இலக்குவனார் நினைவேந்தல் + என்னூலரங்கம், 01.09.2024
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50) தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 16, 2055 / 01.09.2024 ஞாயிறு காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் உரையாளர்கள் : முனைவர் ஒளவை அருள் நடராசன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் செல்வி சா.துர்கா சிரீ …
சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 691-700 691. Actual Or Express Notice நேரடியான அல்லது வெளிப்படையான புரிதல் நிகழ்வு, கோரிக்கை, உரிமை கோரல்,செயல்முறை குறித்த உள்ளபடியான அல்லது வெளிப்படையான புரிதல். notice என்றால் அறிவிப்பு எனக் கொள்வதைவிட அறிதல், புரிதல், உணர்தல் என்ற முறையில் கவனிக்கப்படுவதைக் குறிப்பதாகக் கொள்வதே சரியாகும். ஓர் உண்மை உள்ளதை ஒருவர் அறிதலே அல்லது நிகழ்வு அல்லது உண்மை பற்றிய அறிவை ஒருவர் உள்ளவாறு…
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! அறிஞர்களைப் போற்றும் அரசே பாராட்டிற்குரியது என்கின்றனர் உலக அரசியலறிஞர்கள். தமிழ்நாடு அரசும் பல வகைகளில் அறிஞர்களைப் போற்றுகிறது. அவர்கள் மூலம் அறிவுத் தளத்தை விரிவாக்குகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போற்றுதலுக்குரியது. அறிஞர்களையும் வல்லுநர்களையும் பாராட்டும் பொழுது சமநிலை இருக்க வேண்டும். திறமைக்கேற்பப் பாராட்டுதல்கள் அமைய வேண்டும். அவ்வாறு சமநிலை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அக்குறையைக் களைய வேண்டுகிறோம். தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அரசு விருதுகள் அளிப்பதுபோல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்…
சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 681-690 681. acts justified by law சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் ஞாயப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் நயன்மைப்படுத்தப்பட்ட செயல்கள் சட்டத்தால் முறைமைப்படுத்தப்பட்ட செயல்கள் நிகழ்வுகளின் உண்மை நிலை குற்றம் நடந்துள்ளது என்பதைக் காட்டினாலும் குற்றம் செய்ததாகத் தவறாகக் கருதப்படுபவர், தான் இதில் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் எனப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். 682. Acts regarded as trivial அற்பமாகக் கருதப்படும் செயல்கள் …
சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 671-680 671. Activity, Political அரசியல் செயற்பாடு அரசியல் கட்சியின் அல்லது அரசியல் கட்சியின் சார்பாளனின் வெற்றி தோல்வி நோக்கிய செயற்பாடு. 672. Actori incumbit onus probandi மெய்ப்பிப்புப் பொறுப்பு முறையீட்டாளரிடம் உள்ளது. வழக்கு தொடுத்தவருக்கே மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது. குற்றம் நிகழ்ந்ததாக முறையிடும் வழக்காளியே அதற்கான ஆதாரத்தையும் தர வேண்டும். ஆதாரம் அளிக்கவேண்டிய சுமை, வாதியிடமே உள்ளதை இது குறிக்கிறது. எனவே,…
சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 661. Active Confidence செயலுறு நம்பிக்கை முனைப்பான நம்பிக்கை செயற்திறமுடைய நம்பகத்தன்மை ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம். நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு…
சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 651. Action, penal தண்டனைக்குரிய நடவடிக்கை அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். 652. Action, Remedial மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான…
தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி
காணுரை தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை இலக்குவனார் திருவள்ளுவன் செவ்வி காண்பவர் விசவனூர் வே.தளபதி
சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 641. Action வழக்கு வழக்கு நடைமுறை செயற்படுமுறை வழக்கு மூலம், செயல், வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி. வீரதீரச் சண்டைப்படங்களை…
சங்க இலக்கியங்களில் அறிவியல், இலக்குவனார் திருவள்ளுவன், ஆத்திரேலியா தமிழ் வளர்ச்சி மன்றம்
காணுரை சங்க இலக்கியங்களில் அறிவியல் தமிழ் வளர்ச்சி மன்றம் ஆத்திரேலியா
சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 631. Acting incumbent மாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர் நடப்புப் பதவியாளர் நடைமுறைப்பதவியில் மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர். பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர். 632. Acting Judge பொறுப்பு நீதிபதி நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப்…
ஆளுமையர்உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். (திருவள்ளுவர், திருக்குறள், ௩௱௯௰௪ – 394) ஆளுமையர் உரை 107 & 108 ; என்னூலரங்கம், தமிழ்க்காப்புக்கழகம் தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் நிகழ்வு நாள் : ஆவணி 02, 2055 ஞாயிறு 18.08.2024 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் மக்கள் கல்வி…
