இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 36: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 36 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்- தொடர்ச்சி இன்றுள்ள இந்திய மொழிகளுள் ஆரியம் ஒழிந்த பிறவெல்லாம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இலக்கியங்களைப் பெற்றுள்ளன. வட இந்திய மொழிகள் எனப்படுவன அசாம் மொழி, வங்காள மொழி, குசராத்தி மொழி, காசுமீரி மொழி, இந்தி மொழி, மராத்தி மொழி, ஒரியா மொழி, பஞ்சாபி மொழி, உருது மொழி என ஒன்பதாம். அசாம் மொழியில் இலக்கியம் என்று கூறத்தக்கதாய்த் தோன்றியது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான். …
தமிழ்நாடும் மொழியும் 36: செந்தமிழும் கொடுந்தமிழும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 35: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2. செந்தமிழும் கொடுந்தமிழும் செந்தமிழ் என்றால் என்ன? கொடுந்தமிழ் என்றால் என்ன? அவைவழங்கும் நாடுகள் யாவை? தமிழை இவ்வாறு பிரிப்பது முறையா? முதலில் யார் இப்பிரிவினைக் குறித்தது? இதுபற்றி அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்? என்பனவற்றை அடுத்து ஆராய்வோம். இன்று நின்று நிலவும் தமிழ் நூற்களில் தொன்மையான நூலெது? தொல்காப்பியம் என்க. அதிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற பிரிவு காணப்படுகிறதா? இல்லை. ஆனால் முதன் முதலில் இப்பிரிவு நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகிறது. “செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியில்”…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 1
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5 தொடர்ச்சி) களம் : 5 காட்சி : 1 நாற்சந்தியில் பொதுமக்கள் அறுசீர் விருத்தம் முதியோன் 1 : மண்ணாள் வேந்தன் குலக்கொடிக்கு மறவா வண்ணம் யாப்புரைக்க எண்ணி யழைத்தார் சூதாக இளமைப் பருவந் தோதாக பெண்ணாள் கவியின் தமிழாலே பிணையல் கொண்டாள் அன்பாலே நண்ணும் அவையில் இற்றைநாள் நல்ல முடிவைக் காண்குவமோ முதியோன் 2:…
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர் சேதுப்பிள்ளை 3/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 4/5 ஆய்வு நூல்கள்நெல்லையில் வழக்கறிஞராக இருந்தபோதே இவரது ஆய்வுப்பணி முகிழ்ந்துவிட்டது. முதன்முதலில் 1926ஆம் ஆண்டில் திருக்குறளை ஆராய்ந்து ‘திருவள்ளுவர் நூல் நயம்’ என்ற நூலை வெளியிட்டார். இந்நூலின் மேன்மையினையும், ஆசிரியரின் ஆய்வுத் திறனின் மாண்பினையும் திரு. கா. சு. பிள்ளை அவர்கள், “உலகமெலாம் உய்வான் பொதுமறை வகுத்த ஆசிரியர் திருவள்ளுவனாரது அளப்பரிய மாண் பினைப் பாவலரும் நாவலரும் கற்றோரும் மற்றோரும் இந்நாள்வரை பொதுவகையாற் பலபடப் பாராட்டிச் சீராட்டிப் போந்தனர். ஆசிரியரது நூலின் பிண்டப்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 -694 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர் மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 33
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 32 தொடர்ச்சி) அத்தியாயம் 19தருமவானும் உலோபியும் கார்குடி சென்றது கார்குடிக்குப் போவதில் எனக்கிருந்த வேகத்தை அறிந்து என் தந்தையார் ஒரு நல்ல நாளில் என்னையும் என் தாயாரையும் அழைத்துக்கொண்டு அவ்வூரை அடைந்தார். நாங்கள் வருவோ மென்பதை முன்னமே கத்தூரி ஐயங்கார் மூலம் அறிந்திருந்த அவ்வூர் சிரீவைணவர்கள் எங்களை உபசரித்து எங்கள் வாசத்துக்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். அங்கே சிரீநிவாசையங்கார் என்ற ஒரு செல்வர் வீட்டில் நாங்கள் சாகை வைத்துக்கொண்டோம். அக்கிரகாரத்தாரிடமிருந்து உணவுப் பொருள்கள் மிகுதியாக வந்தன. அங்கிருந்த சிரீ…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31- குறுநில மன்னர்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 30. