பகையின் தலையில் இடிகள் முழக்கம் அது கரும்புலி என்றொரு காவியச் சதுக்கம் …….. நன்றி : http://www.lankasripoems.com/?conp=poem&poetId=196388&pidp=212278
விதைத்துப்போயிருக்கிறர்கள்
தமிழ்த்தாயே மரம் தாங்கும் மண்ணாய் இலை தாங்கும் மரமாய் காய் தாங்கும் கொடியாய் சேய் தாங்கும் தாயாய் நீயே தாய் நாங்கள் சேய் ஈழத்தின் முடிவிலா கொலைகள் கண்டு முடியாமலே போகிறது உன் இரங்கற்பா.. ! ஈழத்திற்காக இறந்தவர்கள் எல்லாரும் சிதை சிதைந்து போகவில்லை விதை விதைத்துப் போயிருக்கிறார்கள்…! – விக்கி நன்றி: ஈழம்கவிதைகள் வலைத்தளம் http://eelamkavithaigal.blogspot.in/
வடக்குத்திசை – நமக்கு எமன் திசை
1. சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்று சொன்ன மகாகவியே எப்படி? கற்களினாலா? கபால ஓடுகளாலா? 2. கவசஊர்திகள் கிளறிப் போட்ட சேற்றில் கண்களைத் திறந்தபடி செத்துக் கிடந்த குழந்தையின் விழியில் நீலவானம் சிறுத்துச் சிறுத்து போர் விமானமாய்… இரத்தம் உறைந்த உதடுகளின் நெளிவில் ஏளனம் 3. சிட்னியில் சிறுவர் பள்ளியில் ‘இலங்கையின் தலை நகரம் எது?’ வினாவுக்கு விடை எழுதியது புலம் பெயர் தமிழ்க்குழந்தை ‘கொழுப்பு’ 4. முகம் சிவந்தார் இட்லர் மகிந்த இராசபட்சேவைப் பார்த்து “ஆசுட்விட்சு புக்கன்…
மே 18 – கறுப்பு நாள் : கவிஞானி அ.மறைமலையான்
பண்டைத்தமிழ் மக்கள் மறு பதிப்பெனவே மலர்ந்தோரே! என்றும்தமிழ் மறம் ஓங்கும் என்றே களம் கண்டோரே! விழுந்த தமிழ் இனம் எழவே வீரத்தீ விதைத்தோரே! இழிந்தஈனச் சிங்களரின் எதிர்ப்பையெலாம் மிதித்தோரே! தனிநாடாம் தமிழ்ஈழம் தனைநிறுவி வாழ்ந்தோரே! புத்தமும் காந்தியமும் கைகோத்ததால் வீழ்ந்தோரே! புலித்தலைவர் ஆட்சிகண்ட பொறாமைநரி இராசபக்சே கொலைபுரிந்தான் தமிழ்இனத்தைக் கொடிய நச்சுப்பாம்பெனவே! இந்தியாஆள் காங்கிரசார் ஈன்றகருவி உதவிகொண்டே தந்திரமாய் இராசபக்சே தமிழ்இனத்தைக் கொன்றானே! இரண்டாயிரத் தொன்பதாண்டு மே-பதினெட் டாம்நாளே இருண்டதுவே தமிழ்ஈழம் இருநூறாயிரவர் இறப்பாலே! பதினெட்டு மேத்திங்கள் கதியற்றார் நினைவுநாளன்று சதிசெய்த காடையரின் விதிமுடிக்கும்…
நெஞ்சை மெல்லும் மே பதினேழு – தமிழேந்தி
நெஞ்சை மெல்லும் மே பதினேழு வையகம் காணா வன்கொடுந் துயர்களை வரலாறு மறந்திடு மாமோ? வன்னியில் அந்நாள் சிதைந்த உயிர்களின் வலிகளைச் சொல்லிடப் போமோ? ஒருநூறு ஆண்டுகள் அல்ல, நம்மினம் உள்ளவரை நெஞ்சைப் பிளக்கும் ஒன்றுக்கும் உதவாக் கரைகளாம் நம்மை உறுதியாய் வருங்காலம் பழிக்கும் படைகளைக் கொடுத்தான் பழிகாரன் தில்லியன் பைந்தமிழ் மானம் கெடுத்தான் பல்லாண்டு பல்லாண்டாய் நெஞ்சிலே சுமந்த பழியெலாம் மொத்தமாய் முடித்தான் தடைகளைத் தகர்த்த தமிழ்ப் புலிகளின் தடுப்புகள் யாவுமே உடைத்தான் சதிகாரன் மகிந்தா தன்னுயிர் நண்பனாய்த் தமிழ்க்கேடன் அவனுக்குக்…
உயிரில் இரத்தம் வடியும் – – ஈரோடு இறைவன்
முள்ளி வாய்க்காலில் வெந்து கிடக்கும் உடல் நெருப்பில் வேல் செய்யடா சிங்கள நரிக் கூட்டத்தின் உடல் கிழித்து தூள் செய்யடா மே 18இல் பாலச்சந்திரன் ஈகம் தூக்கி கண்ணீர் பெய்யடா அடிபட்ட புலி அடி கொடுக்கும் வரலாறு மெய்யடா உங்கள் மரண நினைவு இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆனால் மே 18 இல் மட்டும் உயிரில் இரத்தம் வடியும் நினைவே நீங்களாய் இருக்கும்போது மறக்க முடியுமா? இனியாவது மனித இனமே ஈழம் விடியுமா?
