தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார். முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.  பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி…

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன் – இலக்குவனார் திருவள்ளுவன்

மலர்மாமணி, புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்  எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது தால்மியாபுரம் பெயர் மாற்ற எதிர்ப்பான கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் அமர்ந்தவர்; கோடை விடுமுறைகளில் கலைஞர் கருணாநிதியின் நச்சுக் கோப்பை, தூக்கு மேடை போன்ற சீர்திருத்த நாடகங்களை இயக்கியும், கதைத்தலைவன் வேடங்களில் நடித்தும், விழிப்புணர்வுப் பரப்புரையில் ஈடுபட்டவர்; பள்ளி இறுதி வகுப்பு பயிலும் பொழுது தேவிகுளம், பீர்மேடு கேரளத்தோடு இணைக்கப்பட்டதை எதிர்த்துத் தமிழகத்தில்  நடந்த வேலை நிறுத்தத்தில் பள்ளி மாணாக்கர்களையும் பங்கேற்கச் செய்தவர்; மாணவப் பருவத்திலேயே தமிழ்க்காப்புப் பாதையில் நடைபோட்ட அவர்தாம் புலவர்…

தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தண்டமிழ்ப் புலமையாளர் தாயம்மாள் அறவாணன்   மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் உலகில் பெண்பாற்புலவர்கள் இருந்துள்ளனர். சங்கக்காலத்தில் 57 பெண்கள் புலமையில் சிறந்து நாடுபோற்ற வாழ்ந்துள்ளனர். அவ்வழிவழி மரபில் தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் புலமையாளராகத் திகழ்பவர் முனைவர் தாயம்மாள் அறவாணன். பிறப்பும் தொடக்கக் கல்வியும்   குமரி மாவட்டம் சுசீந்திரம் பக்கத்தில் மயிலாடி என்னும் ஊர் உள்ளது. அதன் அண்மையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சேந்தன்புதூர் என்ற ஊரில்  வைகாசி 10, 1975 / 23-5-1944இல் தாயம்மாள் பிறந்தார்.   சித்தாந்த ஆசான், வித்துவான் திரு….

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழைக் காக்குமா தமிழக அரசு? – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ்நாட்டில் எல்லாக் கட்சியின் ஆட்சிகளிலும் தமிழ் வளர்ந்தும் உள்ளது; தளர்ந்தும் உள்ளது. எனினும் எந்த ஆட்சியிலும் தமிழ் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக மாற்ற எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய அரசு, இருக்கின்ற பயன்பாட்டு நிலைகளிலும் தமிழைத் தொலைத்து வருகின்றது. பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி தொலைக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் எண்ணிக்கை குறைகிறது என்றால் அதை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தமிழ்வழிப்பள்ளிகளை அரசு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றுகிறது.  அரசு மழலைப்பள்ளிகள்…

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நெறிக்காவலர் அறவாணர் நீதிபதி மகாதேவனுக்குப் பாராட்டுகள்! தமிழ்ப்பகைவர்களே! வெளியேறுங்கள்!   தாய்மொழியில் இறைவனை வணங்குபவர்களுக்குத்தான் இறையருள் முழுமையாகக் கிட்டும்.  தமிழர்கள் பிற மொழியில் தம் சார்பாக யாரோ கடவுளை வாழ்த்த, அதைப்புரியாமல் செவிகொடுத்துக் கேட்டுத் தீவினை புரிந்து வருகின்றனர். எனவேதான், இறையருள் இல்லாமல் இன்னலுற்று வருகின்றனர். இறைவனைத் தமிழில் வணங்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைநெறி பரப்பியவர்களுள் ஒருவர் நம்பியாரூரன்; சுந்தரமூர்த்தி நாயனார் என்று அழைக்கப் பெறுகிறார். திருமுனைப்பாடியில் திருநாவலூர் எனும் ஊரில் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரன் சிவபெருமானைப்பற்றி 38,000…

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு   தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.  செய்திகளையும் படைப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இதழ்களில் பெரும்பான்மையன தமிழைக் கொண்டு சேர்ப்பதில்லை. காட்சி ஊடகங்களால் தமிழ் அழிந்து கொண்டிருக்கும் இக்காலக்காட்டத்தில் இதழ்களாவது தமிழைக் காக்க வேண்டும். இப் பணிகளால் காட்சி ஊடகங்களையும்…

கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்-இலக்குவனார் திருவள்ளுவன்

கணித்தமிழ் அறிஞர் ந. தெய்வசுந்தரம்  எல்லார்க்கும் எல்லா நிலைகளிலும் எல்லாப்பணிகளிலும் கணிப்பொறி என்பது தவிர்க்க இயலாததாக உள்ளது. எனவே, கணிப்பொறி பயன்பாடு சார்ந்த அறிவியலறிவு நமக்குத் தேவை. தொன்மை வாய்ந்த தமிழ் மொழி புத்திளமையுடன் திகழக் கணிப்பொறி பயன்பாடு தேவை. இத்தகைய சிறப்பு வாய்ந்த கணிப்பொறிப் பயன்பாட்டைத் தமிழில் அறிமுகப்படுத்தவும் பயன்படுத்தவும் கூடிய கணித்தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர்களில் குறிப்பிடத்தக்கவராகப் பேராசிரியர் முனைவர் ந.  தெய்வசுந்தரம் உள்ளார். பேரா. ந. தெய்வசுந்தரம் பயன்பாட்டு நிலைகளிலும் ஆய்வு நிலைகளிலும கணியன்களை(softwares) உருவாக்கித் தமிழுலகம் பயனுற உழைக்கிறார். அ)…

முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ – இலக்குவனார் திருவள்ளுவன்

  முத்திரை பதிக்கும் வித்தகர் மு.பொன்னவைக்கோ   பிற துறைகளில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களால்தான் அறிவியல் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. அத்தகையவர்களுள் ஒருவராகவும் இலக்கியத் தமிழ் ஈடுபாட்டாளராகவும் திகழ்பவரே முனைவர் பொறிஞர் மு.பொன்னவைக்கோ.   முந்தைய தென்னார்க்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்,  மன்னர் பாரி வள்ளல் பரம்பரையைச் சார்ந்த தெய்வத்திரு. சு.முருகேசர், தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையார் வாழ்ந்தனர். இவ்விணையரின் மக்கள் எழுவருள் இளையமகனாகத் தை 17, 1975/30.01.1944 அன்று பிறந்தவர் இரத்தினசபாபதி….

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி! – இலக்குவனார் திருவள்ளுவன்

செந்தமிழர் போற்றும் செம்மொழி க.இராமசாமி!   18ஆம் நூற்றாண்டில் ‘பொன்பரப்பியனான வனகோபரன்’என்னும் சோழர்கள் பரம்பரையிலிருந்து வந்து ஆட்சி செய்து வந்த சிற்றரசன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்ட ஊரே ‘பொன்பரப்பி’. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொன்பரப்பி ஊர் தமிழர் உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ளதுபோல் செம்மொழி வினைவலர் இராமசாமி பிறந்தமையால் செம்மொழிச் செயலாக்க வரலாற்றிலும் இடம் பெற்றுவிட்டது. ‘செம்மொழியார்’, ‘செம்மொழிச்  செம்மல், எனச் செந்தமிழரால் போற்றப்படும் அறிஞர் செம்மொழி இராமசாமி பொன்பரப்பியில் ஆவணி 26, தி.பி.1980/10.09.1949 அன்று பிறந்தார். படிப்பும் கல்விப் பணியும் ஆய்வுப்பணியும்    தான்பிறந்த ஊரான…

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞர் செம்மொழி விருதுகள் வழங்குவதே கலைஞருக்கு உண்மையான அஞ்சலி! தமிழுக்குரிய தொன்மையான செம்மொழித் தன்மையை மத்திய அரசை ஏற்கச் செய்ததில் கலைஞர் கருணாநிதிக்கு முதன்மைப் பங்குண்டு. தமிழறிஞர்களின் வேண்டுகோளுக்கிணங்கச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைய அவரே காரணமாக இருந்தார். இந்நிறுவனம் வளரவும் தமிழ் மேம்படவும் கனவு கண்டார்.  எனவே தனிப்பட்ட முறையில் சொந்தப்பணம் உரூ 1 கோடி வழங்கிச் செம்மொழித் தமிழ் அறக்கட்டளையை வழங்கினார். இத்தொகை தரும் வட்டியிலிருந்து ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கவும் ஏற்பாடு செய்யப்பெற்றது….

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.

கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார். (வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07,  தி.பி. 2049  / 24.10.2018)   தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால்  புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார். சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை  ஒப்படைத்தார். ‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர்  அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது.  இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு…