கலைச்சொல் தெளிவோம்! 146 பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia; 147 புதுமை வெருளி-Neophobia

பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia   faeces-மலம் எனச் சூழறிவியல், மீனியல், மனைஅறிவியல், மருந்தியல், கால்நடை அறிவியல் ஆகியவற்றில் பயன்படுத்தி வருகின்றனர். மலம் என்பதை இடக்கர் அடக்கலாகப் பவ்வீ (பகரத்தில் வரும் ஈகாரம்-ப்+ஈ) என்பது தமிழ் மரபு. மலத்தைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பவ்வீ வெருளி- Coprophobia/Scatophobia புதுமை வெருளி-Neophobia   புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுநர் (புறநானூறு : 174.16) இது தவிர, புதிது(14), புது(109), புதுவ(4), புதுவதின்(1), புதுவது(19), புதுவர்(1), புதுவன(1), புதுவிர்(2), புதுவை(1), புதுவோர்(5), புதுவோர்த்து(1), எனப் புது…

கலைச்சொல் தெளிவோம்! 144 பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia; 145 பயிர் வெருளி-Botanophobia

பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia   13 ஆம் எண் குறித்து ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய பதின்மூன்றாம் எண் வெருளி-Triskapidekaphobia/ Terdekaphobia 145 பயிர் வெருளி-Botanophobia பயிர்(22) சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளது. பயிர் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் பயிர் வெருளி-Botanophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 143 படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia

படி வெருளி(படிக்கட்டு வெருளி)-Bathmophobia/Climacophobia   படி(14), படிக்கால்(1), படிநிலை(2), என்பன போன்று பல்வேறு சொற்கள் சங்கப்பாடல்களில் வருகின்றன. எனினும் இவை பெரும்பாலும் படிதல் முதலான பொருள்களையே குறிக்கின்றன. படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப (கலித்தொகை : 35 2) இதற்கு உரை எழுதியுள்ள புலவர் மாணிக்கனார் படி என்பதாவது ஒருவரது மேன்மை கருதி மனமுவந்து ஏற்பாடு செய்யும் உணவுத்திட்டம் முதலியன என்கிறார். இன்றைக்குப் பணியாளர்களுக்குத் தரப்படும் படி(allowance) என்பதற்கு இது முற்றிலும் பொருந்துகின்றது. எனினும் மாடி அல்லது ஏணி…

கலைச்சொல் தெளிவோம்! 135 நீர் வெருளி-Aquaphobia

கலைச்சொல்  135 நீர் வெருளி-Aquaphobia தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர், நீர் வெருளி-Aquaphobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 137 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia

 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682) தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55) நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149) நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9) நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1) நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1) நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை :…

கலைச்சொல் தெளிவோம்! 136 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia

 நூல் வெருளி/ புத்தக வெருளி-Bibliophobia   நூல் நெறி மரபின், பண்ணி, ஆனாது (சிறுபாண் ஆற்றுப்படை : 230) செறிந்த          நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி         ஊர் காப்பாளர், (மதுரைக் காஞ்சி : 645-647) நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு (நெடுநல்வாடை : 76) திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது, (கலித்தொகை : 99.3) நூலோர் புகழ்ந்த மாட்சிய (பெரும்பாண் ஆற்றுப்படை :487) என்பன போல் நூல்பற்றிய சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் உள்ளன….

சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!

ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!   கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….

படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்   30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன்

விண்தொலைக்காட்சியில் பண்பாடு குறித்துக் கூறுகிறேன் – இலக்குவனார் திருவள்ளுவன் சித்திரை 1, 2946, ஏப்பிரல் 14, 2015 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி – 12.00 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் விண் தொலைக்காட்சியின் நீதிக்காக நிகழ்ச்சியில் பண்பாடு குறித்துக் கருத்து தெரிவிக்கின்றேன். மறு ஒளிபரப்பு இரவு 8.00 மணி – 9.00    http://wintvindia.com இணையவரியில் இணையத்திலும் உடன் காணலாம்.  வாய்ப்பிருப்பின் காண வேண்டுகின்றேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் தமிழே விழி! தமிழா விழி!

கலைச்சொல் தெளிவோம்! 140 – 142 நோய் நுண்மி வெருளி-Bacillophobia; நோவு வெருளி Algophobia; வலி வெருளி-Odynophobia

  நோய் நுண்மி வெருளி-Bacillophobia; நோவு வெருளி Algophobia; வலி வெருளி-Odynophobia   நுண்(152), நுண்செயல்(1), நுண்ணிதின்(9), நுண்ணிது(1), நுண்ணியை(1), நுண்மைய(1), என்பன நுண்மை அடிப்படையிலான சங்கச் சொற்கள். நுண் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சொல்லே நுண்மி. நோய் நுண்மி வெருளி-Bacillophobia, Microbiophobia, Bacteriophobia உடல் வலி குறித்தும் உடல் வேதனை குறித்தும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் நோவு வெருளி – Algophobia/Agliophobia வலி வெருளி – Odynophobia/Odynephobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 139 நோய் வெருளி-Nosophobia

 நோய் வெருளி-Nosophobia   வலந்துழி, மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து (பரிபாடல் : 4:13) உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் (ஐங்குறுநூறு : 28: 1) நோயொடு பசி இகந்து ஒரீஇ, (பதிற்றுப்பத்து : 13: 27) நோய் தணி காதலர் வர, ஈண்டு (அகநானூறு : 22:20) நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! (புறநானூறு : 13: 9) இவை போல் நோய் (259), நோய்ப்பாலஃது (1), நோய்ப்பாலேன்(2), நோயியர்(1), நோயேம்(1), நோயை(2), நோலா(1), நோவ(30), நோவது…

கலைச்சொல் தெளிவோம்! 138 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia

 நெஞ்சுநோய் வெருளி-Cardiophobia   நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப (திருமுருகு ஆற்றுப்படை :திருமுருகு ஆற்றுப்படை : 65) கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப (பொருநர் ஆற்றுப்படை : 98) நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு (முல்லைப் பாட்டு : : 81) அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின் (மதுரைக் காஞ்சி : : 472) அம் தீம் தெள் நீர் குடித்தலின், நெஞ்சு அமர்ந்து (குறிஞ்சிப் பாட்டு : : 211) நெஞ்ச(1), நெஞ்சத்த(1), நெஞ்சத்தவன்(1), நெஞ்சத்தன்(1),…