சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 831-850 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 831. க்ருக(ஹ)ம் – வீடு 832 ஆகாச(ஸ)ம் – வெளி, விண் 833. ச(ஸ)ந்தோச(ஷ)ம் – மகிழ்ச்சி 834….
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 15 : 55 வயதுக்கு மேற்பட்ட சரித்திரம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம் – தொடர்ச்சி) ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 1928-ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் முதல் தேதி முதல் நான் அரசு வேலையிலிருந்து விலக வேண்டி வரும் என்று முன்பே அறிந்திருந்தபடியால் அதற்காக அது முதல் என் வாழ்நாட்களை எப்படி கழிப்பது என்று ஒரு தினசரிப் பட்டி ஏற்படுத்திக்கொண்டேன். அதை எழுது முன் எனது நண்பர்களில் பலர் நீ ஏன் மறுபடியும் வழக்குரைஞராகப் பழகலாகாது என்று என்னைக் கேட்டிருக்கின்றனர். அன்றியும் சனவரி மாதம் 31-ஆந்தேதி என்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 53 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2) அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 1/2 மாயூரத்திற்குச் சென்ற மூன்றாம் நாள் ‘பாடங் கேட்க ஆரம்பித்துவிட்டோம்’ என்ற சந்தோசத்தில் நான் மூழ்கினேன். “சாமா, நீ இன்றைக்கு நைடதம் கேட்க ஆரம்பித்ததே நல்ல சகுனம். கலியின் தொல்லைகள் நீங்குவதற்கு நைடதத்தைப் படிப்பார்கள். இனிமேல் நம் கட்டம் தீர்ந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்” என்று என் தந்தையார் சொன்னார். அது வாசுத்தவமென்றே நான் நம்பினேன். மனிதன் முயற்சி செய்வதெல்லாம் ஏதாவது நம்பிக்கையை…
ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): தளியும் பள்ளியும்
(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 3- தொடர்ச்சி) ஊரும் பேரும் தளியும் பள்ளியும் திருவாரூர்-மண்தளி குகைக் கோயில்களும் கற் கோயில்களும் தோன்று முன்னே, மண்ணாலயங்கள் பல இந் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படுகின்றது. அம் மண்தளியில் அமர்ந்த மகாதேவனை, “தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே” என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப்புலமை…
தமிழ் வளர்த்த நகரங்கள் 6. – அ. க. நவநீத கிருட்டிணன் : மதுரையின் மாண்பு
(தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் : தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2 -தொடர்ச்சி) அத்தியாயம் 3. மதுரையின் மாண்பு இனிமையான நகர் மதுரை தமிழகத்தின் முதன்மையான நகரமாகவும் பாண்டிய நாட்டின் பழமையான தலைநகரமாகவும் இரண்டாயிரம் ஆண்டுகளாக விளங்கிவரும் இணையிலாப் பெருமையுடையது மதுரைமாநகரம். மதுரை என்ற சொல்லுக்கு இனிமையென்பது பொருள். என்றும் இனிமை குன்றாத தனிப்பெருநகரமாகச் சிறப்புற்று விளங்குவது இந்நகரம். இதனை முதற்கண் தோற்றுவித்த பாண்டியன், நகரைத் தூய்மை செய்தருளுமாறு இறைவனை வேண்டினான். மதுரையில் எழுந்தருளிய சோமசுந்தரப்பெருமான் தன்…
தமிழ்க்கலை (சொற்பொழிவுகள்): முன்னுரை – க. அன்பழகன் + பதிப்புரை
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் முன்னுரை – க. அன்பழகன் தண்டமிழ்ப் பெரியார், சாந்தசீலர், ஒழுக்க ஒளி திரு. வி. க. அவர்களின், உயர்வெண்ணும் உள்ளத்தினின்றும் வெளிப்பட்ட ஒப்பற்ற கருத்தோடைகளிற் சில ஈண்டு தொகுக்கப்பெற்றுள்ளன. தமிழ் நாட்டின் மேடைகள் அனைத்தும், கட்சிகள் யாவும், சமயக் குழுக்கள் எல்லாம், அவரது பொன்னுரையால் பொலிவு பெற்றதை மறக்கவியலாது. தமிழும் தமிழரும் அவரது கருத்தோடையில் திளைத்து மறுமலர்ச்சி எய்தியுள்ளதையும் நாமறிவோம். அத்தகு பெரியாரின் உரை ஒவ்வொன்றும். நிகழ்ந்தபின் – தொகுக்கப்பட்டு அச்சியற்றப் பெற்றிருத்தல் வேண்டும். அதனால்,…
பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கா புக்க காதை : பூங்கொடி அழுகை
(பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை – தொடர்ச்சி) 3. பூங்கா புக்க காதை பூங்கொடி அழுகை தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும் பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும் ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம்; 5 மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக் கடமை யாற்றுழிக் கைதவ மாங்கரால் பெற் றோ ரீங்குப் பட்டவெந் துயரால் உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது; 10 கண்ணீ…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 814-821– தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 822-830 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 822. வித்தாரகவி – அகலகவி ஆசுமுதல் நாற்கவியும் என்றது ஆசுகவி, மதுரகவி, அதிரகவி, வித்தாரகவி என்று சொல்லப்பட்ட நான்கு…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 14 : முதிர்பருவம்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என்சுயசரிதை’ 13 : வழக்குரைஞராகவேலைபார்த்தது 2/2 – தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 7. முதிர் பருவம் நான் எனது 51-ஆவது வயதில் சிறுவழக்கு நீதிமன்ற நீதிபியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 55 வயதானவுடன் அவ் வயதிற்குமேல் அரசாங்க உத்தியோகத்திலிருந்து விலக வேண்டும் என்னும் நியமனப்படி அவ் வேலையிலிருந்து! விலகினேன். இதனிடையே சில மாதங்கள் முதன்மை மாநில நடுவராக(C.P.M.) வேலை பார்த்தேன். மேற்கண்டபடி நீதிபதியாக இருந்தகாலத்தின் சில வியவகாரங்களை இங்கு எழுதுகிறேன். நான் நீதிபதியாக முதல் நாள் உட்கார்ந்தபோது வழக்குரைஞர்களின் தரப்பாக காலஞ்சென்ற சீமான்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 52 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 51 : அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 1/2 – தொடர்ச்சி) அத்தியாயம் 28. பாடம் கேட்கத் தொடங்கியது 2/2 “தழைகள் விரவியுள்ள பசுமையான சோலையில் இருக்கும் சிவப்பாகிய மாணிக்கத்தைப் பார்த்த கரடியானது, அதனைத் தீயென்று எண்ணிப் பயந்து வேறு காட்டுக்குச் செல்ல, அங்கே இரவில் அக்காடு சோதிமரம் நிறைந்தமையால் நெருப்புப்போலப் பிரகாசிக்க அதைக் கண்டு, இந்த நெருப்பு நம்மை விடாதுபோல் இருக்கின்றதேயென்று எண்ணி மனத்துள்ளே துயரத்தையடையும்; அறிவில்லாதவர்கள் எங்கே போனாலும் சுகமடையமாட்டார்கள்” என்பது இதன் பொருள். பிள்ளையவர்கள்…
தமிழ் வளர்த்த நகரங்கள் 5. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 2/2
(தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2 -தொடர்ச்சி) அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தொடர்ச்சி மதுரையில் கடைச்சங்கம் இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 53 : அத்தியாயம் 11. தமிழ் மறுமலர்ச்சி 3/3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 52 : அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 2/3 தொடர்ச்சி) பழந்தமிழ் அத்தியாயம் 11 தமிழ் மறுமலர்ச்சி 3/3 மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று பழமையைப்பற்றி அறிவதேயாகும். மக்களால் அறிய இயலும்; மாக்களால் அறிய இயலாது (It was observed by that remarkable twelth-Century Chronicler, Henry of Huntington that an interest in his past was one of the distinguishing characteristics of man as compared with the…
