உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர் தொடர்ச்சி) என் சரித்திரம் – பாகம் 2 26. மாயூரப் பிரயாணம் 1/2 செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருlம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 திசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகப்பட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம்…
ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும் துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம் தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7 தொடர்ச்சி) இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர்களுள் இராமராய நிம்கார், பார்த்தசாரதி இராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாசையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஅசுத்தி சமசுதானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய இராமராய நிம்கார் பானகல் இராச பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி இராய நிம்கார் தற்காலம் பானகல் இராசாவாகி சீவிய திசையில் இருக்கிறார். மற்றெருவர் வே. பா. இராமேசம்….
உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர் தொடர்ச்சி) பெரும்புலியூர் பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த (இ)ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோசமடைந்தார். (இ)ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விசயங்களையே பேசிக் கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது…
ஆளுமையர் உரை 58,59 & 60 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 30.07.2023
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்- 416) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 58,59 & 60 : இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆடி 14, 2054 /30.07.2023 ஞாயிறு தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழ்மாமணி இதழாளர் கவிஞர்…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 தொடர்ச்சி) நீதிமன்றப் பணி இப்படி இருந்தும் நீதிமன்றத்தில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய்ப் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருடம் வழக்குரைஞர்களாக பதிவு செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய்க் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருடம் எனது நண்பர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருடம் நான் 55 ஆவது வயதில் விலக வேண்டி வந்தது….
உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம் தொடர்ச்சி) விருத்தாசல (ரெட்டியா)ர் நான் விருத்த இலக்கணம் படித்த காலத்தில் சீர்கள் ‘அளவொத்து’ இருக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டேன். ஓரடியில் ஆறு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஆறு சீர்களே இருக்க வேண்டுமென்றும், ஏழு சீர்கள் இருந்தால் மற்ற அடிகளிலும் ஏழு சீர்களே இருக்க வேண்டுமென்றும், இவ்வாறே சீர்களின் எண்ணிக்கை நான்கடிகளிலும் சமமாக இருக்க வேண்டுமென்றும் நினைத்தேன். ‘அளவொத்தல்’ என்பதற்கு இதற்கு மேலும் ஓர் அர்த்தம் உண்டென்பதை அதற்கு முன் நான் அறிந்துகொள்ளவில்லை. அதைப்…
ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: 23.07.2023
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர்,திருக்குறள் 414) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 55,56 & 57 : தமிழ்க்காப்புக்கழகம்: இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆடி 07, 2054 /23.07.2023 ஞாயிறு தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்” – உரையாளர்கள் தமிழிசை…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 6 
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தொடர்ச்சி) 1882-ஆம் வருட முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்ப்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் ஏ. நரசிம்மாச்சாரியிடம் விட்டு, “இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 44 – அத்தியாயம் 25 செங்கணத்தில் வாசம்
(என் சரித்திரம் 43 : காரிகைப்பாடம் தொடர்ச்சி) அத்தியாயம் 25செங்கணத்தில் வாசம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் சகோதரர்களாகிய வேலையர், கருணைப் பிரகாசர் இவர்களுடைய பரம்பரையினரும் உறவினரும் அப்பக்கங்களில் பல கிராமங்களில் பள்ளிக்கூடம் வைத்திருந்தார்கள். அவர்கள் யாவரும் ஓரளவு தமிழ்ப் பயிற்சி உடையவர்கள். நல்ல பாடல்களை மனனம்செய்து அவற்றை உரிய சந்தர்ப்பங்களிற்சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துப் பயன்பெறுவார்கள். அவர்களும் வேறு சில வித்துவான்களும் அடிக்கடி செங்கணத்திற்கு வந்து விருத்தாசல இரெட்டியாரிடம் சம்பாசணைசெய்து சில நாட்கள் தங்கியிருந்து தங்களுக்குள்ள சந்தேகங்களை நீக்கிக்கொண்டும் பொருளுதவி பெற்றும் செல்வார்கள். சில வித்துவான்கள்…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 5. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 4. தொடர்ச்சி) 4. தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விசயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்…
உ .வே.சா.வின் என் சரித்திரம் 43 : காரிகைப் பாடம் தொடர்ச்சி
(உ .வே.சா.வின் என் சரித்திரம் 42 : காரிகைப் பாடம் தொடர்ச்சி) அத்தியாயம் 24 தொடர்ச்சிகாரிகைப் பாடம் தொடர்ச்சி கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே பெற்றிருந்தமையின் அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. அடிக்கடி யாரேனும் அயலூரிலிருந்து வந்து இரண்டொரு நாள் தங்கி அவரிடம் சம்பாஷித்துச் செல்வார்கள் .அவர் கன்னையரென்னும் வீரசைவரிடம் பாடங் கேட்டவர். வீரசைவர்களுக்கும் இரெட்டியார்களுக்கும் ஒற்றுமையும் நட்பும் அதிகமாக இருந்தன. வீரசைவ வித்துவ சிகாமணியாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசரை அண்ணாமலை இரெட்டியார் என்னும் செல்வர் ஆதரித்துப் பாதுகாத்த வரலாற்றை அவ்விருவகையினரும் அடிக்கடி பாராட்டிச்…
