கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia

கலைச்சொல் தெளிவோம்!130. தொழில் வெருளி-Ergo phobia    பணி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 9 இடங்களில் இடம் பெற்றிருந்தாலும், பணிவு அல்லது தாழ்தல் என்னும் பொருள்களிலேயே வந்துள்ளன. தொழில் என்னும் சொல்தான் 84 இடங்களில் பல்வகை வேலைகளையும் குறிக்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. மருந்தில் கூற்றத்து அருந்தொழில் (புறநானூறு : 3.12) முதன்முறை இடைமுறை கடைமுறை தொழிலில் (பரிபாடல் : 3.71) செய்தொழில் கீழ்ப்பட்டாளோ, இவள்? (கலித்தொகை : 99.12) தொழில் செருக்கு (அகநானூறு : 37.6) மழை தொழில் உதவ (மதுரைக்…

கலைச்சொல் தெளிவோம்! 128 : ஞாங்கர்-Lance/javelin

ஞாங்கர் (14) என்னும் சொல், ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன (நற்றிணை : 171.8) என்னும் அடியில் வேலாயுதத்தைக் குறிக்கிறது. மீனியலில் lance மீனெறிவேல் எனப்படுகிறது. அவ்வாறில்லாமல் ஞாங்கர் என ஒற்றைச் சொல்லில் குறிக்கலாம். ஞாங்கர்-Lance/javelin – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 127: ஞமன்-pointer

 பாயிண்ட்டர்/pointer என்பதற்குச் சுட்டுமுள், சுட்டிக்காட்டி, குறிமுள், காட்டி, சுட்டி, எனப் பலவாறாக ஆட்சியியல், வேதியியல், பொறிநுட்பவியல், மனையியல், தகவல் நுட்பவியல், கணக்கியல், இயற்பியல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.  தெரிகோன் ஞமன்போல (புறநானூறு 6. 9) எனத் துலாக் கோலின் முள்முனை கூறப்பட்டுள்ளது. மேலே குறித்தவற்றைவிடச் சங்கச்சொல் சிறப்பாகவே உள்ளது.   ஞமன்-pointer – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 126 : கொழு-awl

நாஞ்சில்ஆடிய கொழுவழிமருங்கின் (பதிற்றுப்பத்து 58.17) என வருவது போன்று கொழு(65) என்னும் சொல் கொழுப்பு, செழிப்பு, கலப்பையில் பதிக்கும் இரும்புஆணி, துளையிடும் பெரியஊசி முதலான பொருள்களில் கையாளப்பட்டுள்ளது. துளையிடும் பெரிய ஊசி என்னும் பொருளில், கொழுச்சென்ற வழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல (தொல். பாயி. உரை). எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்பொழுது ஆ(வ்)ல்/ awl-தமரூசி (தொல்.,பொறி.,கல்.) என்றும் கூரூசி(தொல்.) என்றும் சொல்லப்படுகின்றது. சங்கச் சொல்லாகிய கொழு என்பதே பொருத்தமான சொல்லாக அமைகின்றது.  கொழு-awl – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 125 : இவரி/இவருநர்-jockey

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம் (நற்றிணை 67.1) குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல், உந்தி (மதுரைக்காஞ்சி 245) என்னும் இடங்களில் செல்லுதல், செலுத்துதல் என்னும் பொருள்களில் இவர்தல் கையாளப்பட்டுள்ளது. குதிரையேறிச் செலுத்துபவரை இவருநர் எனலாம். பொறியியல், இயற்பியல் முதலான அறிவியல் துறைகளில் இவரி எனச் சொல்லலாம். இவரி/இவருநர்-jockey – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 124 : அதரி-valve

 வால்வு (valve) என்பதற்குக் கால்நடையியலிலும் மீனியலிலும் தடுக்கிதழ் என்றும், வேளாணியலில் தடுக்கிதழ், ஒருபாற்கடத்தி என இருவகையாகவும், பொறிநுட்பவியலில் தடுக்கிதழ், அடைப்பிதழ், ஓரதர், கவாடம் என நால்வகையாகவும், மருத்துவயியலில் ஒருவழி மடல், கதவம் தடுக்கிதழ், கவாடம் என நால்வகையாகவும், மனையியலில் ஓரதர், வேதியியலில் கவாடம், வால்வு என இருவகையாகவும் பயன்படுத்துகின்றனர்.  அதர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 43 இடங்களில் வருகின்றது. பெரும்பாலும் வாயில் என்னும் பொருளே கையாளப்படுகின்றது. ஆனினம் கலித்த அதர்பல கடந்து (புறம் 138:1) மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளித்தோர் (நற்றிணை :…