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 31 குறுநில மன்னர் பாரி தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர். பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது. கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான். அவ்வள்ளலுக்குரிய…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 35: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 34 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 35 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் – தொடர்ச்சி பத்து வகைக் குற்றங்கள்பற்றிக் கூறும் நூற்பாவும் முப்பத்திரண்டு உத்திவகைகளைப்பற்றிக் கூறும் நூற்பாவும் இடைச்செருகல் வகையைச் சேர்ந்தன என்பது தெள்ளிதின் அறியக்கூடும். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (தொல்.பொருள்-92) எனும் களவியல் முதல் நூற்பாவில் மறையோர் தேஎத்து…
தமிழ்நாடும் மொழியும் 35: 2.1.தமிழின் தொன்மையும் சிறப்பும் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 34: தமிழின்தொன்மையும்சிறப்பும் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தொடர்ச்சி அறிஞர் கால்டுவெலும் தமிழின் தொன்மையையும் சிறப்பையும் பற்றிப் பின்வருமாறு எழுதிஉள்ளார். ‘தமிழ் மொழி பண்டையது; நலம் சிறந்தது; உயர் நிலையிலுள்ளது; இதைப் போன்ற திராவிட மொழி வேறு எதுவும் இல்லை‘. தமிழ் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதற்கு அவர் பின்வரும் ஆறு சான்றுகளைக் காட்டுகின்றார். 1.தமிழில் நூல் வழக்கு நடைக்கும் உலக வழக்கு நடைக்கும் வேற்றுமை அதிக அளவிற்கு உள்ளது. நூல் வழக்கு நடையில் வடமொழிக் கலப்பு அருகிக்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 5
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4 தொடர்ச்சி) களம் : 4 காட்சி : 5 கவிஞனும், இளவரசியும் காதற்பூங்காவில் உலவுகின்றனர். இறுதிக்கட்டத்தில் மன்னன் மறைந்திருந்து காணுகிறான். இசைப்பாடல் அவன் : வானத்து முழுநிலா வஞ்சியுன் பால்வடியும் தாமரை முகம் நாணி தயங்குதடி வான்முகிலில் நெஞ்சையே கருப்பாக்கி நிலவரை போட்டொளிக்கும் கருப்புப் பணக்காரர் கனவில் பிதற்றுதலாய் வஞ்சியே என்மனது வாட்டுந் துயராலே பஞ்சினும் மெலிதாகிப் பதைத்துப் …
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 2/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 3/5 மேடைத் தமிழ் வளர்த்த மேன்மையாளர் தம் ஆராய்ச்சித் திறத்தாலும், எழுத்தாற்றலாலும் தமிழ் ஆற்றலை வளர்த்ததைப் போன்றே மேடைப் பேச்சால் தமிழ் உணர்ச்சியையும் தமிழ் அறிவையும் பெருக்கிய பெருமை உடையவர் இரா.பி.சே. இவர் ஆற்றிய பொழிவுகள் இவரைத் தலைசிறந்த மேடைப் பேச்சாளராகக் காட்டுகின்றன.முனைவர்மு.வ. அவர்கள் ‘தமிழ் இலக்கிய அரங்கில் மாறுதல் செய்தவர் இரா.பி.சே.’ என்று போற்றுகின்றார்.“தமிழ் இலக்கிய அரங்கிலே மாறுதல் செய்தார் சேதுப்பிள்ளை. சென்னையிலே இலக்கியக் கூட்டங்களானால் 50 பேர் வந்து கொண்டிருந்தனர். தம்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687
(தமிழ்ச்சொல்லாக்கம் 677-682 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 683. Carbonic Acid gas — நச்சுக் காற்று நாமும் ஏனைச் சிற்றுயிர்களும் உட்கொள்ளும் உயிர்க்காற்று உள்ளே சென்றவுடன் அழுக்காகிப் பின் வெளிப்பட்டு விடுகின்றது. அப்போது அது நச்சுக் காற்றாய் (Carbonic Acid gas) மாறி விடும். இந்நச்சுக் காற்றையே திரும்பவும் நாம் உட்கொள்வமாயின் உடனே இறக்க வேண்டுவதுதான். நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 53 நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை…
