தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன்
(தமிழ்த்தாய் வணக்கம் 1-5 தொடர்ச்சி) தமிழ்த்தாய் வணக்கம் 6-10 மஞ்சள் முகமலர்ந்து மாதர் கரும்புமொழி கொஞ்சி வழங்கக் குதுகலிக்கும்-நெஞ்சுடனே சங்கொலித்துப் பால்பொங்கும் தைத்திருநாள் இன்றுனது பங்கயத்தாள் சார்ந்தோம் பணிந்து! (6) இன்னமு தாகிய என்னனே யேஉனை என்னித யாசன மேற்றினேன்-கன்னலின் செந்தமி ழாகிய தேன் கவி பாய்ந்திட வந்தருள் செய்கவே வாழ்த்து. (7) வாழ்த்துகவி யாலிந்த் வையக முற்றுமே ஆழ்த்துவேன் இன்பநல ஆக்கமெலாம்-சூழ்ந்திடவே நன்னெறியே பாடி நலஞ்சேர்ப்பேன் எந்நாளும் உன்னருளே தாராய் உவந்து. (8) தமிழ்படித்த தாலிவர்கள்…
தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன்
தமிழ்த்தாய் வணக்கம் 1-5 நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி. காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் திருவும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தந்தை (ஈ.வெ.இராமசாமிப்) பெரியார் அவர்களுடனும் இணைந்து சொற்பொழிவுகள் மேற்கொண்டார். தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் பேராசிரியரைத் தனி ஊர்தியில் ஊர்வலமாக அழைத்து வரச் செய்து சிறப்பித்தார்; எத்தகைய இடர் வந்தாலும் எதிர்கொண்டு தமிழுக்காகப் போராடும் ஒரே தலைவர் எனக் குறிப்பிட்டுப் பேராசிரியர் இலக்குவனாருக்குத் ‘தமிழர் தளபதி’ என்னும் பட்டத்தையும் அளித்தார். தந்தை பெரியார் அவர்களின் வேண்டுதலால் அவர் உறவினர் ஈரோட்டில் நடத்தி வந்த சிக்கையா…
தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன்
தமிழ்நலங் காக்க உறுதி மொழி – நாரா. நாச்சியப்பன் தான்வாழத் தமிழ்கற்றுக் கொண்ட கேடன் தமிழ்வளர்ச்சிக் கிடையூறு செய்கின் றானால் வான்மீதும் தமிழுணர வேண்டு மானால் வண்மொழியைக் கற்கவரும் யாவ ரையும் “நான்வாழ வகைசெய்யும் நற்றா யேநின் நலத்திற்கோர் இடையூறு வருங்கா லத்தில் நான்மாள நேர்ந்தாலும் அஞ்சா துன்றன் நலங்காப்பேன்” என உறுதி பகரச் செய்வீர் -பாவலர் நாரா. நாச்சியப்பன்
சுந்தரச் சிலேடைகள் 5 : கோயில்மாடும் இளைஞனும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 5 ஊர்சுற்றும், ஓரிடத்தில் உன்னதமாய் நில்லாதாம், தார்வேந்தன் போலத் தலைதூக்கும்-மார்தட்டும் சண்டையிடச் சக்திகொண்டு சாதிக்கும், கோமாடும் விண்ணேர் இளைஞனும் ஒன்று. பொருள் கோயில்மாடு & இளைஞன். 1) ஊர்சுற்றித் திரியும். 2) ஒரிடத்தில் நிற்காமல் அங்குமிங்குமாக அலையும். 3) மன்னன் தலைதூக்கிப் பார்ப்பதுபோல் பார்க்கும் 4) எதிரி யாரெனினும் மார்தட்டிச் சண்டையிடும். 5) வெற்றி பெறும்வரையில் போராடும் எனவே, கோயில் மாடும் இளைஞனும் ஒன்றாம்
தாத்தா – சந்தர் சுப்பிரமணியன்
தாத்தா – சந்தர் சுப்பிரமணியன் தாத்தா எங்கோ நடக்கும் போதும் சத்தம் கேட்கிறது! ‘டொக்டொக்’ சத்தம் கேட்கிறது! – கோலைத் தாங்கித் தாங்கி நடக்கும் ஓசை பக்கம் கேட்கிறது! எனக்குப் பக்கம் கேட்கிறது! சட்டைப் பையில் ‘சாக்லெட்டு’ எடுத்துத் தாத்தா தந்திடுவார்! எனக்குத் தாத்தா தந்திடுவார்! – நான் சரியாய்ப் பள்ளி செல்லும் நேரம் தாத்தா வந்திடுவார்! என்முன் தாத்தா வந்திடுவார்! வீட்டில் இருக்கும் வேளை கணக்கில் விளக்கங்கள் சொல்வார்! வேண்டும் விளக்கங்கள் சொல்வார்! – என் வெள்ளைத் தாளில்…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 23 & 24 இருபத்து மூன்றாம் பாசுரம் தமிழரின் பெருமை எங்கே? கரைநாடாம் மூன்று கடல்சூழ் தமிழ்மண் திரைமேவி நாவாய் செல,உயர்ந்த பண்டம் சரியாய்க் கொளக்கொடுத்தும் செய்தார் அறமாய் இறைச்சுங்கம் வாங்கிஉரு முத்திரையும் வைத்தார் ! கரையெங்கும் வாங்கிவிற்கும் குன்றாப் பொருட்கள் ! பெருமைகொளும் நெஞ்சம்;புகழ்பாடும் நம்வாய் அருமையெலாம் எங்குற்று? அருந்தமிழர் ஓங்கிப் பொருப்பில் தமிழ்க்கொடி ஏற்றவைப்போம், எம்பாவாய் ! இருபத்து நான்காம் பாசுரம் அயல்நாட்டறிஞர்களை அழைத்தோம்புக! எங்கோ…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙொ) புரவலர் அண்ணல் சுப்பிரமணியனார் அவர்களைத் தலைவராகவும் பேராசிரியரைச் செயலராகவும் கொண்ட திருவள்ளுவர் கழகம் அமைக்கப்பெற்றது. அண்ணலாரால் வள்ளுவர் பதிப்பகம் நிறுவப்பட்டுப் பேராசிரியரின் ‘திருக்குறள் எளிய பொழிப்புரை’, ‘எல்லோரும் இந்நாட்டரசர்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. பின்னர், நூல் வெளியீட்டுப்பணி தொடர்ந்து, ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’, ‘பழந்தமிழ்’, ‘இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல்’ முதலான நூல்களும் வெளியிடப்பட்டன. திருக்குறள் கழகம் மூலம் பேராசிரியர் திருக்குறள் சொற்பொழிவுகள் நடத்தியதற்குப் பெரிதும் வரவேற்பு இருந்தது. இது குறித்துப்…
குதூகலித்தே ஆடுவாய் ! – கே. கமலசரசுவதி
குதூகலித்தே ஆடுவாய் ! குதித்தாடிக் குதித்தாடிக், குதூகலித்தே ஆடுவாய் ! குமிழ்ச் சிரிப்புக் காட்டியே, குறுநகையும் புரிவாய் ! குதித்தாடும் காலமிது, குறை எதுவும் வைக்காதே ! சிறை பூட்டும் காலமதில், கால் விலங்கும் பூட்டிடுவார். எதற்கென்றும் அஞ்சாதே ! எவரிடமும் கெஞ்சாதே ! குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி, குதூகலமாய் நடனமிடு ! – கே. கமலசரசுவதி
சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும் தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.
வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணப் படம் வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்! காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்! கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 29…
கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன். கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…
