ஒட்டோவியத்தில் திருவள்ளுவர் – காரைக்குடிப் பள்ளியின் அருந்திறல்

காரைக்குடியில் உள்ள பள்ளி ஒன்றின் மாணாக்கர்கள் திருவள்ளுவர் உருவத்தைத் துண்டுத்தாள்கள் மூலம் உருவாக்கி அருவினை  ஆற்றியுள்ளனர். புகழ்மிகு இச்செயல் பற்றிய விவரம் வருமாறு : காரைக்குடி தி லீடர்சு பள்ளிக்குழுமம் 2004 ஆம் ஆண்டு  பொறியாளர் இராசமாணிக்கம் அவர்களால் தொடங்கப்பட்டது. 27 குழந்தைகளோடு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இன்று 1800 குழந்தைகள் பயில்கின்றனர். மத்தியக் கல்வித்திட்டம், பதின்மமுறை, மழலையர் நிலை  என மூன்று பள்ளிகள் உள்ளடங்கியது இப்பள்ளிக்குழுமம். மாணாக்கர்களிடம் தமிழ் உணர்வை வளர்க்கவும் திருவள்ளுவரைப் போற்றும் உணர்வை ஏற்படுத்தவும், இலிம்கா (Limca) அருந்திறலுக்காக மாணாக்கர்கள் துண்டுத்…

திருவாட்டி இராமச்சந்திரன் படத்திறப்பு விழா

  பகுத்தறிவு அரிமா சிவகங்கை இராமச்சந்திரனாரின் மருமகளும், பொறியாளர் இராமச்சந்திரனாரின் மனைவியுமான திருவாட்டி புட்பராசாமணி அம்மையாரின் படத்திறப்பு இன்று (15.12.13)காலை, சென்னை திருவாவடுதுறை இராசரத்தினம் கலையரங்கத்தில் நடைபெற்றது. இருப்பூர்திக்காவல் கண்காணிப்பாளர் கயல்விழி இ.கா.ப. அவர்கள் அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்தார்கள். திருவாளர்கள் கற்பூர சுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(நி), மரு.கருணாகரன், கொடைக்கானல் காந்தி, இலக்குவனார் திருவள்ளுவன், தி.க.சட்டத்துறைச்செயலர் இன்பலாதன், அரப்பா, அ.செல்வக்குமார், கலைச்செல்வன், முனைவர் ஐயாதுரை, சுந்தரராசன்,சங்காமிருதம் குருசாமி, மரு.இராமகிருட்டிணன் முதலானோர் நினைவுரை ஆற்றினர். திருவாட்டி மலர் வரவேற்புரையும் திருவாட்டி எழிலரசி நன்றியுரையும் ஆற்றினர். வழக்குரைஞர் இரா.நீதிச்செல்வன்,…

தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது

– செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் பேசினார். விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன முன்னாள் இயக்குநர் முனைவர் க.இராமசாமி கருத்துரையாற்றினார்.  அப்பொழுது அவர், “தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடு இல்லாமல், வரன்முறை இன்றிக்…

தங்கநங்கை அம்ரிதாவிற்குப் பாராட்டுகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில்  நெசவுத்தொழில்நுட்ப இளம்பொறியியலில் (B.Tech – Textile Technoloy) செல்வி அம்ரிதா முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். அண்மையப் பட்டமளிப்பு விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்றது. பெற்றோர் திருவாளர்கள் சி.மனோகரன்—கசுதூரி, தமக்கை மரு.சந்தனா, சுற்றத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுடன் இணைந்து நிறைநலமும் உயர்புகழும் பெற ‘அகரமுதல இணைய இதழும்’ வாழ்த்துகிறது!

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் துணைக் கருவிகளை, விளையாட்டுப் பொருட்களை அடுக்கி, வகைப்படுத்தி, முறைப்படுத்தி தானாயும் தன் நண்பர்களோடு குழுவாயும் கற்று மகிழ்ந்த காட்சி அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டது….

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவு – 125

  நாள் : கார்த்திகை 17, தி.பி.2044  செவ்வாய்  திசம்பர் 10, கி.பி.2013  மாலை 6.00 மணி   இடம்:  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், சென்னை   தலைப்பு : இளவரச அமிழ்தன் கவிதைகள்   தலைமை : முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஏற்புரை :  முனைவர் இளவரச அமிழ்தன்   வாழும் கவிஞர் பாநலன் போற்றிட வாரீர்!   ஒய்எம்சிஏ பட்டிமன்றம் சென்னை 600 001        

ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

 த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில்  இந்திய அரசு பாதுகாப்புத்துறை  நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது.  இதில் தையல் பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்புத் தேர்வு  நடைபெற்றது. வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….

பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு

  குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு…  போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…