உ.வே.சா.வின் என் சரித்திரம் 32
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 31 தொடர்ச்சி) கத்தூரி ஐயங்கார் வருகை நான் இவ்வாறு குன்னத்தில் இருக்கும்போது சிரீ வைணவர் ஒருவரது வீட்டில் ஒரு கல்யாணம் நடந்தது. அதற்காக அவ்வூரின் வடக்கேயுள்ள கார்குடி என்னும் சிற்றூரிலிருந்து அந்த வீட்டினருக்குப் பந்துக்களாகிய சிலர் வந்தனர். அவர்களில் கத்தூரி ஐயங்காரென்பவர் ஒருவர். அவர் சிதம்பரம் பிள்ளைக்குப் பழக்கமானவர். சிதம்பரம் பிள்ளை என்னிடம் கத்தூரி ஐயங்காரைப் பற்றி “அவர் சிறந்த தமிழ் வித்துவான். இந்தப் பக்கங்களில் அவரைப் போன்றவர் ஒருவரும் இல்லை. கம்பராமாயணத்திலும் மற்ற நூல்களிலும் நல்ல பழக்கமுடையவர். நன்றாகப்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 – குலமும் கோவும்
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 29. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):30 4. குலமும் கோவும் தொடர்ச்சி சாமந்தர் இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின் சிதைவாகும். இராசேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம் என்னும் ஊரும் அம் மன்னனால் உண்டாக்கப்பட்டதே…
தமிழ்நாடும் மொழியும் 34: 2. தமிழ் மொழி – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – தொடர்ச்சி) 2.1. தமிழின் தொன்மையும் சிறப்பும் தோற்றுவாய் பண்டுதொட்டு நந்தமிழ் மக்கள் பேசிவரும் மொழி அமிழ்தினுமினிய தமிழ்மொழியாகும். இன்று இரண்டரைக் கோடி மக்களால் இப் பைந்தமிழ் தாய்மொழியாகப் பேசப்பட்டு வருகிறது. ஆழிசூழ் இப்பூழியில் மக்கள் முதல் முதலாகப் பேசி இருக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளோ, ஆயிரம் ஆண்டுகளோ சென்ற பின்புதான் மக்கள் பேசியிருக்க வேண்டும்; மொழியும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் மொழி கடவுளால் உண்டாக்கப்பட்டதென்று நம் முன்னோர் முதலில் எண்ணினர். “வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளிஅதற்கு இணையாகத் தமிழ்…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 4
(பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 தொடர்ச்சி) அரசன் அமர்ந்திருக்க – தோழியர் வருகின்றனர். களம் : 4 காட்சி : 4 பஃறொடை வெண்பா அல்லி : குடிமக்கள் போற்றும் முடிவேந்து வாழ்க அடிபணிவார் காக்கும் அருள்வேந்து வாழிய நாட்டின் ஒளிவிளக்காம் நங்கை இளவரசி ஏட்டி லெழுதவொணா இன்பமுடன் வாழியவே அரசன் : மங்கையீர் நீங்கள் மதிக்குந் தலைவிதான் பங்கமில் யாப்பைப்…
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 – – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(சொல்லின்செல்வர்சேதுப்பிள்ளை 1/5 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 2/5 வள்ளுவரிடம் ஈடுபட்ட இவர்தம் உள்ளம் கம்பனிடம் செல்லுமாறு திசைமாற்றியவர் சுப்பையா(முதலியார்) அவர்கள் ஆவர். கம்பனில் திளைத்தபின் இவருடைய ஆர்வம் கம்பன் கவி நலத்தை வெளிப்படுத்துவதில் முனைந்தது. தமிழுக்குக், கதியான கம்பரையும், வள்ளுவரையும் தெளிந்தவரின் உள்ளம் பாரதியாரின் பாநலத்திலும் ஈடுபட்டது. பாரதியின் கவிதையில் திளைத்ததன் பயனாகச் செந்தமிழ்நாடு, முப்பெருங்கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து முதலிய கட்டுரைகள் முகிழ்த்தன. பாரதியார் கண்ட புலவர்களில் இளங்கோவடிகளும் ஒரு சிறந்த புலவர் ஆதலின்,…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682
(தமிழ்ச்சொல்லாக்கம் 671-676 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 677. Food Machine – உணவுப் பொறி உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும். நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 55 நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை ★ 678. தயிலசத்து – பசையுடைப் பொருள்கள் அழலுண் பொருள்கள்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 31
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 30 தொடர்ச்சி) சிதம்பரம் பிள்ளைக்கு அவர்பால் கோபம் உண்டாயினும், “தமிழின் பெயரைச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறானே; இவ்வளவு பேர்களையும் காப்பாற்ற வேண்டும்?” என்றும், அவர்களுக்கு ஒருவேளை உணவுக்காவது உதவ வேண்டுமென்றும் எண்ணி மூன்று உரூபாய் கொடுத்தார். அப்பொழுது புலவருக்கு வந்த கோபத்தைப் பார்த்தபோது அங்கு நின்ற பலர், “ஐயோ, இவர் சிதம்பரம் பிள்ளையின் மேல் அறம் வைத்துப் பாடிவிடுவாரோ’ என்ற பயத்தாலே கலக்கமடைந்தனர். “நான் பிச்சை எடுக்கவா வந்தேன்? இராசாங்கத்து வித்துவானாகிய என் கௌரவத்தை நீங்கள் அறிந்ததாகத் தெரியவில்லையே” என்று அவர்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 28. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):29 குலமும் கோவும் தொடர்ச்சி கங்கைகொண்ட சோழன் இராசேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.103 கடாரம் கொண்டான் கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இாசேந்திரன். கப்பற்படை கொண்டு காழகம் என்னும் கடார நாட்டை இம் மன்னன் வென்று, இவ் விருதுப் பெயர் பூண்டான். தஞ்சை நாட்டு மாயவரம்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 33 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் ஒரு மொழியின் பழமையை அம் மொழியின் சொற்களே அறிவிக்கும். தமிழ் மொழியின் பழமையைத் தமிழ்ச்சொற்களே அறிவிக்கின்றன. சொற்கள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் இடம்பெற்று நிலைத்திருக்குமேல் அவை தம் பழமையை அறிவிக்க வல்லன. தமிழ்மொழிச் சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் வெளிநாட்டார் வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. அங்ஙனம் இடம்பெற்று நிலைத்துள்ள சொற்கள் தமிழின் பழமையை உணர்த்த வல்லனவாய் உள்ளன. அறிஞர் காலுடுவல் அவர்கள் இத் துறையில் ஆராய்ந்து பல தமிழ்ச்சொற்கள் மேலை நாட்டு…
தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி) 9. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து…
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி : அணங்கே அல்லி அறியாயோ அரசன் மகளை உணராயோ இணங்கி நாமும் ஏற்றிட்டோம் இளையாள் காவல் பூண்டிட்டோம் சுணக்கம் அதிலே நேர்ந்ததுவோ சூழ்ச்சி முற்றும் அழிந்ததுவோ பிணக்கம் நம்மில் வேண்டாது பிழையைத் தடுத்தல் வேண்டுமன்றோ அல்லி : நமது காவல் …
சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 தோற்றுவாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்;…
