சனாதனம்: உதயநிதிக்கு நன்றி!- இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம்: உதயநிதிக்கு நன்றி! உதயநிதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது பா.ச.க.தானே! செல்லாக்காசாகப் போகும் பாசகவைச் செல்லுபடியாக்க வழி வகுத்ததால் பா.ச.க.தானே நன்றி சொல்ல வேண்டும் என்கிறீர்களா? மறுபுறம், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகத் தமிழ்நாட்டில் இருந்த உதயநிதி தாலின் இன்றைக்கு இந்தியாவில் பேசு பொருளாக ஆகி உள்ளார். அதற்காகப் பா.ச.க.விற்கு உதயநிதிதானே நன்றி சொல்ல வேண்டும் என எண்ணுகிறீர்களா? இரண்டும் உண்மைதான். ஆனால், சனாதனம் என்பது குறித்து இந்தியா முழுவதும் பேசும்படிச் செய்ததற்கும் உலகின் கவனத்தைத் திருப்பியதற்கும் தமிழுலகும் அறவாணர்களும் உதயநிதிக்கு நன்றி…
ஆளுமையர் உரை 61,62 & 63 : இணைய அரங்கம்: 27.08.2023
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்- 416) தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 61,62 & 63 : இணைய அரங்கம்: நிகழ்ச்சி நாள்: ஆவணி 10, 2054 /27.08.2023 ஞாயிறு தமிழ்நாட்டு நேரம் காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும்…
உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021 ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை. திருவள்ளுவர் வாழ்த்து வரவேற்புரை ஆய்வாளர்கள் அரங்கம் பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள் 2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள் திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம் 3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள் அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை சிறப்பு ஆய்வுரைகள் புனித நூல்…
கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்தரங்கத்தினருக்குக் காலமறிதலும் திட்டமிடலும் தேவை! யாராக இருந்தாலும் திட்டமிட்டுச் செயலாற்றத் தெரியவேண்டும்; காலமறிந்து பணியாற்றத் தெரிய வேண்டும். இருப்பினும் மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துநருக்கு மிகவும் இன்றியமையாதனவாக இவை உள்ளன. அவற்றில் பங்கேற்குநருக்கு அவையறிதலும் தேவை. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். என்கிறார் திருவள்ளுவர்(திருக்குறள் 640) ஆளுமையில் சிறந்து விளங்க விழைவோர் திருவள்ளுவா் கூறும் வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, காலமறிதல் முதலியவற்றை நன்கறிந்து செயலாற்றுநராக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என ஆர்வத்துடன் இருப்பவர்கள்…
இந்திய விடுதலை நாள் உரையரங்கம் : “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?”
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள் – 411) தமிழ்க் காப்புக் கழகம் மன்னும் இமயமலை எங்கள் மலையே ! மாநிலமீததுபோல் பிறிதில்லையே ! இந்திய விடுதலை நாள் உரையரங்கம் “விடுதலையானது இந்தியா! அடிமையானது தமிழ்நாடு?” நாள் : ஆடி 28, 2054 ஞாயிறு 13.08.2023 காலை 10.00 வரவேற்புரை : கவிஞர் தமிழ்க்காதலன் தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள் : உரைச்சுடர் செல்வி ந.காருண்யா இளைய ஒளவை முனைவர் தாமரை சிறப்புரை : தமிழ்த்தேசியச் செம்மல்…
தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது
(தோழர் தியாகு எழுதுகிறார் 173: தாய்த் தமிழுக்குச் சந்துரு துணை – அன்றும் இன்றும் – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான என் தெருமுனைக்கூட்ட உரையை (சென்னை கீழ்க் கட்டளை / 22.11.2022) தாழி மடல் 153இல் வெளியிட்டிருந்தேன். உங்களில் சிலராவது சற்றே நீண்ட அந்த உரையைப் படித்திருக்கக் கூடும். அந்த உரையில் காணப்படும் ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி முன்னாள் உயர் நீதிமன்ற நீதியர் திரு அரி பரந்தாமன் தாழிக்கு…
புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன் பொதுவாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிர் நிலையில் செயற்பட்டாலும் இந்தி எதிர்ப்பு, மும்மொழித்திட்ட எதிர்ப்பு, தமிழ் முழக்கம், தமிழ் நலத்திட்டங்கள், ஆட்சித்தமிழை வலியுறுத்தல் போன்றவற்றில் செய்வனவற்றிலும் செய்யத் தவறுவனவற்றிலும் ஒற்றுமை உண்டு. ஆட்சி மாறினாலும் அரசு மாறாது என்பதற்கு இவர்களின் இவை தொடர்பான கொள்கைகளே சான்றாகும். இரு கட்சிகளின் அரசுகளுமே அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வெவ்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன, இப்போதும் ஆளும் அரசு எடுத்து வருகிறது. தமிழ் மக்கள்…
முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 தொடர்ச்சி) முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 27 மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022) “தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து…
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள். இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். 7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச்…
சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே!- இலக்குவனார் திருவள்ளுவன்
சிலைகள், படங்கள் குறித்த உயர்நீதிமன்ற நடவடிக்கை சரியே! அம்பேத்துகார் இ்நதியாவின் மாபெரும் தேசியத்தலைவர் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. எனினும் அவர் வகுப்பார் அவரைச் சாதித்தலைவராகக் காட்சிப்படுத்துவதால் அவர் தொடர்பில் சாதிச் சண்டைகளும் இடம் பெறுகின்றன. எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்திய அவர் வழியில் நீதிமன்றங்களில் எந்தத் தலைவரின் படமும் இடம் பெறக்கூடாது என்ற உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை சரியே. எனினும் இப்போது அரசின் வேண்டுதலை ஏற்று அதனைத் திரும்பப்பெற்றுக்கொண்டதையும் பாராட்டுகிறோம். எனினும் இது குறிததுச் சில செய்திகளை நாம் …
இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 25 – ஆட்சி நிலைக்கத் தமிழை நிலைக்கச் செய்வீர்! – தொடர்ச்சி) இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் தமிழ்நாடு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.தாலின், “தமிழ்நாடு சொல் அல்ல! தமிழரின் உயிர்!” என அருமையாகக் கூறியுள்ளார். பாராட்டுகள்! ஆனால் அந்த உயிர் குற்றுயிரும் குறையுயிருமாக உள்ள வேதனையை யாரும் உணரவில்லை. தமிழரின் வாழ்க்கை மொழியாகத் தமிழில்லை. கல்வி மொழியாகவோ வழிபாட்டு மொழியாகவோ சடங்கு மொழியாகவோ வேலை வாய்ப்பு மொழியாகவோ ஆராய்ச்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ அன்றாடப் பயன்பாட்டு மொழியாகவோ…