கலைச்சொல் தெளிவோம்! 123. தேரை வெருளி-Bufonophobia

தேரை(10) என்னும் உயிரினமும் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். தேரைஅல்லது தேரையினம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் தேரை வெருளி-Bufonophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் : Haptephobia, Aphephobia & Chiraptophobia

கலைச்சொல் தெளிவோம்! 120 -122 தீண்டு வெருளிகள் தீண்ட(3), தீண்டல்(1), தீண்டலின்(4), தீண்டவர்(1), தீண்டற்கு(1), தீண்டா(1), தீண்டாது(1), தீண்டி(21), தீண்டிய(3), தீண்டு(1)தீண்டு்ம் (1), தொடு(10), தொடுதல்(2), எனப் பல சொற்கள் தொடுதலைக்குறிக்கும் வகையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. பிறரால் தொடப்படுவது குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் தீண்டுகை வெருளி-Haptophobia/Haphephobia/ Haptephobia அல்லது தொடுகை வெருளி–Aphephobia/ Aphenphosmphobia அல்லது தீண்டல் வெருளி-Chiraptophobia எனப்பெறும். [தீண்டு > தீண்டுகை+ வெருளி; தொடு> தொடுகை+ வெருளி] – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள்

கலைச்சொல்  114-119. தனிமைத் தொடர்பான வெருளிகள் எமி யேந்துணிந்த வேமஞ்சா லருவினை (குறிஞ்சிப். 32). எமியம் (8), எமியேம்(1), எமியேன்(1), தமி (3) தமித்தது(1), தமிய(3), தமியம்(2), தமியர்(11), தமியள்(6), தமியன்(5), தமியார் (1), தமியென்(1), தமியேம்(1), தமியேன்(1), தமியை(4), தமியோர்(3), தமியோன்(1), தனி(27), தனித்தலை(1), தனித்து(4), தனித்தனி(1), தனிப்போர்(1), தனிமை(3), தனியவர்(1), தனியன்(2), தனியே(3), தனியை(2), தனியோர்(2) ஆகிய சொற்கள் தனி என்னும் அடிப்படையில் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன. தனிமையினால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம். தனியர் வெருளி-Anuptaphobia எமிய வெருளி- Eremo…

கலைச்சொல் தெளிவோம்! 113. தற்பாலுறவு வெருளி-Homophobia

கலைச்சொல் 113. தற்பாலுறவு வெருளி-Homophobia    தன் (319), தன்முன் (1), தனக்கு(14), ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளன. பால் என்னும் சொல் 152 இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருந்தாலும், பசும்பால், கள்ளிப்பால் போன்ற பால் நீர்மங்களையும், பகுத்தல் என்னும் பொருளிலும்தான் கையாளப்பட்டுள்ளன.   பகுத்தலைக் குறிக்கும் பால் என்பதன் அடிப்படையில்தான், ஆண்பால் முதலான ஐந்து பால்பாகுபாடுகளும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, பால் என்பது பாலினத்தைக் குறிக்கும் நடைமுறை சங்கக் காலத்திலும் இருந்துள்ளது. உறவு என்னும் சொல் ஓரிடத்தில் கையாளப்பட்டுள்ளது.   தன் கடைத் தோன்றி,…

கலைச்சொல் தெளிவோம்! 105. கீறல் வெருளி 106. குருதி வெருளி107. கூட்ட வெருளி 108. கோழி வெருளி

கலைச்சொல்  105.கீறல் வெருளி-Amychophobia பொதியில் முனிவன் புரை வரைக் கீறி (பரிபாடல் : 11.11) என வருகிறது. கீறு>கீறல்+வெருளி கீறல் வெருளி-Amychophobia கலைச்சொல்  106. குருதி வெருளி-Hemophobia/Hematophobia குருதி என்னும் சொல்லை 66 இடங்களிலும், குருதித்து(1), குருதிய(1) ஆகியசொற்களையும் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். குருதியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய குருதி வெருளி-Hemophobia/Hematophobia   கலைச்சொல்  107. கூட்ட வெருளி-Ochlophobia/Demophobia/Enochlophobia ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து (பதிற்றுப்பத்து : 72.12) மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய (பதிற்றுப்பத்து : 88.24)…

கலைச்சொல் தெளிவோம்! 109. சல வெருளி;110. சாவு வெருளி;111. சிவப்பு வெருளி;112. சூன்று வெருளி

கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia  தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90) சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம் சல வெருளி-Hydrophobia [சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.] கலைச்சொல்  110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia…