மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் புலவர்மணி இரா.இளங்குமரனார்

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் நடந்த பொறியாளர் அமரர் பழ.கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு ஒளிப்படங்கள். சிறப்புரை தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் .   தரவு : கவிஞர் இரா .இரவி

திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை

 திருவரங்கம் இடைத்தேர்தலில் மாநில அம்மா பேரவை சார்பில் அம்மா அவர்களின் சாதனைகளை விளக்கித் துண்டறிக்கைகளைத் தேனி மாவட்டக் கழகச் செயலர் டி.டி.சிவக்குமார் வழங்கியபோது எடுத்த படம். அருகில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர்   ஆர்.பார்த்திபன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்ச்செல்வன், தேனி மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஓ.பி.இரவீந்திரநாத்து குமார், தேனிமாவட்ட அம்மா பேரவைச் செயலர் வரதன், மாவட்டத் துணைச் செயலர் முருக்கோடை இராமர், பெரியகுளம் ஒன்றியச் செயலர் செல்லமுத்து, அப்துல்கபார்கான் முதலான பலர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து…

திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்

    திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர்.   திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…

ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி

  பேராசிரியர் இரா. மோகன் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஏர்வாடியாரின் எழுத்துலகம் நிகழ்ச்சி முனைவர் இறையன்பு தொடக்கவுரையாற்ற, கவிஞர் ஈரோடு தமிழன்பன் நிறைவுரையாற்ற அன்பில் தொடங்கி அன்பில் நிறைந்த விழாவாக அமைந்தது .அறிஞர் பெருமக்கள் ஆய்வுரை நிகழ்த்த அற்புத விழாவானது இந்நிகழ்ச்சி.  

தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் – ஔவை உரை, த.இ.க.கழகம்

நாள் : மாசி 1, 2016 – 13.02.2015, வெள்ளிக்கிழமை, நேரம் : மாலை 4.30 மணி தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர் சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்) தொடர் சொற்பொழிவு-4 “தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்” என்னும் தலைப்பில் முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம் அவர்கள் உரையாற்றுகிறார்.   இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், அனைவரும் வருக! அன்புடன்…

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்

தமிழரே உயர்ந்த பண்பாட்டு நிலையினர்    இந்தியாவில் இன்றைக்குப் பேசப்படும் மொழிகளில் தமிழ் மிக முற்பட்ட காலத்திலேயே உயர்ந்த வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறது. இது சமற்கிருதத்தின் தாக்கமின்றி வளர்ந்ததுடன் இதனைப் பேசுவோர் நீண்ட காலத்திற்கு முன்னரே உயர்ந்த பண்பாட்டு நிலையை அடைந்து இருந்தனர். – பி.டி.சீனிவாச ஐயங்கார் : (The Past in the Present)

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்

சின்னச்சாமி (சின்னாண்டான்) தீக்குளிப்பு – பாவாணர்   பண் – (நாதநாமக்கிரியை) தாளம் – முன்னை ப.             தீக்குளித்தே யிறந்தான் – சின்னச்சாமி தீக்குளித்தே யிறந்தான் – திடுக்கிடத்   து. ப.             தாக்கும் இந்திவந்து தண்டமிழ் கெடுமென்று தன்மானந் ததும்பியே தாங்கருந் துயர்கொண்டு (தீக்)   உ.1             ஆர்க்குஞ் சொல்லாமல்தன் அகத்தைவிட் டுச்சென்றே அழகிய திருச்சியில் அமைகூடல் நிலையத்தில் வார்த்தனன் கன்னெய்மேல் வைத்தனன் தீயும்பின் வடிவொரு சுடரென வானவர் விருந்தெனத் (தீக்)   2             நாடென்றும் இனமென்றும்…

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….

பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ

தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை   தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன.    தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…