பன்னாட்டு உசாவலுக்கான நீதிப் பேரணி, தொரண்டோ

தமிழர் தேசத்தை அங்கீகரி! இனப்படுகொலையாளிகளைத் தண்டி! அனைத்துநாட்டு விசாரணையை வலியுறுத்தி மாபெரும் போரணி தமிழீழத் தாயகம், தமிழகம், புலம் பெயர்ந்து வாழும் தேசங்கள் ஆகிய அனைத்து இடங்களைச் சேர்ந்த தமிழ்மக்களும் ஒன்றாக ஓரணியில் ஒருமித்த குரலில் அமெரிக்கா முதலான அனைத்து நாடுகள், தமிழ் மக்கள் மீதுதிணிக்கத் திட்டமிட்டிருக்கும் உள்ளக விசாரணையைக் கண்டித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி இனப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணை மூலம் நீதி வேண்டி இந்த மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இடம்: 360, பல்கலைக்கழ நிழற்சாலை, அமெரிக்கத் தூதரகம் முன்பு (360 University Avenue…

தமிழ் – உயர்தனிச்செம்மொழி ! : மௌலவி ஏ உமர் சஃபர் மன்பயீ

உலகினரை வியக்க வைக்கும் செம்மொழியே !   எத்தனையோ வழிகளெல்லாம் உலவிவந்தும் – என்னை இசுலாத்தின் வழியினிலே வைத்தவனே ! எத்தனையோ மொழிகளெல்லாம் உலகிருந்தும் – என்னை எழிலான தமிழ்மொழியில் வளர்த்தவனே ! எத்தனையோ அன்னையர்கள் பிறந்திருந்தும் – எனக்கு இனிதான தமிழ்தாயைத் தந்தவனே ! அத்தனையும் உன்கருணை ! உன் புகழே !! – நான் அதற்காக காலமெல்லாம் புகழுகின்றேன் ! அலஃகம்து லில்லாஃக் …. சொல்வதற்கு இயல்பான செந்தமிழே ! – ஏழு சுரங்களுக்குள் இசையான பைந்தமிழே ! நல்ல நெறி…

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர்

 காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே! யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்! கடல் தின்றதில் கலங்காத நீ காற்று, புயலென வீசியதில்…

நயினைத்தவம் மணிவிழா

நயினைத்தவம். அவர்களின் மணிவிழா சென்னை மேற்கு மாம்பலம் ஆனந்து சந்திரசேகரரங்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆவணி 20, 2046 / செப்.09, 2015 காலை நடைபெற்றது. பெருங்கவிக்கோ வா.மு.சே.தலைமையில் கவிக்கொணடல் மா.செங்குட்டுவன், மேனாள் மாநகரத்தலைவர்(மேயர்) சா.கணேசன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கனடாநாட்டுத்தமிழ் .எழுத்தாளர் நயினைத் தவம் ஏற்புரையாற்றினார். தமிழ்ப்பணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். கவிச்சிங்கம் கண்மதியன் நன்றிநவின்றார். – மறைமலை இலக்குவனார்

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் – ச.பா.நிர்மானுசன்

“சிரியா” குழந்தையும் முள்ளிவாய்க்காலும் கடற்கரையோரம் ஒதுங்கிய பாலகனின் உடலைப் பார்த்து நெஞ்சு கனக்கிறது. காவுகொண்ட கடலே காலனோடு கருத்து வேறுபட்டிருக்கக் கூடும் இந்தப் பாலகனின் உயிரைப் பறிப்பதா என்று .குழந்தையோடு குடும்பத்தையிழந்த தந்தையின் வலியையும் வேதனையையும் எங்களால் ஆழமாகவே உணரமுடியும். இறைவன் வரம் கொடுத்தாலும் இதயங்கள் தாங்காது அந்த வலிலையை. அப்பனுக்கு ஆறுதல் சொல்ல யாருளரோ நாமறியோம் – ஆயினும் வல்லமை கொடுவென்று மன்றாடுவோம். சின்னக் குழந்தையின் வாழ்ந்த காலச் சிரிப்பு – இனி நினைவில் வரும் போது தந்தை எப்படி வாடிப் போவார்…

கிழக்குத் தமிழீழத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் அரிய கிணறு கண்டுபிடிப்பு.

வந்தாறுமூலை பிள்ளையார் கோவிலில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு   மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.   வரலாற்றுதுறைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், தொல்லியல் ஆய்வுக்குழுவினர் ஆகியோர் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயக் காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் அமைக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன.   இதுபற்றிப் பேராசிரியர் சி.பத்மநாதன்…

மேரியட்டா தமிழ்ப்பள்ளியில் தமிழ் வகுப்புகள்

தமிழ் வகுப்புகள் நேரம்: வெள்ளிக்கிழமை மாலை 7:00 -8:30 வரை! 2015-2016 ஆம் ஆண்டிற்கான பதிவுகள் நடைபெற்று வருகின்றன.   [ முகவரி : Hightower Trail Middle School, 3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062. Ph: 859-GATS-MTS ] மின்வரி : contact-mts@googlegroups.com http://www.mariettatamilschool.org/  

தமிழியக்க முன்னோடி சி.இலக்குவனார் – பா.சு. இரமணன்

  ‘செந்தமிழ் மாமணி’. ‘இலக்கணச் செம்மல்’. ‘முத்தமிழ்க் காவலர்’. ‘செம்மொழி ஆசான்’ ‘தமிழர் தளபதி’ என்று தமிழறிஞர் பலரால் போற்றப்படுபவர் சி. இலக்குவனார். “தமிழுக்கென தோன்றிய அரிய பிறவிகளில் இலக்குவனாரும் ஒருவர். அவர்தம் தமிழ்ப்பற்றும். தமிழ்வீரமும் தமிழ் நெஞ்சமும் நம் வணக்கத்துக்குரியவை. தமிழுக்காகத் துன்பத்தில் வளர்ந்து துன்பத்தையே தாங்கித் துன்பத்திலேயே கண்ணயர்ந்தவர்” என்கிறார் தமிழறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனார்.   கல்வியாளர் முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியம், முனைவர் வேங்கடசாமி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய இரா. நல்லகண்ணு போன்றோர்…