ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள், நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால், அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே, செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை? பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…
கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில் கலைஞர் கருணாநிதியால் கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக் கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? “தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. கட்சிப் பதவிக்கு யார் வர வேண்டும் என்பதைப் பொதுக் குழு, செயற்குழுதான் முடிவு செய்யும்’ என்பதல்லவா கலைஞர் கருணாநிதியின் அழுத்தமான பேச்சு. எனினும் தி.மு.க. பொருளாளராக…
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால், பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களும் அறிந்தே தவறு செய்பவர்களே! அதிமுக தலைவியின் செயலொன்று ஊடகங்களாலும் மக்களாலும் அங்கதமாகவும் கேலியாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறப்பட்டாலும்…
தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது. எடுத்துக்காட்டிற்கு ஒன்று:- தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…
முதல்வர் நாற்காலிமீதுள்ள விருப்பம் தமிழ்மீது இல்லையே! – இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் நாற்காலிமீது விருப்பம் உள்ளவர்களுக்குத் தமிழ்மீது விருப்பம் இல்லையே! நிலையான(நிரந்தர) முதல்வர் என்று ஒருவர்! அடுத்தவாரம் முதல் முதல்வர் என்று சிலர் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வராக விழைவோரின் தமிழ் உணர்வு எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளமாக அவர்களின் வேட்பு உறுதிப் பத்திரத்தைப் பார்த்தோம். இன்றைய முதல்வர் தன் வேட்புறுதியை ஆங்கிலத்தில் அளித்துள்ளார். ஆங்கிலத்தில்தான் கையொப்பம் இட்டுள்ளார். அரசின் பணியாளர்கள் தமிழில் கையொப்படமிட வேண்டும் என்று ஓர் ஆணை உள்ளது. இருப்பினும் ஏறத்தாழ 14 ஆண்டுகள் அரசை வழிநடத்தியும் கையொப்பம் …
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200: இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 176-200 செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 24. பெரு மிழலைக் குறும்ப நாயனார் புராணம் 8.2 சில பகல் கடந்து சென்று செந்தமிழ்த் திருநாடு எய்தி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் : 25. காரைக்கால் அம்மையார் புராணம் : 43.1 அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து…
காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175: இலக்குவனார் திருவள்ளுவன்
(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150 தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 151-175 செய்யா நின்றே எல்லாச் செந்தமிழ் மாலையும் பாடி – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 325.2 ஆர்வம் உறப் பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ்ச் சொல் மலரால் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 326.3 மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் – பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22….
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 தொடர்ச்சி) 2/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 2/2 3.தொகுதிச் சார்பாளரைத் திரும்ப அனுப்பும் முறை ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பிற வகை மக்கள் சார்பாளர் சரியாகச் செயல்படாதபொழுது அவரைத் திருப்பியனுப்பும் உரிமை மக்களுக்கு வேண்டும் என்கின்றனர். ஒருவரை நாம் தேர்ந்தெடுக்கும் பொழுதே பதவிக்காலமாகிய ஐந்தாண்டு முழுமையும் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்று ஆராய்ந்துதான்…
தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 – இலக்குவனார் திருவள்ளுவன்
1/2 தேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல! 1/2 உலக நாடுகளில் பெரிய மக்களாட்சி அமைப்பு கொண்ட நாடு இந்திய ஒன்றியம். இங்குள்ள தேர்தல் முறைகளில் மாற்றம் வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் இங்குள்ள தேர்தல் முறை சிறந்த ஒன்றேயாகும்.நாம் கையாளும் முறையால் சில தவறுகள் நேர்கின்றன. இதற்கு நாம் சரியான முறையில் கையாள வேண்டுமே தவிர, இந்த முறையையே மாற்ற வேண்டும் என்று எண்ணுவது தவறாகும். சீர்திருத்தம் என எண்ணிக் கொள்வோர்…
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது. எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…
மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு! புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள்…
தி.மு.க.வின்மீதான கசப்பு குறையவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
திமுகவின்மீதான கசப்பு குறையவில்லை! மிகுதியான மன்பதை நலன் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்திய முதல்வர்களில் முதலாமவர் என்றால் கலைஞர் கருணாநிதிதான் இடம் பிடிப்பார். கடந்த தலைமுறையைச் சேர்ந்த தலைவர் எவரேனும் தமிழ்ப்பற்றுடன் எந்தக் கட்சியிலேனும் இருந்தார் எனில் அவர் கலைஞர் கருணாநிதியின் பேச்சாலோ எழுத்தாலோ கவரப்பட்டிருப்பார். கட்டியணைக்க வேண்டிய நேரத்தில் கட்டியணைத்தும் அணைத்து வெட்டிவிட வேண்டிய நேரத்தில் வெட்டியணைத்தும்(அழித்தும்)விடும் வல்லமையும் அவருக்கு மிகுதியாகவே உண்டு. உலக அளவில் மிகுதியான படைப்புகளை வழங்கியுள்ள முதல் அரசியல் தலைவரும் அவர்தான். என்றாலும் மக்கள்திலகம் ம.கோ.இரா எனப்படும் எம்ஞ்சியார் உருவாக்கிய…
