நன்றி நவிலல் – ஆத்மாநாம்

நன்றி நவிலல் இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ! இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ! இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ! அவர்கள் சார்பில் உங்களுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு!   கவிஞர் ஆத்துமாநாம் ஆத்மாநாம் படைப்புகள்

தமிழாமோ? – மீரா

தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ?   கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை சொல்லத்தகு மாமோ?   குயிலின்மொழி குழலின்மொழி குழந்தைமொழி கட்டில் துயிலும்பொழு திசைக்கும் இளந் தோகைமொழி கேட்டுப் பயிலும் ஒரு கிளியின் மொழி பண்யாழ்மொழி எல்லாம் உயிரில்எம துளத்தில் உரம் ஊட்டும்தமி ழாமோ? கவிஞர்…

பாடுவேன், ஊதுவேன்! – அழ.வள்ளியப்பா

பாடுவேன், ஊதுவேன்!   பாட்டுப் பாடுவேன்-நான் பாட்டுப் பாடுவேன். பலரும் புகழ, இனிய தமிழில் பாட்டுப் பாடுவேன். கேட்டு மகிழவே-நீங்கள் கேட்டு மகிழவே, கிளியின் மொழிபோல் இனிய தமிழில் கீதம் பாடுவேன்-நான் கீதம் பாடுவேன்.   குழலை ஊதுவேன்-புல்லாங் குழலை ஊதுவேன். கோகு லத்துக் கண்ணன் போலக் குழலை ஊதுவேன்-நான் குழலை ஊதுவேன். அழகாய் ஊதுவேன்-மிக்க அழகாய் ஊதுவேன். அனைவர் மனமும் மகிழும் வகையில் அழகாய் ஊதுவேன்-நான் அழகாய் ஊதுவேன்.   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 தொடர்ச்சி)    திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 27 & 28   இருபத்தேழாம் பாசுரம் தமிழரை ஒன்றுபடுத்த வணங்கவேண்டும்! ஏடி, தமிழினத்தை ஏந்தவந்த பெண்கிளியே! நாடிநம் மக்களின் இற்றைநிலை கேளாயோ ! கூடி முழங்கிவிட்டு ஊன்கழிந் தோய்ந்திடுவார் ! பாடு படுவார்; பிறவினத்தார் தாள்பணிவார் ! மூட வழியேற்றே முன்னேற்ற வாழ்விழப்பார் ! பீடுநிறை தங்குலத்துப் பேர்புகழைத் தாம்காவார்! சாடா தவர்நெஞ்சத் தாள்திறந்தே, தம்முள்ளே கூடிப் பணியாற்றக் கும்பிடவா , எம்பாவாய் !  …

சுந்தரச் சிலேடைகள் 7 – ஆசானும் நன்னீரும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 7 ஆசானும் நன்னீரும் தாகத்தைத் தீர்க்கும், தடுமாற்றம் போக்கிடும், பாகத்தான் மேலே பரந்தோடும்.-பாகாக்கும் தெள்ளிய தூய்மைக்கும்,தேயமுய்யும் ஓங்கலுக்கும் , பள்ளியனும் நன்னீரும் ஒன்று. பொருள்: ஆசிரியர்: 1)மாணவர்களின் கல்வித் தாகத்தைத் தீர்ப்பார். 2)மாணவர்தம் அறியாமையால் ஏற்படும் தடுமாற்றம்  தீர்க்கப்படுகிறது. 3)ஈசனும் ஆசானே.அவன் உடல் உள்ளத்தின் மேல் கல்வி பரந்தோடுகிறது. 4)ஆசிரியர்  ஒவ்வொருவரையும் பாகாக்கும் வல்லமை உடையவர் இனிமையான பேச்சைக் கொண்டவராக்கும் திறமை பெற்றவர்.அருந்தமிழ்ப் பாக்களைக் காக்கும் பண்புள்ளவராகவும் உள்ளார். 5) ஆசிரியர் தீயன களைந்து மாணவர்களைத் தூய்மையாக்குகிறார் 6)உலகம்…

தமிழ்த்தாய் வணக்கம் 11- 15 : நாரா. நாச்சியப்பன்

(தமிழ்த்தாய் வணக்கம் 6-10 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 11-  15   நல்ல தமிழிங்கு நாடாள வேண்டுமென்றால் புல்லர் தலையெடுத்துப் பொங்குகின்றார்-வல்ல தமிழ்த்தாயே உன்மக்கள் தாமாய்க் குழியில் அமிழுந் துயரை அகற்று.   (11)   பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது.  (12)   அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். (13)   தென்னகத்தைச் சேர்ந்திருக்கும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங)   இவ்வாறு சென்னையில் வேலைவாய்ப்பு முயற்சிகளினால் அலைந்து கொண்டிருந்த பேராசிரியர், கலைத்தந்தை கருமுத்து தியாகராச(ச்செட்டியா)ர் தம்மைச் சந்திக்க விரும்புவதாக அறிந்து மதுரை சென்றார்; தமிழ்ப் புலமையும் தமிழ்உணர்வும் மிக்க கலைத்தந்தை பேராசிரியர் சி.இலக்குவனாரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவராக நியமித்தார். அப்பொழுது முதல்வர் பணியிடமும் ஒழிவாகத்தான் இருந்தது.  அதற்கு ஆங்கிலத்துறையைச் சேர்ந்த திரு. வரதாச்சாரி என்பவரை நியமித்தார். துணை முதல்வராகவும் முதல்வராகவும் பணியாற்றி உள்ள தகுதி மிக்கப் பேராசிரியரையே அவர் முதல்வராக அமர்த்தி…

சங்கே முழங்கு – பாவலர் கருமலைத்தமிழாழன்

  சங்கே  முழங்கு !   வரிகளிலே முருகனையே முதலில் பாடி வளர்ந்திட்ட அறிவாலே பாதை மாற்றிப் பெரியாரின் பகுத்தறிவை நெஞ்சில் ஏற்றுப் பெரும்புரட்சி செய்தவர்தாம் பாவின் வேந்தர் அரிதான பாரதியின் தாச னாகி அடியொற்றி அவரைப்போல் எளிமை யாக உரிமைக்குக் குரல்கொடுக்கும் உணர்ச்சிப் பாட்டால் ஊரினையே மாற்றியவர் பாவின் வேந்தர் !   சாட்டையிலே சொற்களினை வீசி மூடச் சாதிகளின் தோலினையே உரித்த வர்தாம் வேட்டெஃக சொற்களிலே தமிழை வீழ்த்த வெறிகொண்ட பகைவரினைச் சுட்ட வர்தாம் கூட்டிற்குள் இருந்தபெண்ணைக் கல்வி கற்கக் கூட்டிவந்தே…

சுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 6 பைந்தமிழும் தாய்மையும் சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம் வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங் கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும் எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று. பொருள் : 1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் . 2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும். 3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள். 4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும்…

கறுப்புப் பூனை -சந்தர் சுப்பிரமணியன்

கறுப்புப் பூனை   கறுப்புப் பூனை கண்கள் மூடி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது கடந்து போகும் எலியைத் தின்னக் காத்திருக்குது! – அங்குக் காத்திருக்குது!   சுறுசுறுப்பாய் ஓடும் எலி என்ன பண்ணுது? – அங்கு என்ன பண்ணுது? – அது தூங்கு கின்ற பூனைக் காலைப் பார்த்திருக்குது! – காலைப் பார்த்திருக்குது!   –சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள்  பக்கம் 31

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 25 & 26 இருபத்தைந்தாம் பாசுரம் சான்றோர் ஏத்தும் வழி   முகிற்கவசக் குன்றம் மருளும் கரிமேற் பகைசாய்க்கும் வேந்தன் தான்தனித்தே வெல்லும் மிகுபோர்போல் அன்றே குடிபல்லோர் ஓம்பல் ! வகுக்கும் அரசாணை வன்சான்றோர் ஏத்தும் தகவாய்ப் புரிதலன்றித் தாழ்நிலை சாரான் ! மிகவே அறநூல் மொழிகளயும் மீறான் ! உகுநீர் குடிகாணா ஓங்குபுகழ் ஆட்சி இகமும் வழுவா வகைசெயவா, எம்பாவாய் !   இருபத்தாறாம் பாசுரம்  தமிழால்…

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2   இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும். …