தோழர் தியாகு எழுதுகிறார் 149 : அஞ்சலட்டை
(தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!- தொடர்ச்சி) அஞ்சலட்டை இனிய அன்பர்களே! ‘சுவருக்குள் சித்திரங்கள்’ நூல் வடிவம் பெற்ற போது “அறிவுப் பாலம்” என்ற தலைப்பில் அதற்கோர் அறிமுகவுரை எழுதினேன். அதன் முதல் பத்தி இதுதான்: “செத்தும் கொடுத்தவர் சீவலப்பேரியார். சௌபாவின் பாண்டி குறித்து நான் விடுத்த மடலை வெளியிட்ட சூனியர் விகடனார் அத்தோடு விடாமல் என்னைத் தேடிப் பிடித்து, சிறை அனுபவத் தொடர் எழுதச் சொன்னார். ‘சுவருக்குள் சித்திரங்கள்’ தீட்டத் திட்டிவாசல் திறந்தது இப்படித்தான்.” இந்தச் சுருக்கத்தைக் கொஞ்சம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 148 : சுசி, கவெ: அரசியல் உயிர்!
(தோழர்தியாகுஎழுதுகிறார் 147 : வேண்டும்உரோகித்துசட்டம் – தொடர்ச்சி) சுசி, கவெ: அரசியல் உயிர்! இனிய அன்பர்களே! அண்மையில் நடந்த என் தொடர்பான ஒரு நிகழ்ச்சி பற்றித் தாழியில் நான் எதுவும் எழுதவில்லை. எழுத வேண்டா என்றுதான் இருந்து விட்டேன். ஆனால் எழுத வேண்டும் என்று அன்பர்கள் சிலர் எனக்கு உணர்த்தியுள்ளனர். நான் எழுதிய “சுவருக்குள் சித்திரங்கள்”, “கம்பிக்குள் வெளிச்சங்கள்” குறித்து நற்றுணை நண்பர்கள் காளிபிரசாத்து முதலானோர் கவிக்கோ மன்றத்தில் சென்ற பிப்பிரவரி 25 மாலை ஒழுங்கு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியைச் சொல்கிறேன். அந்த நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்ததோடு இந்த நூல்கள் குறித்தும்…
தோழர் தியாகு எழுதுகிறார் 147 : வேண்டும் உரோகித்து சட்டம்
(தோழர் தியாகு எழுதுகிறார் 146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை தொடர்ச்சி) வேண்டும் உரோகித்து சட்டம்! இனிய அன்பர்களே! தொடர்ந்து உரோகித்து வேமுலா குறித்து எழுதிக் கொண்டிருந்தேன். மீயுயர் பல்கலைக் கழகங்களில் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான ‘உரோகித்து வேமுலா (VEMUOLA) சட்டம்’ இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்போதே எழுப்பப்பட்டது . நான்கைந்து ஆண்டு முன்பு புதுவை பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க அழைப்பின் பேரில் அங்கு சென்று பேசும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது உரோகித்து வேமுலா குறித்துப் பேசியதோடு உரோகித்து வேமுலா சட்டத்தின்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 45 : பழந்தமிழும் தமிழரும் 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 5 குழந்தையைப் பெற்று வளர்த்தல் தாய்க்கு உரிய பெரும் பொறுப்பாக இருந்துளது. அப் பொறுப்பை அக்காலப் பெண்டிர் நன்கு உணர்ந்திருந்தனர். நாம் என்ன பிள்ளைபெறும் எந்திரமா? என்று வெறுத்து மணவாழ்க்கையை விட்டுவிடவில்லை. அப் பொறுப்பை உணர்ந்த அன்னையொருத்தி மிகப் பெருமையுடன் கூறிக்கொள்ளுவதை நோக்குங்கள். ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நல்நடை நல்கல் வேந்தற்குக்…
தமிழ் மாநாடும் தமிழக அரசும் – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ் மாநாடும் தமிழக அரசும் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 11ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிகழ்ந்து முடிந்தது. போதிய காலமின்மை, போதிய பணமின்மை ஆகியவற்றால் இடர்ப்பாடுகளை எதிர்நோக்கினாலும் மாநாடு சிறப்புடன் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைவு விழாவின்போது சட்டக்கதிர் சம்பத்து அவர்கள் “அரங்கு நிறைய ஆராய்ச்சியாளர்கள் அமைதியாக அமர்ந்திருப்பதே மாநாட்டின் வெற்றிக்கு அடையாளம்” என்றார். அஃது உண்மைதான். பொதுவாகக் கருத்தரங்கம் அல்லது மாநாட்டிற்கு வருபவர்கள் அமர்வின்பொழுது முழுமையாக இருப்பதில்லை. அல்லது எல்லா நாள் அமர்வுகளிலும் பங்கேற்பதில்லை. ஆனால், இந்த…
தோழர் தியாகு எழுதுகிறார் 146: பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை
(தோழர் தியாகு எழுதுகிறார் 145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி) பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால், சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும்…
11ஆவது உலகத்தமிழ் மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
11ஆவது உலகத்தமிழ்மாநாடு முடிந்தது. மலேசியா தமிழ் மாநாட்டின் நிலை என்ன? கடந்த வெள்ளி, சனி , ஞாயிறு (07,08,09.07.2023) சென்னையில் 11ஆவது உலகத்தமிழ்மாநாடு உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. ஆனால் மலேசியாவிவ் இதே மன்றத்தின் பெயரைப் பயன்படுத்திச் சூலை 21-23இல் 11 ஆவது உலகத்தமிழ்மாநாடு நடைபெறுவதாக அறிவித்து அதற்கான் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 11 ஆவது மாநாடு நடந்து முடிந்த பின் 12 ஆவது மாநாடுதானே நடைபெற வேண்டும். அப்புறம் ஏன் மீண்டும் 11 ஆவது மாநாடு ? முன்பே…
பூங்கொடி 5 – கவிஞர் முடியரசன்: தமிழ்த் தெய்வ வணக்கம்
(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…
தோழர் தியாகு எழுதுகிறார் 145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு
(தோழர் தியாகு எழுதுகிறார் 144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி) வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும். திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 756. Wireless Telegraph – கம்பியிலாத் தந்தி 757. Aeroplane – விண்ணூர் பொறி 758. Type writing Machine – எழுத்தடிக்கும் இயந்திரம் 759. Тypes – அச்செழுத்துக்கள்…
தோழர் தியாகு எழுதுகிறார் 144 : சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா
(தோழர் தியாகு எழுதுகிறார் 143 : உரோகித்து வேமுலா தற்கொலைக் காரணம் – தொடர்ச்சி) சாதி என்பது வதந்தி அல்ல! – உரோகித்து வேமுலா ஐதராபாத்து பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்த உரோகித்து சக்கரவர்த்தி வேமுலா 2016 சனவரி 17ஆம் நாள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டிற்று. மீயுயர் கல்வி நிறுவனங்களில் ஒடுங்கியர்(தலித்து)களுக்கும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும் இழைக்கப்படும் அநீதியை வெளிக் கொணருவதற்கு அது தூண்டுதலாக அமைந்தது. 257 பேர் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட யாகூபு மேமனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்த உரோகித்திற்கும் அகில பாரதிய வித்யார்த்தி…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி) 1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில்…