‘மே’ பதினேழு – இருள் கவிந்தநாள்… : – அறிவரசன்
‘மே’ பதினேழு வன்னி நிலத்தின் முள்ளி வாய்க்காலில் இன எழுச்சிக்குப் பின்னடைவு ஏற்பட்ட நாள்… தமிழ் இன வரலாற்றில் இருள் கவிந்தநாள்… தமிழ்ப் பொதுமக்களும் போராளிகளும் புத்தன்பேர் சொல்பவர்களால் புதை குழிகளில் தள்ளப்பட்டநாள்… விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக அறங்கொன்றவர்களால் அறிவிக்கப்பட்ட நாள்… ஈழத்தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டதாகச் சிங்களக் காடையர் நம்பத் தொடங்கிய நாள்… வன்னித் தமிழர்களுக்குப் பின்னடைவு நேர்ந்ததால் உண்மைத் தமிழர்கள் பித்துப் பிடித்து நின்றநாள்… கொழும்பும் தில்லியும் நினைத்ததை முடித்ததாகக் கை குலுக்கிக் கொண்டநாள்… நமக்கு எதிரானவர்கள் சிங்களர் மட்டுமல்லர்;…
முற்றாய் எழுக முள்ளிவாய்க்கால் நாற்றாய்- பரணிப்பாவலன்
உற்றார் உறவுகள் உணவுக்காய் உடல்களை விற்றிட பசியுடன் விழிகள் இரண்டும் வற்றாக் கண்ணீர் வைகை ததும்பிட கற்ற கரும்புலி காடையர் பிடியில் சுற்றிய ஆடைகள் சுருங்கிச் செத்திட புற்றாய் வீழ்ந்ததே புலிப்படை கோட்டை கற்றை இனமாய் கதிர்கை இயக்கமாய் வெற்றியை மட்டுமே விளித்த தமிழராய் சாற்றியப் புகழுடன் சுற்றும் புவிக்குள் மாற்றம் விதைத்த மறவர் கூட்டமாய் சீற்றம் கொண்டு சிங்கள நாpகளைத் தூற்றி யடித்தநம் தூயோர் எங்கே தோற்ற மறியா தொல்குடி வேந்தரே! கொற்றம் பிடிக்கவும் கொடுந்துயர் முடிக்கவும் முற்றாய்…
வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்
ஒன்றல்ல இரண்டல்ல நூறாயிரம்.. எம் இனம் அழிந்த சோகம் கொடும் துயரம்.. நினைந்து நினைந்து நாளுமிங்கு நாம் அழுகின்றோம்.. சிதைந்து சிதைந்து எம் இனமும் இன்னும் அழிகிறதே.. வன்னி மண் தின்ற பேய்கள்.. முப்பொழுதும் ஆட்டமிட கண்ணீரில் எம் மண்ணோ நித்தமும் குளிக்கிறதே.. ஆற்றுவார் யாருமில்லை.. யார் காப்பார் தெரியவில்லை.. நாடாண்ட இனம் இன்று நடைப்பிணமாய் வீதியிலே.. -தரவு :முகநூல்
ஆலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்
ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…
