வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்
வண்ணப் படம் வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! – அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்! காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்! கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! – சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் பக்கம் 29…
கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி. ‘கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்’ என அவரைக் கவிப்பூக்களால் வழிபட்டிருப்பவர் கவிஞர் சந்தர் சுப்பிரமணியன். கவிஞர் சந்தர் சுப்பிரமணியன் ஒரு பன்னாட்டு…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22 இருபத்தோராம் பாசுரம் மேம்பட்ட தமிழர் நாகரிகம் ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்; யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்; பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்; சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்! யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு! ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள் காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும் தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் ! இருபத்திரண்டாம் பாசுரம் தமிழ்க்கடமைகள் பலப்பல செயவேண்டும் கத்துகடல்…
கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20
(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 17 & 18 தொடர்ச்சி) திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 பத்தொன்பதாம் பாசுரம் தமிழ் கற்குமுன் அயல்மொழிகள் கற்க அயன்மொழிகள் கற்க அவாவுடையோர் கற்க, முயன்றே முழுதாக; முத்தமிழிற் போந்தால் , வியனோங்கு விண்ணளவு, வாரிதியின் ஆழம் பயன்தூக்கும் கற்பார் பிறமேற்செல் லாரே ! நயத்தக்க பேரிளமை நங்கையின்பாற் காதல் வயப்படுவார் மீளார்; மயங்கிடுவார் நாளும் ! கயலொத்த கண்பெற்ற காரிகையே ! தூங்கும் கயலிலையே! காதல்கொளக் கண்திறவாய், எம்பாவாய் ! இருபதாம்…
கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – சந்தர் சுப்பிரமணியன்
(கவிஞாயிறு தாராபாரதி 19 & 20 தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை! கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை! செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும் திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்! புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும் புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்! அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும் அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21) அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்! கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ! கவிதைக்குள் குறுவாளாய்க்…
திருக்குறள் அறுசொல் உரை : 121. நினைந்தவர் புலம்பல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை காமத்துப் பால் 15.கற்பு இயல் நினைந்தவர் புலம்பல் இருவரும் கூடிப்பெற்ற இன்பத்தைப், பிரிவினில் நினைந்து புலம்புதல். (01-02 தலைவன் சொல்லியவை) உள்ளினும், தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும், காமம் இனிது. காதலை, நினைத்தாலே இனிக்கும்; கள்ளைவிடவும், காதலே இனிக்கும். எனைத்(து)ஒன்(று) இனிதேகாண், காமம்;தாம் வீழ்வார் நினைப்ப, வருவ(து)ஒன்(று) இல். காதலியை நினைத்தாலே துன்பம் வாராதே; காதல்தானே இனிது. [03-10 தலைவி…
எல்லாம் கொடுக்கும் தமிழ் – பாவலர் கருமலைத்தமிழாழன்
எல்லாம் கொடுக்கும் தமிழ்! என்னயில்லை நம்தமிழில் ஏன்கையை ஏந்தவேண்டும் இன்னும் உணரா திருக்கின்றாய் — நன்முறையில் பொல்லாத தாழ்வுமனம் போக்கியுள்ளே ஆய்ந்துபார் எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எள்ளல் புரிகின்றாய் ஏகடியம் பேசுகின்றாய் உள்ள துணரா துளறுகின்றாய் — உள்நுழைந்து கல்லாமல் தாழ்த்துகிறாய் காண்கதொல் காப்பியத்தை எல்லாம் கொடுக்கும் தமிழ் ! எந்த மொழியிலுமே இல்லா இலக்கணமாம் நந்தமிழில் மட்டுமுள்ள நற்பொருளாம் — செந்தமிழர் நல்லொழுக்க வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டியிங்கே எல்லாம் கொடுக்கும் தமிழ் ! ஐந்தாய் …
சுந்தரச் சிலேடைகள் 3. இதயமும் கடிகாரமும்
சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் இதயமும் கடிகாரமும் துடித்திடும், உள்ளிருக்கும், தூங்காமல் ஓடும், வடிக்க அழகூட்டும், வாழ்வில்-படியாத மாந்தருக்கும் பாங்காகும் மாகடி காரமும் , சாந்த இதயமும் சான்று. பொருள்: இதயம் 1)இதயம் துடிக்கும் 2) உயிர்களின் உடலுக்கு உள்ளே பாதுகாப்பாக அமைந்திருக்கும். 3) நாம் தூங்கினாலும் அதுதூங்காமல் இயங்கிக் கொண்டிருக்கும். 4) வரைந்து பார்த்தால் அழகாக இருக்கும். 5) படித்தவர், படியாதவர் என்ற பேதமின்றி அனைவருக்கும் அமைந்திருக்கும். கடிகாரம் 1) துடிக்கும் 2) கண்ணாடிக்குள் இருக்கும். 3) தூங்காமல் ஓடும் 4) வரைந்து…
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார் -கெர்சோம் செல்லையா.
தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகிறார்! எப்படிச் சேர்த்தார் எனப் பாராமல், எவ்வளவென்று மலைக்கின்றார். இப்படித் தவற்றைப் புகழத் தொடங்கி, எளியரும் பண்பைக் கலைக்கின்றார். தப்பினில் வளர்ந்தோர் தலைவர் ஆகி, தரணியைச் சீர் குலைக்கின்றார். அப்படிப்பட்டோர் கையினில் மீள, அறத்தைப் பிடிப்போர் நிலைக்கின்றார்! கெர்சோம் செல்லையா
பொய் சொல்ல மாட்டேன்! -சந்தர் சுப்பிரமணியன்
பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! கையில் எதுவும் கிடைக்கும் என்றாலும் பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! மெய்யின் வழிதான் மேன்மை, எனவே பொய் சொல்ல மாட்டேன்! பொய் சொல்ல மாட்டேன்! -சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 28
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙை) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி “பேராசிரியர் இலக்குவனார் இலங்கைத் தமிழர் நலன் குறித்து அப்பொழுதே பேசினார். வரைபடம் ஒன்றில் இலங்கையில் தமிழர்பகுதியைத் தனியாகக் காட்டிப் புத்தகம் ஒன்றில் வெளியிட்டார். திருச்சி வானொலி உரை ஒன்றில், இலங்கையில் உள்ள தமிழர்கள் தன்னுரிமையுடன் வாழ்ந்தால்தான் அவர்கள் அங்கே உரிமையுடன் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்காலக்கட்டத்தில் இலங்கைக்குச் செல்ல அழைப்பு வந்தபொழுது இவர் வந்தால் இலங்கை இரண்டாகும் என்று காரணம்…
திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 119. பசப்புஉறு பருவரல்தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை : 120. தனிப்படர் மிகுதி திருக்குறள் அறுசொல் உரை 3.காமத்துப் பால் 15.கற்பு இயல் 120. தனிப்படர் மிகுதி பிரிந்து தனித்து இருக்கும் தலைவியிடம் படரும் மிகுதுயர் (01-10 தலைவி சொல்லியவை) தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி. காதலிப்பார் காதலிக்கப்பட்டால், அக்காதல், விதைகள் இல்லாச் சுவைப்பழம். வாழ்வார்க்கு வானம் பயந்(து)அற்(று)ஆல், வீழ்வார்க்கு வீழ்வார்…
